கலாமின் திருப்புமுனைகள்

திருப்புமுனைகள், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், தமிழில்-சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிபப்கம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ. அக்னி சிறகுகள் சாதனை மனிதர் எழுதி, விற்பனையில் சாதனை படைத்த புத்தகம். 1992ம் ஆண்டு வரையிலான தனது வாழ்க்கையை அந்தப் புத்தகத்தில் அப்துல் கலாம் சொல்லி இருந்தார். அதற்குப் பிந்தைய நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்தத் திருப்பு முனைகள். 2007 ஜுலை 24ம் தேதி, இந்தியக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து விடைபெறும் நாளில் இருந்துதான் தொடங்குகிறார். அங்கேயே அப்துல்கலாம் என்ற மனிதரை […]

Read more

வஞ்சி

வஞ்சி, பரிசில் புத்தக நிலையம், 96, ஜெ பிளாக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை 106, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-507-3.html இதழ்த் தொகுப்புகள், ஆய்வு – ஆவணம். காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான் என்று பத்திரிகைகளைப் பார்த்துப் பாடினார் பாரதிதாசன். இப்படி பட்டொளி வீசிய பல பத்திரிகைகள் கால வெள்ளத்தில் காணாமல்போன கவலையை அதிகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இலக்கிய வட்டம், கசடதபற, கொல்லிப்பாவை போன்ற இலக்கிய இதழ்களும், அறிவு, மனிதன், […]

Read more

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், யமுனா ராஜேந்திரன், அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், விலை 550ரூ. விடுதலைப் புலிகளை ஆராதிக்கும் புத்தகங்கள் அதிகம். விடுதலைப் புலிகள் என்றாலே பாசிஸ்ட்டுகள் என்று பாய்ந்து பறாண்டும் புத்தகங்களும் அதைவிட அதிகம். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை அதற்கான பலம், பலவீனங்களுடன் நடுநிலைமை தவறாமல் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் குறைவு. அதில் ஒன்று யமுனா ராஜேந்திரனின் இந்தப் புத்தகம். எதைப் பற்றி எழுதினாலும் அதனுடைய நுண்மையான அரசியலுக்குள் நுழைந்து, சகல தரப்பையும் அலசி ஆராய்ந்து எழுதக் […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127, பழைய எண் 63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் தவழ்ந்து வருவதற்கும், உலகின் பல்வேறு மொழி பேசுபவர்களும் தமிழைப் படிப்பதற்கும் காரணம்… தனிநாயக அடிகளார். உலகத்தமிழ் மாநாடு நடத்துவதற்கான தூண்டுதலும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பலரும் இன்று தமிழ் ஆய்வில் ஈடுபடக் காரணமும் இவரே. தமிழை உலக மொழியாக மாற்றிய உன்னத மனிதர்தான் […]

Read more

சியாங் சிங்

சியாங் சிங், ஜாஃபியா ராயன், தமிழில்-வான்முகிலன், திலகன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4வது முதன்மைச் சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-1.html வலிமைகொண்டு போராடுவதால் எதிரிகளின் தோலையும் சதையையும் வேண்டுமானால் தொட்டுவிடலாம். ஆனால் காரணகாரிய விவாதங்கள் மூலமாகவே அவர்களுடைய உள்ளங்களைத் தொட முடியும். நியாயத்தின் அடிப்படையில் தாக்குக. வன்முறை மூலம் தற்காத்துக்கொள்க. ஒவ்வொரு நாளும் அதிகாலை சேவல் கூவும்பொழுதே வாளுடன் ஒரு சிறந்த தளபதியைப் போலத் தயாராக […]

Read more

ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர்

ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர், எஸ். ராஜகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-4.html காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார், ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை எதிர்காலச் சமுதாயம் நம்ப மறுக்கும் என்று. அப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியிலும் உட்கார்ந்து இருந்தார். அவர்தான் ஓமந்தூர் ராமசாமி செட்டியார். இந்தியா சுதந்திரம் அடையும்போது, அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தவர். அன்று, பிரதமர் என்றுதான் […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு,(தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்), ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், பேருந்து நிலையம் பின்புறம், தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html கச்சத்தீவை சூழ்ந்து நிற்பது தண்ணீர் அல்ல. தமிழனின் கண்ணீர். நாகை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மீனவர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இடம் மட்டுமல்ல அது. தமிழகத்தின் வளத்தோடு சம்பந்தப்பட்டது. இப்போது இந்தியாவின் மானத்தோடு தொடர்புடையது. கடந்த 40 ஆண்டு காலமாக 600க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை […]

Read more

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும்

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும், பேராசிரியர் கே. ராஜய்யன், தமிழில்-நெய்வேலி பாலு, கருத்துப்பட்டறை, 2, முதல்தளம், மிதேசு வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 120ரூ. முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகம் வட இந்தியாவில் நடந்தது 1857ல். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலை வேள்வி தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த வீரக் கதையின் அழுத்தமான வரலாறுதான் இது. அந்தக் காலத்தில் இருந்த நிர்வாக அமைப்பு என்பது பாளையங்கள். இதனை ஆட்சி செய்தவர்கள் […]

Read more

கைம்மண்

கைம்மண், சுதாகர் கத்தக், பார்வை பதிவுகள், 27/53, சின்னக்கண்ணா நகர், சாமி செட்டிப்பாளையம், வடக்கு, ஜோதிபுரம் அஞ்சல், கோயம்புத்தூர், விலை 150ரூ. உறுதியான கொள்கையுடன், சீரிய கலாசாரத் தளத்தில், விலை போகாதவனாக, சமூகத்தைத் தன் படைப்புகள் மூலம் விமர்சிப்பவனாக இருக்க வேண்டும் தலித் படைப்பாளி. சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் உவப்பானது இல்லை தலித் இலக்கியம். தமிழ்ச் சூழலில், தான் சுதந்திரமாக இருக்கிறோம் என்று படைப்பாளி நினைக்கும்போதே கைதுசெய்யப்பட்டுவிடுகிறான். கைதானதை எதிர்த்துக் குரல் எழுப்புப்போதே குரல்வளை நெறிக்கப்படுகிறது. கோபத்தை வெளிப்படுத்தும்போதே கண்கள் பிடுங்கப்படுகின்றன. இந்த நிலையில் இருந்து […]

Read more

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லரின் மறுபக்கம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-498-6.html ஹிட்லர் என்ற பெயருலுக்கு இருக்கும் பிரபலமும் கவர்ச்சியும் உலகில் வேறு எவருக்கும் இல்லை. அவர் எழுதிய புத்தகமும் அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகமும் எத்தனை முறை வெளியிட்டாலும் எத்தனைபேர் வெளியிட்டாலும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் வாசிக்கப்படுகிறது. எனவே உலகத்தின் ஹீரோக்களில் ஒருவராகத்தான் ஹிட்லரை சொல்ல வேண்டும். தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இறந்துபோன பிறகும் போற்றப்படும் விமர்சிக்கப்படும் […]

Read more
1 5 6 7 8 9