கடற்கரை காவியம்

கடற்கரை காவியம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 15, விலை 150ரூ. கடலோரக் காவியம் தமிழ் திரையுலகில் நிலவும் சிக்கல்களையும் அன்னை வேளாங்கன்னி மாதாவின் அருளையும் புதுமைகளையும் சித்திரித்து, சினிமா கலைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, காதல் பிரச்னைகளை அன்னை அருளால் தீர்த்துவைத்து வெற்றியடையச் செய்வதை சித்திரிக்கும் நாவல் இது. நன்றி: குமுதம், 21/12/2016.   —-   எட்டுத் திக்கும் எங்கள் பாட்டு, தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம், பக். 152, விலை 200ரூ. பல்வேறு கலைஞர்களின் கவிதைகள் ஒரு […]

Read more

ரகுநாதம்

ரகுநாதம், தொகுப்பாசிரியர் காவ்யா சண்முக சுந்தரம், காவ்யா, விலை 1100ரூ. எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், மேடைப் பேச்சாளர் என்னும் பன்முகம் கொண்டவர் தொ.மு.சி.ரகுநாதன். அவரது கட்டுரை, கவிதை, நாடகங்களை ‘ரகுநாதம்’ என்ற பெயரில் காவ்யா சண்முக சுந்தரம் நூலாகத் தொகுத்துள்ளார். இதில் 100 கட்டுரைகளும், 2 நாடகங்களும், 56 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இவரது எழுத்துகளில் நாட்டுப்பற்று, விதவை மறுமணம், சாதி மறுப்பு, விடுதலை உணர்வு ஆகியவைகளை வெளிப்படுத்தியுள்ளார். ‘ரகுநாதனின் தமிழ் நடை அழகியது. இனியது. ஜீவன் நிறைந்தது. […]

Read more

சிவனின் உடுக்கை

சிவனின் உடுக்கை, சந்திரசேகர கம்பாரா, தமிழில் இறையடியான், காவ்யா, பக். 324, விலை 300ரூ. கன்னட எழுத்தாளரான சந்திரசேகர கம்பாரா எழுதிய கிராம மாறுதல்களைப் பதிவு செய்யும் நாவல் இது. கிராமத்தில் இயல்பை புராணம் சார்ந்த நாட்டுப்புறக் கதையின் அழகியலோடு சொல்லியிருக்கிறார். பண்ணையார்களின் பகட்டு ஆரவாரத்தால் பண்ணையில் வேலை செய்பவர்கள் சிந்தும் கண்ணீர் வயல் வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் எப்படி தண்ணீராக ஓடுகிறது என்பதை ‘சிவனின் உடுக்கை’ வழி பதிவாகிறது. நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

குளத்தூர் ஜமீன் கதை

குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, விலை 175ரூ. தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப்போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது. பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தார்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக்கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more

சின்னமனூரிலிருந்து சீனாவுக்கு

சின்னமனூரிலிருந்து சீனாவுக்கு, முனைவர் இரா. மனோகரன், காவ்யா, பக். 246, விலை 225ரூ. பயண நூல் ஒன்றை நாட்குறிப்புப் போல் எழுதி புதுமை செய்துள்ளார் முனைவர் இரா.மனோகரன். மஞ்சள் ஆறு பாயும் சீனாவைப் பற்றி தமிழருக்குத் தெரிவிக்கும் நூல் இது. பணி ஓய்வு பெற்றதும் சீனாவுக்குப் போய் நமக்காக அந்தப் பயண வரலாற்றைப் படைத்துத் தந்துள்ளார். நம் வீட்டின் வரவேற்பறையைப் போல் பராமரிக்கப்படும் சீனாவின் பொதுக் கழிப்பிடத்தையும் டாக்சிக்காரர் மீட்டர் கட்டணம் மட்டும் வாங்குவதையும் பார்க்கும்போது நமக்குப் பொறாமையாகத் தான் இருக்கிறது. சீனாவின் பாரம்பரியத்தை […]

Read more

ஊமை அலைகள்

ஊமை அலைகள், ரா.பிரடிசன், காவ்யா, பக். 108, விலை 100ரூ. தமிழக மீனவ மக்களின் வாழ்வியல் யதார்த்தங்கள், இலங்கை கடற்படையால் மீனவர்கள் படும் உயிர் வேதனை, இயற்கைச் சீற்றத்தால் அம்மக்கள் சந்திக்கும் இன்னல்கள் இவைகளே ‘ஊமை அலைகள்’ கவிதைத் தொகுப்பின் பாடுபொருள்களாக நம்மை கவனிக்க வைக்கின்றன. நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

நாகூர் இ.எம்.ஹனீபா

நாகூர் இ.எம்.ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. செ. திவான் பாளையங்கோட்டைவாசி. படிப்பு, எழுத்து, மறுமலர்ச்சி எனத் தம் வாழ்நாளைக் கழித்துக் கெண்டிருப்பவர், அடுத்த தனது 100வது நூலை மலபார் மாப்பிள்ளை புரட்சி – 1921 என்ற பெயரில் அதுவும் 1000 பக்கங்களில் வெளியிட இருக்கிறார். சுஹைனா பதிப்பகம் இவரது சொந்தப் பதிப்பகம் திவானுக்கு ‘தி’வானே எல்லை. ஹனீபா இசை முரசு அல்ஹாஜ். இரவது பாடல்கள் ‘ஹனி’போல் மென்மையன்று, முரசுபோல் ஆரவாரமுடையது. திராவிடமும் தெய்வீகமும்(தீன்) இவரது இரண்டு கண்கள். பொருந்தவில்லையே என்று […]

Read more

கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள்

கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள், முனைவர் பெ. சுப்பிரமணியன், ராம்குமார் பதிப்பகம், விலை 300ரூ. முனைவர் பெ. சுப்பிரமணியன், அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரித் தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாட்டுப்புறவியலில் நாட்டமும் மானிடவியலில் நேசமும் கொண்டவர். இந்நூல் கொங்கு நாட்டுப்புறங்களில் புழக்கத்தில் உள்ள இசைக் கருவிகளைப் பற்றியது. பானைத்தாளத்துடன் தொம்மாங்கும், உடுக்கை ஒலியுடன் கதைப்பாட்டுகளும், கொம்பும் மொடா மேளமும் முழங்கும் விழாக்களும் கொங்கு நாட்டில் பிரபலம். பம்மை, உறுமி, திடும், நகார், தப்பு, பேரிகை, நாகசுரம், சங்கு, சத்தக்குழல், […]

Read more

அமரனின் கவிதாவெளி

அமரனின் கவிதாவெளி, ஓவியா பதிப்பகம், விலை 250ரூ. இது கவிஞர் அமரனின் 400 ஹைக்கூ கவிதைகளின் அழகான தொகுப்பு. பக்கங்கள்தோறும் கவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அத்துடன் ஆங்காங்கே வண்ணவண்ணப் படங்கள் விதவிதமாக, இயல்கருதி, இருப்பினும் இயல்பில் பின்றி, நம் சட்டைகளைப்போல, புத்தக அட்டைகளைப் போல. இவரது கவிதைகள் எளிய உயிர்களின் மீது அன்பையும் இயற்கை நட்பையும் சமூகச் சாடல்களையும் ஆழ்மன்த் தேடல்களையும் கொண்டிருக்கின்றன. அலைகள் ஆர்ப்பரிப்பு கையில் தேநீர் கோப்பையுடன் அமைதியான நான்! இதுதான் அமரன் – அமரத்துவம் பகலில் அலைகளின் முன்பும் இரவில் […]

Read more
1 11 12 13 14 15 22