தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 274, விலை 250ரூ. தி.க.சி. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் வசியப்படுத்தாத, அவரிடம் வசியப்படுத்தாத, அவரிடம் வசப்படாத இலக்கிய உலக ஆளுமைகள், வெகு குறைவு. எழுதத் தொடங்கும் எல்லார் மீதும் அவர் பாராட்டு மழை பொழிந்தார். அந்தப் பாராட்டு மழையை உரமாக்கிக் கொண்டு இலக்கிய உலகில் வாழ்ந்து செழித்தவர்கள் பலர். அவ்வாறு தி.க.சி.யால் உரம் பெற்ற பலரும், அவர் மறைந்துவிட்டார் என்ற உடன், தாமே முன்வந்து தமது நினைவலைகளை எழுத்தில் வடித்திருக்கின்றனர். […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ. தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் […]

Read more

கவி.கா.மு.ஷெரீப் கவிதைகள்

கவி.கா.மு.ஷெரீப் கவிதைகள், காவ்யா, சென்னை, விலை 600ரூ. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சினிமா பாடலாசிரியர், பேரூரையாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கவி.கா.மு.ஷெரீப். அவர் எழுதிய 208 கவிதைகள், ‘மச்சகந்தி’ என்ற குறுங்காவியம், ‘நபியே எங்கள் நாயகமே’ மற்றும் 77 திரைப்பாடல்கள் காண்ட அரும் தொகுப்பு இது. இந்த நூலை ‘காவ்யா’ சண்முக சுந்தரம் தொகுத்துள்ளார். தமிழுக்காவும், தமிழ்நாட்டுக்காகவும் உழைத்தவரும், அரசியல், பத்திரிகை, சினிமா, சீறாப்புராண உரை என பல்வேறு தளங்களில் வெற்றிக்கொடி நாட்டியவருமான கவிஞரின் நூற்றாண்டையொட்டி இந்த நூல் வருவது சிறப்புக்குரியது. நன்றி: […]

Read more

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள்

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 95ரூ. பிரபல எழுத்தாளர்களின், சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் விகடன் பிரசுரம் ஈடுபட்டுள்ளது. இப்போது புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், கு. அழகிரிசாமி, அசாகமித்திரன், சூடாமணி ஆகியோரின் சிறுகதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தன் தொகுதியில், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், பொன்னகரம், சிற்பியின் நகரம், நாசகாரக்கும்பல், நினைவுப்பாதை, காஞ்சனை உள்பட 20 சிறந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. புதுமைப்பித்தன், அழகிரிசாமி தொகுதிகளின் விலை தலா ரூ.130. மற்ற தொகுதிகள் ஒவ்வொன்றின் விலை 95ரூ. சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த கதைகளைப் […]

Read more

விடுதலை வீரர் மருது பாண்டியர்கள்

விடுதலை வீரர் மருது பாண்டியர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, சென்னை, விலை 250ரூ. தமிழகத்தின் சிவகங்கை சீமையிலிருந்து ஆங்கிலேயரை மண்டியிட வைத்த வீர மறவர்கள் மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நாவல். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிள்ளையார் சுழி போட்டவன் பூலித்தேவன், மறவர் நாட்டு மண்டேலா முத்துராமலிங்க சேதுபதி, கட்டபொம்மனோடு சேர்ந்து போரிட்டு களப் பலியானவர் வெள்ளையத்தேவன். களத்தில் கணவனை இழந்த பின்னும் களம் பல கண்டு வெள்ளையரோடு போராடி வெற்றி கொண்டவள் வீர மங்கை வேலு நாச்சியார். இவரது வெற்றிக்கு வாளாகவும், […]

