இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம்

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம், விஸ்வபாரதி, காவ்யா, விலை 180ரூ. குறைந்த செலவில் சிறந்த படங்களை எடுத்தவர் டைரக்டர் கே. சோமு. சம்பூர் ராமாயணம், பாவை விளக்கு, மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம் ஆகியவை, சிவாஜிகணேசன் நடித்து சோமு இயக்கியவை. குறிப்பாக, “மக்களைப் பெற்ற மகராசி” திரைப்பட வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற படம். சிம்மக்குரலில் இயல்பாக பேசி நடித்து வந்த சிவாஜி கணேசன் இப்படத்தில் கொங்கு நாட்டு மக்கள் பேசுகிற பாணியில் பேசி நடித்தார். வட்டார […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. பழந்தமிழர் இலக்கிய வரலாற்றில், பலமுறை பதிவு செய்யப்பட்ட கருத்துகள் ஆயினும், புதுப்பொலிவோடும், இன்றைய நோக்கோடும், நயத்தோடும், இந்த நூலில் கிராமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழரின் உழவும், உணவு முறைகளும், விருந்தோம்பல் பண்பாடும், பசு நேசம், சித்தர் மருத்துவம், விவசாயத்தின் ஏர், கலப்பை, சால், மண்வெட்டி, குதிர், பத்தாயம், எலி பிடிக்கும் கிட்டி ஆகியவையும் விரிவாக்கம் பெறுகின்றன. தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகளும், அதன் வண்ணங்களும் விளக்கப்பட்டு உள்ளன. காந்தி மதுரை […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன. புதிய புதிய பொருட்கள் பயன்பாட்டுக்கு வரும்போது பழைய பொருட்களில் பல காணாமற் போய்விடுகின்றன. எவ்வளவுதான் வாழ்க்கை மாறி வந்தாலும் சில பண்பாட்டு வழிமுறைகள் தொடர்ந்து வருகின்றன. சிறு தெய்வ வழிபாடு, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு, கண்ணேறு கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் இன்றைய வாழவிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழர்களின் அன்றாட வாழ்வில் புழங்கிய பொருட்கள், […]

Read more

சேதிராய நாடார்கள்

சேதிராய நாடார்கள், வெ. செந்திவேலு, அ. இன்பக்கூத்தன், காவ்யா, பக். 229, விலை 220ரூ. தமிழகத்தின் நாடார் சமூகத்தினரை சாணார் என்று குறிப்பிடுவர். அது தவறு என்றும் சான்றான் எனும் தமிழ்ச் சொல்லே பேச்சுவழக்கில் சாணான் என்று வழங்குகிறது என்றும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. கி.பி. 1750இல் பொறிக்கப்பட்ட குலசேகரப்பட்டினம் விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டில் நாடார்களின் ஒரு பிரிவான சேதிராய நடார்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. களக்காடு அருகே உள்ள சேதுராயபுரம் என்ற கிராமத்தில் தற்போது சேதுராய நாடார்கள் வாழ்ந்து வருகிறார்கள். குலசேகரப்பட்டினம் கல்வெட்டில் சேதிராய […]

Read more

பறந்து மறையும் கடல் நாகம்

பறந்து மறையும் கடல் நாகம், ஜெயந்தி சங்கர், காவ்யா, விலை 1000ரூ. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்பியூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ் மூதாதையர் வழிபாடு, பெற்றோரை மதித்துப் பேணிக் காத்தல், ஆண் வாரிசுகளை உருவாக்குதல் போன்ற மூன்று முக்கிய அலகுகளைச் சுற்றி உருவானதே சீனக் கலாசாரம். அத்தகைய சீனக் கலாசாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர் பண்பாட்டுடன் சீனப் பண்பாடு பல வகைகளில் ஒத்துப் போகிறது. இது குறித்தும், சீனப் பெண்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களின் அடிமைத்தனம், சமூக சிக்கல்கள், […]

