மண்…மக்கள்…தெய்வங்கள்

மண்…மக்கள்…தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 185ரூ. தமிழகத்தில் குல தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குல தெய்வம் உண்டு. இந்த குல தெய்வங்கள், பெரும்பாலும் கிராம தேவதைகளாகத் தான் இருப்பர். கிராம தேவதைகளை வழிபடும் பலருக்கு, அவற்றின் வரலாறு தெரியாது; எதனால், வழிபடுகிறோம் என்றும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், கிராம தேவதைகளான அய்யனார், கருப்பன்,மாடசாமி, மதுரை வீரன், பேச்சி பற்றி, ஆசிரியர் நீலகண்டன் எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். இந்நுாலில், அய்யனார், கருப்பன் […]

Read more

மண் மக்கள் தெய்வங்கள்

மண் மக்கள் தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், விலை 185ரூ. கிராமப்புற மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து இன்றைக்கும் காலம் தவறாமல் கொண்டாடப்படும் கிராம தெய்வ வழிபாட்டை, உளவியல் பூர்வமாக இந்த நூல் அணுகி இருக்கிறது. இருளர்கள், கோத்தர்கள், பளியர்கள், காடர்கள் போன்ற தமிழகப் பழங்குடி மக்களின் வழிபாடுகள், திருநங்கைகளின் மாதா வழிபாடு, திருவள்ளுவருக்கு அருகே 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் அபூர்வமான வழிபாடு ஆகியவை பற்றியும் இந்த நூலில் விரிவான தகவல்கள் உள்ளன. சில கோவில்களில் நடைபெற்ற அமானுஷ்யமான சம்பவங்கள் […]

Read more

அந்தர மனிதர்கள்

அந்தர மனிதர்கள், வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம், பக்.112, விலை 105ரூ. பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாக கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது. முகம் தெரியாத யாரோ ஒருவரின் விந்தணுவை சுமக்கும் பெண் முதல், ஆழ்கடலுக்குள் சென்று பாசி பறிக்கும் நபர் வரை, அனைவரையும், பசி துரத்துகிறது. அதைதான், இந்நுால் பதிவு செய்திருக்கிறது. நன்றி: தினமலர், 12/1/2018

Read more

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. ராஜராஜ சோழனை விட, அதிக வெற்றிகளை குவித்தவன், அவன் மகன் ராஜேந்திர சோழன். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என, பெருமையோடு அழைக்கப்பட்டவனின் வரலாற்றை தெளிவுபட விவரிக்கிறது இந்த நூல். ராஜேந்திர நோழன் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவிலை கட்டிய சிற்பி, குணவன். ஆட்சி நிர்வாகத்திற்காக, தன் நாட்டை, ஒன்பது மண்டலங்களாக பிரித்தார். இலங்கை, மும்முடி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது உள்ளிட்ட, ஏராளமான வரலாற்று தகவல்கள், […]

Read more

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 150ரூ. இந்திய மன்னர்களில் எவரும் செய்யாத சாதனையாக, தெற்கு ஆசியாவின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த மாமன்னர் ராஜேந்திரன் பற்றிய முழுமையான தகவல்கள், சுவையான நாவல் போல விறுவிறுப்புடன் ஆக்கித் தரப்பட்டுள்ளது. சோழர்களின் வரலாறு, மன்னர் ராஜேந்திரன் ஆட்சித் திறன், அவரது கப்பல் படை சாகசங்கள், இலங்கை மன்னன் மகிந்தனை போரில் வென்று கைதியாகக் கொண்டுவந்தது, கங்கை கொண்ட சோழீச்வரம் கோவில் எழுப்பப்பட்ட விதம், அவரது இறுதிக் காலம் எப்படி […]

Read more

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி, வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-0.html வழிகாட்டும் சாதனையாளர்களின் வெற்றிக்கதைகள் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஏராளமான இளைஞர்கள் வெற்று அரட்டைகளில் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, சில இளைஞர்கள் இணையத்தையே ஆக்கபூர்வமான வணிகத்தலமாக மாற்றி சாதித்திருக்கிறார்கள். இவர்களது வெற்றியில் பலருக்கான வெளிச்சம் இருக்கிறது. என்னென்ன இடர்பாடுகள் குறுக்கே நின்றன? அவற்றை எப்படியெல்லாம் கடந்தார்கள்? முழுமையாக தங்கள் கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அனுபவங்கள் பலரது தயக்க முடிச்சுகளை அவிழ்க்கும். புதிய சிந்தனைகளை […]

Read more

அறிவுரைகள் ஜாக்கிரதை

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே […]

Read more

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே

என்னுயிர் இந்திய இராணுவத்திற்கே, எஸ்.சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. படித்து பட்டம் பெற்று அரசு சார்ந்த உயர் பணியில் சேராமல் நாட்டைக் காக்கும் எல்லைப் பாதுகாப்புப்படையில் சேர்ந்த தியாக உணர்வை வெளிப்படுத்தும் சிறு நாவல்.   —-   கர்நாடக ருசி, வெ. நீலகண்டன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 75ரூ. 29 கர்நாடக மாநில வட்டார உணவு வகைகள் […]

Read more

முதல் முகவரி

முதல் முகவரி, வெ. நீலகண்டன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 140ரூ. வாழ்வில் சிகரத்தை எட்டிய பலர், முறையாகச் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி அந்த உயரத்தை எட்டவில்லை. தங்களுக்கான படிக்கட்டுகளை தாங்களே செதுக்கித்தான் உச்சிக்குப் போயிருக்கறிர்கள். நம்பிக்கை மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு, புத்திசாலித்தனமான உழைப்பை மட்டுமே தோழனாக்கிக்கொண்டு தங்கள் கனவுகளை நனவாக்கியிருக்கிறார்கள். எண்ணற்றோருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள். அப்படி சென்னைக்கு கனவுகளை மட்டும் சுமந்துவந்து அவற்றை நனவாக்கிக் காட்டியவர்களின் வாக்குமூலத் தொகுப்பு இது. சாதனையாளர்களின் முதல் […]

Read more