எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன்

எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன், இரா. சிவராமன், பை கணித மன்றம், 9/11, தெற்கு கங்கை அம்மன் கோயில் இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை. விலை 365ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-081-0.html இராமானுஜனின் அற்புத கணித ஆற்றலுக்கும் அவரது எளிய வாழ்க்கைத் தன்மைக்கும் சொக்கத் தங்கமான குணத்துக்கும் எப்போதும் யாருக்கும் எத்தீங்கும் நினைக்காத நல்ல மனதுக்கும் உலகில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் போற்றுவர். அவரது கணிதப் படைப்புகளின் தன்மையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களின் […]

Read more

காஞ்சி

காஞ்சி, ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியர் அறிஞர்கள், மு. நஜ்மா, மு. கஸ்தூரி, அ.மோகனா, மு. காமாட்சி, பரிசல் புத்தக நிலையம், 96, ஜெ.பிளாக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ.காலனி, அரும்பாக்கம், சென்னை 106, விலை 180ரூ. மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் தமிழ் மொழியில் மயங்கிய வரலாறு இது. இங்குள்ள மக்களை மனமாற்றமோ, மதமாற்றமோ செய்ய வேண்டுமானால் அவர்களது மொழியில் அதைச் செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்து, தமிழுக்கான எழுத்துருக்களை உருவாக்குவது முதல் புத்தகங்கள் வெளியிடுவது வரை இந்தப் பாதிரியார்கள் இறங்கினர். ஏட்டுச்சுவடிகளாய் அழிந்து […]

Read more

புலித்தடம் தேடி

புலித்தடம் தேடி, மகா. தமிழ்ப்பிரபாகரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-137-9.html மூன்று ஆண்டுகளுக்கு முன் மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் […]

Read more

புயலுக்குப் பின்னே பூந்தென்றல்

புயலுக்குப் பின்னே பூந்தென்றல், சுப. உதயகுமாரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-3.html சுப. உதயகுமாரன் யார், கூடங்குளம் தொடங்கும்போதெல்லாம் அவர் எங்கே போனார்… இதுபோன்ற கேள்விகளை கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்கள் அடிக்கடி கேட்பார்கள். எல்லாக் காலத்திலும் போராட்டம் நடத்தக்கூடியவராகத்தான் இருந்துள்ளார் என்பதை நிரூபிக்கும் புத்தகம் இது. 1981 முதல் 87 வரை எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார் சு.ப.உதயகுமாரன். ஒரு […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, தி. சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. கோடிக்கணக்கான மக்களின் விரலில் பட்ட மையை, ஒரு துளி பேனா மையால் அழிக்க முடியுமா? முடியும் என்று சொல்வதுதான் இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை தங்களது சுயவிறுப்பு வெறுப்பின் அடிப்படையில் கலைக்க வழிவகை அமைக்கிறது சட்டம். இந்தச் சட்டத்தால் 1976, 1980, 1991 ஆகிய மூன்றுமுறை தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இந்திராவின் […]

Read more

ம.பொ.சி.யின் தமிழன் குரல்

ம.பொ.சி.யின் தமிழன் குரல், தொகுப்பு-தி.பரமேசுவரி, சந்தியா பதிப்பகம், பு.எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, 3 தெகுதிகள் சேர்த்து விலை 420ரூ. தமிழக எல்லைப் பரப்பைக் காத்த தலைமகன், ம.பொ.சிவஞானம் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளை ஒருபுறம் கேரளத்தவரும், இன்னொரு புறம் ஆந்திரத்தவரும் எடுத்துக் கொள்ளத் துடித்தபோது பதற்றம் ஏற்பட்டது. ம.பொ.சி.க்கு மட்டும்தான். எங்கு இருந்தால் என்ன, இந்தியாவுக்குள்தானே இருக்கப்போகிறது என்று காங்கிரஸ்காரர்களும் இதையெல்லாம் சேர்த்துத்தானே நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம் என்று திராவிட இயக்கத்தவரும் காரணங்கள் சொல்லிக்கொண்டு இருந்தபோது […]

Read more

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும், ஷங்கர் ராமசுப்ரமணியன், நற்றிணைப் பதிப்பகம், எண், 123 ஏ, திருவல்லிக்கேணி, நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-6.html எதையும் அழுத்திப் பேசும்போது அது அருவெறுப்பாகி விடுகிறது. எதையும் உரத்துப் பேசும்போது பொய் நுழைந்துவிடுகிறது. எழுத்தாளன் இதற்கு நடுவில் சிக்கலான பாதையில் பயணிப்பவன் எனும் ஷங்கர் ராமசுப்ரமணியனின் முதல் கட்டுரைத் தொகுப்பு இது. விதைகள் மலமாக அறிமுகமானவர், கட்டுரைகள் மூலமாகவும் கவனிக்கப்பட வேண்டியவராகிறார். இலக்கியத்தில் கிடைக்கும் பிரபலயத்தின் மூலமாக உலகத்தின் […]

Read more

மருது பாண்டிய மன்னர்கள்

மருது பாண்டிய மன்னர்கள், மீ. மனோகரன், அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 7, விலை 780ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-508-1.html பாளையக்காரப் புரட்சியின் தலைவர்கள் என்று, இந்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் மருது சகோதரர்கள். இந்த இருவர்தான் வெள்ளையருக்கு எதிரான போரை ஒருங்கிணைத்து ஓர் இயக்கமாக்கி, வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படி பிரகடனம் செய்தவர்கள். வளரி என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு, வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை […]

Read more

வன்னி யுத்தம்

வன்னி யுத்தம், (களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு), அப்பு, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 125ரூ. ஈழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட்டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது. இறுதிக்கட்டப் போரின் போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன? என்பது குறித்த ஆழமான விமர்சனத்தை நேர்நின்று பார்த்த அப்புவின் எழுத்தில் படிக்கும்போது ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. பள்ளிப் பருவம் முதல் […]

Read more

சாதியும் தமிழ்த்தேசியமும்

சாதியும் தமிழ்த்தேசியமும், பெ. மணியரசன், பன்மை வெளி, எண் 1, இராசா வணிக வளாகம், நீதிமன்றச் சாலை, புது ஆற்றுப் பாலம், தஞ்சாவூர் 1, விலை 80ரூ. சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் – மற பாதி துலங்குவதில்லையாம் – என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சாதி ஒழிப்பு வீரர்கள் தமிழைப் புறக்கணிப்பதும், தமிழ்த் தீரர்கள் சாதிப் பிரச்னைகளை மறைத்துச் செயல்படுவ்தும்தான் இன்று தமிழ்ச் சமூகத்தில் நடக்கிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் சம அளவில் வைத்துப் […]

Read more
1 6 7 8 9