இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள்

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள், நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-561-4.html ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக்கொலைக்கு ராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனத்துக்கு உரியவை. சிங்கள அரசின் இரவல் […]

Read more

கொதிக்குதே கொதிக்குதே

கொதிக்குதே கொதிக்குதே, (புவி வெப்பமடைதலும் நாமும்), ஆதி வள்ளியப்பன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-0.html இயற்கையின் சதிக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டு இருப்பதுதான் இன்றைய வாழ்க்கை. மழைக் காலத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயில் காலத்தில் மேகம் கருக்கிறது. கரைபுரண்டு ஓடிய காவிரி வறண்டுகிடக்கிறது. மலைப் பகுதிகள் தங்களது ஈரப்பதத்தை இழந்துகிடக்கின்றன. காலைக் காற்றையும் காணோம். மாலைத் தென்றலையும் காணோம். இரவின் குளுமையும் பறந்துவிட்டது. இதுதான் இயற்கையின் சதி என்றால், ஏன் சதி […]

Read more

நக்சல்பாரி முன்பும் பின்பும்

நக்சல்பாரி முன்பும் பின்பும், சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர் 15, விலை 350ரூ. இந்திய அரசியல் நகர்வில் இறுதியாக நடந்த அரசியல் எழுச்சி நக்சல்பாரி புரட்சி. ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் மக்கள் அடைவதற்கு மார்க்சியமும் லெனினியமும்தான் சரியான பாதை என்பதை உணர்ந்தது, அந்த எழுச்சிக்குப் பிறகுதான். இமயமலையின் அடிவாரத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றிய விவசாயிகளின் எழுச்சி, பல்வேறு மாநில எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் அசைத்துப் பார்த்தது. இந்தியா அப்படியே தலைகீழாக மாறிப் போய்விடவில்லைதான். […]

Read more

எனக்குள் எம்.ஜி.ஆர்

எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-219-6.html மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்… அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்… நான் ஆணையிட்டால்… அது நடந்துவிட்டால்… கொடுத்ததெல்லாம் கொடுத்தான்… யாருக்காகக் கொடுத்தான்… ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை… காலத்தால் அழிக்க முடியாத கானங்களை எழுதி எம்.ஜி.ஆர். என்ற நடிகரை மக்கள் திலகமாக மாற்றியது வாலியின் வார்த்தைகள். கவியரசு கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் எழுதுகோலைத் தயங்கித் தயங்கித் […]

Read more

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர், தொகுதி – 9,  விலை 2000ரூ. தத்துவார்த்த விசாரணைகளை வளர்தெடுத்தவை அமைப்புகளோ, கட்சிகளோ, பெரிய பல்கலைக்கழகங்களோ அல்ல. சில தனி மனிதர்களே அதைச் சாதித்தார்கள். அந்தவகையில் உலகின் திசையை மாற்றிய மாவோவின் படைப்புகளை முழுமையாகத் தமிழில் கொண்டுவந்த மகத்தான சாதனையை செய்துவிட்டு மண்ணில் புதைந்துவிட்டார் விடியல் சிவா. அவரது நினைவுகளைச் சுமந்து இந்த ஒன்பது தொகுதிகள் வெளிவந்து இருக்கின்றன. ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தேசத்துக்கு விடியலை விதைத்து கோடிக்கணக்கான மக்களுக்கு வசந்தத்தின் […]

Read more

மரிச்ஜாப்பி

மரிச்ஜாப்பி, ராஸ் மாலிக், தமிழில் இனியன் இளங்கோ, தலித் முரசு, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 90ரூ. காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி.க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப்பற்றி தமிழில் வந்துள்ள முக்கிய ஆவணம் இது. 1980களில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆண்டுவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் […]

Read more

காந்தியைக் கடந்த காந்தியம்

காந்தியைக் கடந்த காந்தியம், பிரேம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 240ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-925-9.html மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் இன்னம் உயிரோடு இருப்பதைப்போலவே அவர் பெருங்கூட்டத்தால் பாராட்டப்படவும் விமர்சிக்கப்படவுமாக இருக்கிறார். இது வேறு எந்த ஆளுமையும் அடைய முடியாத பெருமை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கும் செய்தி இருக்கிறது. தத்துவவாதிகளுக்கும் விஷயம் இருக்கிறது. இதுதான் அவருடைய வெற்றிக்கு அசைக்க முடியாத அழுத்தமான காரணம். காந்தியவாதிகளால் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட்களும் பெரியாரியவாதிகளுக்குமே […]

Read more

ராஜாஜியின் ஆங்கிலப் பேருரைகள்

ராஜாஜியின் ஆங்கிலப் பேருரைகள், தமிழாக்கம் த.கணேசன், த.க. அகிலா, பாரதிய வித்யாபவன், லட்சுமிபுரம் தென்னூர், திருச்சி 17, விலை 125ரூ. ராஜாஜி தேசத்தந்தை காந்தியின் மனசாட்சி. தமிழர் தலைவர் பெரியாரின் அன்பான எதிரி. இந்தத் தேசத்தின் விடுதலை வேள்விக்கு விறகு சுமந்தவர். அதேநேரத்தில் இந்தியா பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது என்று கணித்தவர். தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கம் கால் ஊன்ற உழைத்தவர். அவரேதான் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்ற அண்ணாவுடன் கைகோத்தவர். மேலாட்டமாகப் பார்த்தால் ராஜாஜி, முரண்பாடானவராகத் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால், அவரது தீர்க்கத்தரிசனம் […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி பி.ஏ., விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 425ரூ. அகிம்சை மீது அளவற்ற அன்பு செலுத்திய காந்தி, தமிழின் மீது தணியாத காதல் ஈடுபாடும் வைத்திருந்தார். தான் ஒரு இந்து என்பதற்காக கீதையை மதித்தார் என்று எடுத்துக்கொண்டால், உலகப்பெரும் அறநூல் என்ற மகுடத்தோடு திருக்குறளைப் படித்தார். எழுத்துக் கூட்டியாவது தமிழைப் படித்தவர். மோ.க. காந்தி என்று தமிழில் அவர் இட்ட கையெழுத்து இன்றும் சபர்மதி ஆசிரமத்தில் இருக்கிறது. இந்த ஈடுபாடுதான் அவரைத் தமிழகத்தை நோக்கியும் அடிக்கடி […]

Read more

சகாயம் சந்தித்த சவால்கள்

சகாயம் சந்தித்த சவால்கள், கே. ராஜாதிருவேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, வலை 80ரூ. லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம். ஊழல், முறைகேடு, விதிமீறல் செய்பவர்களுக்கு சகாயம் எப்போதும் ஒரு கஷாயம். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒருசில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையானவர்களாக இருந்தால்போதும் என்று நினைப்பார்கள். ஆனால் சகாயம் தன்னைச் […]

Read more
1 3 4 5 6 7 9