பயாஸ்கோப்

பயாஸ்கோப், கிருஷ்ணன் வெங்கடாசலம், சந்தியா பதிப்பகம், விலை 275ரூ. தமிழர்களின் வாழ்வைப் பொறுத்தவரை சினிமா முக்கியப்பகுதி. தான் விரும்பிய தமிழகமும் விரும்பிய 50 திரைப்படங்களின் சுவாரஸ்ய தகவல்களை தொகுத்திருக்கிறார் கிருஷ்ணன் வெங்கடாசலம். ‘சகுந்தலை’யில் ஆரம்பித்து ‘களத்தூர் கண்ணம்மா’ வரை விசாரணையும், பயணமுமாக போகிறார். அந்தந்த சினிமாவின் சிறு குறிப்பு, கதை, படம் தொடர்பான செய்தி, சுவாரஸ்யம் என நிரவி பரந்திருக்கிறது இந்தப் புத்தகம். எண்ணற்ற தகவல்கள். சினிமாவிற்கு வெளியே இருந்து கொண்டு இவ்வளவு தகவல்களைத் தொகுத்தளித்தது பெரிய சாதனை. இப்படங்களின் ஊடாகச் சென்று சந்தோஷப்பட்டவர்களுக்கும், […]

Read more

காற்று மணல் நட்சத்திரங்கள்

காற்று மணல் நட்சத்திரங்கள், அந்த்வான் து செந்த், எக்சு பெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, விலை 190ரூ. ‘குட்டி இளவரசன்’ தந்த எக்சு பெரியை மறக்க முடியாது. அந்த இளவரசன் கேட்ட சின்னஞ்சிறு கேள்விகளுக்கு விடை அறியாமல் விழித்திருந்தது, அருமையான காலம். எக்சு பெரி எப்போதும் மொழி மயக்கத்தில் கட்டுண்டவர் இல்லை. அவரது சுயசரிதை அடிப்டையிலேயே நாவலின் இனிய பயணம் தொடங்குகிறது. விமானங்களின் செயல்பாட்டில் இருந்த, விஞ்ஞானம் சரிவர பொருந்தி வராத காலக்கட்டத்தில் எழுதியிருக்கிறார். வானத்திலிருந்து பார்த்தால் எல்லாமே அழகு. விமானங்கள் பறக்கும்போது […]

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. உருளும் காலம் உறையும் அற்புதங்களைச் செய்பவை புத்தகங்கள். சித்திரங்கள் படிக்கிற அனுபவத்தை இன்றைய குழந்தைகள் இழந்து வருவது தலைமுறை துயரம். ஏராளமான சேனல்களும், கணினிகளும் திரிக்கும் ஒளிக்கயிறுகளால் தாவிக் குதிக்கும் குழந்தைகள் சீக்கிரமே தங்களுக்கான தேவ உலகத்தை இழந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் புழுதி வாசத்தையும், புத்தக வாசத்தையும் அறிமுகப்படுத்துவது நமது முதல் கடமை. சிறியோர் முதல் பெரியோர் வரை பார்க்க, படிக்கத் தக்கதாக கல்கியின் ‘பொன்னியின் […]

Read more

கவிதை என்றால் என்ன

கவிதை என்றால் என்ன, வே.த.யோகநாதன், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், பக். 80, விலை 100ரூ. பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு குடையின் கீழ் வாசிக்கும் வாய்ப்பைத் தரும் நூல். ‘கவிதை என்றால் என்ன?’ என்ற தலைப்பின் கீழ் சுமார் 80 கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. படைப்போருக்கும் படிப்போருக்கும் ஒரு பாலமாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

மாற்று சினிமா

மாற்று சினிமா, (பத்து இயக்குநர்களின் நேர்காணல்கள்), தொகுப்பு எஸ். தினேஷ், பேசாமொழி பதிப்பகம், விலை 180ரூ. தமிழ் சினிமா கொஞ்சமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. அதற்கான ஆரம்ப யத்தனங்கள் இதில் தெளிவாகக் காணக் கிடைக்கிறது. இயக்குநர்கள் நவீன், மணிகண்டன், விக்ரம் சுகுமாரன், கார்த்திக் சுப்புராஜ், கமலக்கண்ணன், பாலாஜி தரணிதரன், சீனு ராமசாமி, ரமேஷ், அருண் குமார் என பட்டியல் நீள்கிறது. வெவ்வேறு இயக்குநர்களின் மனப்பாங்கு, சினிமாவைக் குறித்த சிந்தனை நலம் புரிபடுகிறது. சினிமாவை பிறிதொரு இடத்திற்குக் கொண்டு செல்ல அவர்களின் திட்டம், சினிமாவை எப்படி […]