Read more

பாஸன் நாடகங்கள்

பாஸன் நாடகங்கள், தமிழில் அ, ரேவதி, காவ்யா, பக். 194, விலை 180ரூ. காதலா? கடமையா? பழமையும், பெருமையும் மிக்க செம்மொழி சமஸ்கிருதம். ஜெர்மன் மொழியில் இதன் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கிருந்து ஆங்கிலம் மூலம் உலகெங்கும் உலா வருகிறது. தமிழிலும் சமஸ்கிருத இலக்கியங்கள் மொழிமாற்றம் பெறுகின்றன. ஆனால், தமிழை உயர்த்துவதாக கூறிக்கொண்டு, சமஸ்கிருதத்தை வளரவிடாமல், வரவிடாமல் தடுத்தோர், இன்றும் உள்ளனர். அதையும் மீறி சமஸ்கிருதம் – தமிழ் உறவு வளர்கிறது. இத்தகு மொழிப்பாலத்தில் மகாகவி பாஸன் நாடகங்கள் நான்கும், வெகு அழகாக தமிழில் தற்போது […]

Read more

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம்

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம், இரா. நரேந்திர குமார், காவ்யா, விலை 250ரூ. ஆண்டாள் கவிதைக்கு ஓர் ஆய்வடங்கல் எமிலி டிக்கின்ஸனின் கவிதை வரிகள் இவை. தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா பிறகு அடைத்துவிடுகிறது கதவை. இந்த வரிகளைப் பற்றிக்கொண்டு ஆண்டாளின் அக உலகத்திற்குள் ஒரு வாசகர் பயணிக்க முடியும். கண்ணன் என்னும் கருந்தெய்வத்துடன் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டு, மற்ற உறவுகளைத் துண்டித்துவிட்ட ஆண்டாளை ஒரு முழுமையான கவிதைப் பரப்பில் வைத்துப் பார்க்கிறது, இரா. நரேந்திரகுமாரின் ஆண்டாள் கடவுளைத் தேடிய […]

Read more

பெண்ணியம் அகலமும் ஆழமும்

பெண்ணியம் அகலமும் ஆழமும், பேராசிரியர் இரா. பிரேமா, காவ்யா, விலை 1100ரூ. பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம் சமுதாயத்தில் பரவலாக பரவி வருகிறது. பெண்களை அடிமைத் தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வூட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமாகும். அந்த வகையில் நீண்ட காலம் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் இரா. பிரேமா படைத்துள்ளார். எது பெண்ணியம்? வெளிநாட்டு மற்றும் இந்திய பெண்ணிய கோட்பாளர்கள் பற்றிய குறிப்புகள், இலக்கணம், இலக்கியம் மற்றும் […]

Read more

சேதுபதியின் சேவைக்காரன்

சேதுபதியின் சேவைக்காரன், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ராமநாதபுரம் என்ற சேது சீமையை ஆண்டவர்கள் சேதுபதிகள். அவர்கள் வரலாற்றில் நடந்த போதைக் களமாகக் கொண்டு இந்த நாவலை க.மனோகரன் எழுதியுள்ளார். சடையக்கத்தேவர் காலத்தில் மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் படைகள் ராமநாதபுரத்தைத் தாக்கும்போது நடக்கும் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அதே மதுரையை மைசூர் தளபதி முற்றுகையிட்டபோது, சேதுபதி விஜய ரெகுநாத தேவரின் உதவியை திருமலை நாயக்கரின் நாடினான். அதன் விளைவாக நடந்த மூக்கறுப்பு போர் வரை கதை நீள்கிறது. சேதுபதி மன்னர்கள் மாவீரர்களாகத் […]

Read more

தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 250, விலை 281ரூ. தோழர் தி.க.சி. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன், 2014, மார்ச், 25ம் தேதி மறைந்தார். அவரது நினைவைப் போற்றும்வகையில், பல்வேறு அறிஞர்கள், அஞ்சலி செலுத்தினர். அவற்றை நூலாக்கம் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தில் தொகுப்பாசிரியர், 52 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். நாளிதழ்கள், பேரிதழ்கள், சிற்றிதழ்கள், மின்னிதழ்கள் என்று, அனைத்துவிதமான பத்திரிகைகளிலும், வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த தொகுப்பில் கி.ரா., பொன்னீலன், வண்ணநிலவன், பாவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் தி.க.சி. […]

Read more
1 13 14 15 16 17 22