பூர்வா

பூர்வா (பன்னிரு ஆழ்வார்களின் கதை), லக்ஷ்மி தேவ்நாத், தமிழில் பத்மா நாராயணன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 295ரூ. பூர்வாவுக்கு கிடைத்த ஸ்வாமித் தாத்தா! தாத்தா பாட்டிகள் கதை சொன்ன காலத்து அனுபவங்களை அழகாக மீட்டெடுத்துத் தருகிறார் லக்ஷ்மி தேவ்நாத். ஆங்கிலத்தில் வெளியான ‘பூர்வா’ நூலை வெகு நளினமாகத் தமிழாக்கியிருக்கிறார் பத்மா நாராயணன். ‘பூர்வாவை மீண்டும் ஒருமுறை அவர் புதிதாக உருவாக்கியிருக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பாளரை மூல ஆசிரியரே வியப்பது அழகு. எல்லோருக்கும் நன்கு தெரிந்த பன்னிரு ஆழ்வார்களின் திவ்ய சரிதம்தான். எறும்புகள் சாரிசாரியாக ஊர்ந்து […]

Read more

கந்தர்வன் காலடித் தடங்கள்

கந்தர்வன் காலடித் தடங்கள், புலவர் வை. சங்கரலிங்கம், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ. மானுடம் பாடிய கவிஞர்! கவிஞர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்ட கந்தர்வன் சம அளவில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ஒரு கதையை எழுதி முடித்ததும் அதைத் தன் மனைவி, மகள்கள், மருமகன்கள் என்று அனைவரிடம் படிக்கத் தந்து விமர்சனம் பெற்ற பிறகே பத்திரிக்கைக்கு அனுப்புவாராம். எத்தனை பேருக்கு இத்தகைய மனவளமும் நம்பிக்கையும் வாய்க்கும்? ‘மண் பொய் பேசுவதில்லை.மிதிக்கிறோம், மரங்கள் பொய் பேசுவதில்லை.வெட்டுகிறோம், மந்திரி பொய் பேசுகிறார். மாலை போடுகிறோம்’ என்று பாடுவார். […]

Read more

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 70ரூ. உலக நாடுகளின் குப்பைத் தொட்டி!? முன்னெல்லாம் மாட்டுவண்டிகளில் பயணம் செய்த ஆற்று மணலுக்கு இப்போது டிம்பேர் லாரிகளிலும் கப்பல்களிலும் போகும் ‘யோகம்’ வந்துவிட்டது. நிஜம்தான்! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்று மணலின் இலக்கு 2016 ஆம் ஆண்டில் 10.26 லட்சம் டன்னாக உயர்ந்தது என்று இந்த நூலில் எழுதுகிறார் சுற்றச்சூழல் ஆர்வலரான ப. திருமலை. ‘ஆறுகளில் பத்து சென்டிமீட்டர் உயரத்துக்க மணல் படியவேண்டுமானால் தொடர்ந்து ஓராண்டுக்கு நீர் […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. சென்ற ஆண்டு தான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களிலிருந்து 20 புத்தகங்களை மட்டும் எடுத்து விமர்சனமாக எழுதி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார் அழகியசிங்கர். மருத்துவம், கவிதை, கதை என எல்லாமும் இதில் உள்ளன. சாருவின் நூல் பற்றிப் பேசுவதையில் அவர் எழுத்துத் திறனை சிலாகித்தும் அவரின் சில கருத்துகளை நிராகரித்தும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம். எழுத்தாளர்களை கௌரவிக்கும் செயல் இந்நூல் எனலாம். நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

அம்மாவின் கோலம்

அம்மாவின் கோலம், ஜெயதேவன், எழுத்து வெளியீடு, பக். 96, விலை 60ரூ. மரபின் உள் மூச்சை வாங்கி நவினத்துவ மூக்கில் சுவாசிக்கும் இவரது கவிதைகள், வாசிப்புச் சுகம் மிக்கவை. சமூக அக்கறையும் விசாரிப்பும் கலந்தவை. “பாக்கெட்டில் சுரட்டி வைக்கப்பட்டுள்ளது வாழ்க்கை உங்கள் பாக்குத்தூளைப் போல” -போன்ற வரிகள் இயல்பான அசலான சமூக பிம்பத்தைக் காட்டுகின்றன. ஒவ்வொரு கதவுக்குள் திரியும் மிருகத்தின் முதுகில் குத்தப்பட்டுள்ள முத்திரை என்னவோ ‘பெண்கள் ஜாக்கிரதை’ -இப்படியான கவிதைகளுடன் வாசகனை ஏமாற்றாத நூல் இது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள், ம. நித்யானந்தம், மணிவாசகர் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. காசி முதல் ராமேஸ்வரம் வரை 400க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று தரிசித்த அனுபவம் கொண்ட ம. நித்யானந்தம், ‘சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார். வரலாற்றுக் குறிப்புடன் புராணத் தகவலுடன் ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் இந்நூலில் அளித்துள்ளார். கோயில்கள் என்பது நம் கலாசாரத்தின், பண்பாட்டின் பிரதிபலிப்பு. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதை இந்த நூல் ஆணித்தரமாகச் சொல்கிறது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