Read more

லீ குவான் யூ

லீ குவான் யூ, பெருந்தலைவன், பி.எஸ்.ராஜகோபாலன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. சிங்கப்பூரின் பெருந்தலைவர் லீ குவான் யூவின் வரலாறு. இன்றைய தேதியில் உலகத்திலேயே எல்லோரும் விரும்பும், பயணப்படும் நாடும் அதுதான். இந்த மாற்றத்துக்காக லீ பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. கண்டிப்பு, தாராளம், உறுதி என்ற விசித்திர கலவையில் நாட்டை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இன்றைக்கும் பூமியின் சொர்க்கமாக சிங்கப்பூரையே சுட்டுகிறார்கள். எதையும் துணிந்து செய்வதற்கும், மறுமலர்ச்சி கொண்டு வருவதற்கும் ஒரு தலைவன் வேண்டும். அதற்கு அவனே தூய்மையாக இருத்தல் அவசியம். அப்படியிருந்து […]

Read more

பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சிரியாவில் பிறந்து வளர்ந்த சமர் யாஸ்பெக்கின் மிக முக்கியமான பதிவு. போர்ச்சூழலில், கொஞ்சமும் நிச்சயமற்ற சூழலில் இருந்து தப்பி வந்து பாரீஸில் தஞ்சம் புகுந்தவர். சிரிய மக்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஈரமுடைய எவர் மனசுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அங்கே எல்லாமுமே நடக்கிறது. சொந்தநாட்டிலேயே அகதிகளாய் வாழும் பெரும் சோகம் மக்களுக்கு நேர்கிறது. சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர், பயம் இன்றி மீண்டும் […]

Read more

வாங்க பேசலாம் செல்லம்ஸ்

வாங்க பேசலாம் செல்லம்ஸ், இளங்கோவன் கீதா, படி வெளியீடு, விலை 100ரூ. இளங்கோவன் முகநூலில் எழுதிய குறிப்புகள் வானத்திற்குக் கீழான அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றன. வகைப்படுத்த முடியாதபடிக்கு ஆவேசமும், அன்பும், கருணையும், விவாதமும் கொண்ட பகுதிகள். மெல்லிய புன்னகையோடு ரொம்பவும் உள்புகுந்து வருந்தாமல் செல்கிற சுலபமான பத்திகள். எல்லோருடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் உடைய பகுதிகளைப் பற்றி பேசுவதால் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. எப்போதுமே உண்மைக்கு அருகில் இருப்பவை சுவாரஸ்யம் நிரம்பியவை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்த்து, முன் பின்னாய் யோசித்துப் பார்த்து எழுதப்பட்டவை. காதலர் தின […]

Read more

சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா, தொகுப்பு நீலன், பேசா மொழி பதிப்பகம், விலை 170ரூ. பாட்டி கதைகளை தொலைத்துவிட்ட இன்றைக்கு, தும்பிகளைத் துரத்தும் குழந்தைகளைத் தொடுவானம் ஏந்திக் கொள்வது நல்ல சினிமாக்களாலும், புத்தகங்களாலும் சாத்தியம். பள்ளிப் புத்தகங்களில் கருக்கொள்ளும் மயிலிறகுகள் குட்டிகளை ஈனும் பால்யத்தில் நமக்கு அறிமுகமாகிற அம்புலிமாமா கதைகளில், நீண்டு கிடக்கும் அரண்மனைத் தெருக்களில், இரும்புக்கை மாயாவி பறந்து வரும் கனவுக்காடுகளில், 007 துப்பறியும் தங்கத் தீவுகளில், கெளபாய் சண்டை நடக்கும் மெக்ஸிகன் மலைப் பாதைகளில் மனம் மாய வண்டாகப் பறக்கிற அனுபவத்தை இன்றைய சிறுவர்கள் […]

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், விலை 160ரூ- தொலைக்காட்சி இயக்குநராக பணிபுரிந்த ஏ. நடராஜனின் நினைவு கூறும் நூல். அவர் எழுத்தாளரும் கூட. ஒரு கால கட்டத்தில் சதா சர்வகாலமும் நாம் கேட்டுக் கொண்டிருந்த பெயர் இது. நிறைய ரசனை உணர்வுகள் பெருகி வந்ததால் பார்த்து வந்த பணிக்கு மேலாக கல்வி கேள்விகளில் சிறந்திருக்கிறார். இசையின் மீதான அவரது ஈடுபாடு போற்றுதற்குரியது. மொத்த நூலிலும் அவர் பற்றி எழுதியிருக்கிற கட்டுரைகளில் ஆத்மார்த்தம் தெரிகிறது. அவர் எல்லோர் மீதும் […]

Read more
1 2 3 4 9