Read more

கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி

கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி, தமிழில் கிருஷ்ண பிரசாத், காவ்யா, சென்னை, பக். 1312, விலை 1300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரனின் தத்துவஞானி உலகப் புகழ் பெற்ற நூல். அவரது பிற நூல்களையும் தமிழுக்கு கொண்டுவரும் ஆர்வத்தால் இந்த நூல் உருவாகியுள்ளது. கலீல் ஜிப்ரனின் பிற படைப்புகளான இதயத்தின் ரகசியங்கள், முறிந்த சிறகுகள், குருவின் குரு, சிந்தனைகளும் தியானங்களும், நெஞ்சின் கண்ணாடி, இயேசு மனிதனின் மைந்தன் ஆகிய ஆறு நூல்களையும் ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளனர். […]

Read more

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள்

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள், காவ்யா, சென்னை, விலை 250ரூ. இந்நூலில் குமரி மாவட்டம் சார்ந்த 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குமரி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்கள் இந்நூலில் குவிந்துகிடக்கின்றன. அவற்றுள் நாகர்கோவிலில் இருந்த அரண்மனைகள், நாகராஜா கோவில், பத்மநாபபுரம், உதயகிரி கோட்டைகள், மாராயன், மகாராசன், குமரி நாடு கன்னியாகுமரி, சமண மதத்தின் பழமை, அனந்த பத்மநாபன், வேளிமலை முதலிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. குமரி நாட்டின் வரலாற்று ஆவணங்களைக் கொண்டதால் இந்நூலை குமரி நாட்டு கருவூலம் என்றே கூறலாம். […]

Read more

நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், பக். 180, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-348-9.html எழுத்தாளர் சூடாமணி, தன் தாயார் ஸ்ரீரங்கநாயகி பெயரில் நிறுவியுள்ள நாவல் திட்டத்தில் பங்குபெற்று, பரிசு பெற்ற நாவல் இது. ஜனகனின் கை, எழுதி எழுதிப் பழகிய கை. வரிக்கு வரி, ஜனகனின் முத்திரை பளிச்சிடுகிறது. நாவலின் கட்டுமானத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஆன்மீக இழைகள் ஓடுவது தனிச்சிறப்பு. ஓம், சகஸ்ரநாமம் ஆகியவற்றின் மேன்மையையும், ஆசிரியர் விளக்குகிறார். ஓம் என்ற வார்த்தையைப் […]

Read more

ம.கோ. களஞ்சியம்

ம.கோ. களஞ்சியம் (பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் படைப்புகள்), உஷா மகாதேவன் பதிப்பாசிரியர், காவ்யா, சென்னை, பக். 816, விலை 800ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-335-7.html ம.கோ. பாலகிருஷ்ண ஐயரின் படைப்புகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார் அவரின் மகன் வழிப்பெயர்த்தி உஷா மகாதேவன். திருச்சி லால்குடியில் 1878இல் பிறந்த ம.கோபாலகிருஷ்ண ஐயர், 49 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும், இலக்கிய வாழ்வாக வாழ்ந்தவர். மதுரை தமிழ்ச் சங்கத்தை பாண்டியத்துரைத் தேவர் தொடங்கும் முன்னரே ம.கோ. மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். வங்கக் […]

Read more

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்தார் பாடல்கள், புதுக்கவிதை வடிவில், கிருஷ்ண பிரசார், காவ்யா, பக். 1354, விலை 1300ரூ. சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையாக இடம்பெற்றள்ள பட்டினத்தார் பாடல்களும், பட்டினத்தாரின் ஏனைய பாடல்களின் தொகுப்பில் உள்ள பாடல்களும், புதுக்கவிதை வடிவில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்ட பட்டினத்தார், தம் பாடலுள் கூறும் அரிய சைவ சித்தாந்த கருத்துகளை, எளிய, இனிய கவிதை வடிவில் இந்நூல் தந்துள்ளது. சித்ததர் என்போர் யாவர், மூடநம்பிக்கைகளை வேரறுத்து, உருவ வழிபாட்டை எள்ளி நகையாடிய இவர்கள், பின் ஏன் பல தலங்களின் இறைவனை […]

Read more
1 15 16 17 18 19 22