கவிதைக்குள் அலையும் மனச்சிறகு

கவிதைக்குள் அலையும் மனச்சிறகு, கவிஞர் க. அம்சப்ரியா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 10ரூ. கவிஞர் ச. அம்சப்ரியா பல்வேறு இதழ்களில் கவிதை பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய சிறுதொகுப்பு. இது 24 பக்கங்கள் கொண்ட கையேடு. ‘கவிதைக்குள் அலையும் மனச்சிறகு’ என்ற பெயரில் பல கவிஞர்களின் கவிதைகள் அர்த்தத்தோடு சிலாகிக்கப்பட்டுள்ளது. ராஜ சுந்தராஜன் எழுதிய ‘தழும்புகள்’ என்ற தலைப்பில்… அப்படி ஒரு நிலைமை வரும் என்றால் அக்கணமே வாழோம் என்றிருந்தோம் வந்தது அப்படியும் வாழ்கிறோம் நம்மோடு நாம் காண இத்தென்னைகள் தன் மேனி […]

Read more

அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை வெளியீடு, விலை 200ரூ. அரிதாரம் பூசிக்கொள்ளாத எழுத்து! ருத்ராட்சம் கட்டிக்கொண்டு ஏராளமான பூனைகள் பேனா பிடித்தபடி வளைய வருகிற காலகட்டத்தில் சாரு நிவேதிதா முற்றிலும் வித்தியாசமானவர். எதையும் வெளிப்படையாகப் பேசுகிறவர். எப்படியோ இவரைப் பற்றி ஒரு பிம்பம் அல்லது மாயை படிந்துவிட்டது. ‘மன்னியுங்கள் எனக்கு இருக்கும் பிம்பத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாத ஆள் நான். பழகினால் தெரிந்துகொள்வீர்கள்’ என்கிற சாருவைப் புரிந்து கொள்ளவும் பழகவும் அண்மையில் வெளியாகியுள்ள ‘அறம் பொருள் இன்பம்’ என்கிற நூலே போதுமானது. இவருடைய […]

Read more

பரிசலில் ஒரு பயணம்

பரிசலில் ஒரு பயணம், ஜி. மீனாட்சி, சாந்தி நூலகம், பக். 96, விலை 80ரூ. வீரிய விதைகள்! எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜி. மீனாட்சியின் இன்னொரு பயணம் சிறுவர் கதைகள் அடங்கிய ‘பரிசலில் ஒரு பயணம்’ சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பும் கவன ஈர்ப்பும் குறைந்து வரும் இச்சூழலில், இது நல்ல முயற்சி எனலாம். விளையும் பயிரை முளையிலே திருத்தி ஐம்பதில் புலம்பாமல் ஐந்திலேயே செதுக்கி… கதை ஒரு நல்ல உளிதான். நூலின் முன்னுரையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் “இந்நூலின் மூலம் தனது சமூகக் கடமையைத் திறம்படச் […]

Read more

நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

நினைவுகள் நிறைந்த வெற்றிடம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 100ரூ. மனக்காயங்களுக்கு மருந்து 12 சிறுகதைகள் அடங்கிய இந்த நினைவுகள் நிறைந்த வெற்றிடம் நூலில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பிரச்னையை அலசுகிறது. குறிப்பாக பதின் பருவத்து குழந்தைகளின் உளப்பூர்வமான சிக்கலை எடுத்துவைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் ஜி. மீனாட்சி. பிறவிப் பெரும்பயன் என்ற கதையில் ஒரு தம்பியின் தியாகத்தையும் அக்காவின் பாசத்தையும் அடி ஆழம்வரை சென்று படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். புதிய பாடம் என்ற கதையில் கிராமத்திலிருந்து கணவனை இழந்து […]

Read more
1 2 3 4 12