ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள், செ. கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 254, விலை 150ரூ. எங்கும், எந்தத் தொழிலிலும் கடும் போட்டி நிலவும் இன்றையச் சூழலில், உள்நாட்டுச் சந்தையைத் தாண்டி, சர்வதேச அளவில் தங்களது வணிகத்தை விஸ்தரிக்க வேண்டிய அவசியம், சுயதொழில் புரிவோருக்கு உள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தின் நுணுக்கங்களை அறிந்து அவற்றைக் கடைபிடிப்பதன் மூலம், சுயதொழில் புரிவோர் சர்வதேசச் சந்தையைத் தங்களுக்குச் சாதகமாக்கி கொள்ளலாம். இந்நூல், ஏற்றுமதி தொழிலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், தமிழகத்திலிருந்து எந்தெந்தப் பொருள்களை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்? […]

Read more

தமிழ் நாட்டு வரலாறு

தமிழ் நாட்டு வரலாறு, பா. இறையரசன், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 250ரூ. மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூலில், முந்தைய பதிப்பில் உள்ள பழைய வரலாற்றுச் செய்திகளோடு அண்மைக்காலச் செய்திகளும் (இக்காலத் தமிழகம்) சேர்ந்துள்ளன. உலகம் தோன்றியது தொடங்கி, தொல் பழங்காலம், கற்காலம், சங்ககாலம், மூவேந்தர் காலம், இருண்ட காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், மராத்தியர் காலம், ஆங்கிலேயர் காலம், தற்காலம் எனத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகப் பல சான்றுகளோடு சுவைபட விளக்குகிறது. தொன்மையும் பழைமையும் உடைய தமிழ்நாட்டு வரலாற்றை அறிய […]

Read more

கணித வரலாறு

கணித வரலாறு, பி. முத்துக்குமரன், எம். சாலமன் பெர்னாட்ஷா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 413, விலை 325ரூ. எகிப்திய, மெசபடோமியக் கணிதம், கிரேக்கக் கணிதம், ரோமானியக் கணிதம், சீனக் கணிதம், இந்தியக் கணிதம் என தொன்மைக் காலம் தொடங்கி, இடைக்காலத்தில் தோன்றிய இஸ்லாமியக் கணிதம், ஐரோப்பியக் கணிதம் மற்றும் நவீன காலத்தில் மறுமலர்ச்சி கால இத்தாலிய தீபகற்பக் கணிதம், நவீன ஐரோப்பாவின் கணிதத்தின் துவக்கம் எனப் பல்வேறு தலைப்புகளில் கணித வரலாற்றை நூலின் ஆசிரியர்கள் விரிவாக எழுதியுள்ளனர். எண்களின் குணாதிசயங்களை எடுத்துரைக்கும் […]

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், இசையரசியின் வாழ்க்கை பயணம், ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 800ரூ. கர்நாடக இசையுலகில் நிகரற்ற கலைஞராக விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி வெளியாகியிருக்கும் அவரது வாழ்க்கைப் பயண நூல் இது. மதுரை சேதுபதி பள்ளியின் திறந்தவெளியில் மதுரை சண்முகவடிவு வீணை வாசிக்க அவரது ஆறு வயதுக் குழந்தையான குஞ்சம்மா சற்று தொலைவில் மணல் வீடு கட்டி விளையாடுவதில் தொடங்கி, அந்த ஆறு வயதுக் குழந்தை “ஆனந்தஜா’‘ என்கிற மராட்டிய மொழிப் பாடலை முதன்முதலாக மைக்கில் பாடியது, மதுரை […]

Read more

மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர், எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பக்.312, விலை ரூ.235. ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் ஒன்றுதான்… கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் வாழ்க்கையைப் படிப்பதும் ஒன்றுதான் என்ற வரிகளுடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை கட்டுரை வடிவிலேயே பார்த்து பழகிய நமக்கு, இந்தப் புத்தகம் சற்று மாறுபட்டதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வையே தருகிறது இந்நூல். 33 யுகங்கள் எடுத்தாலும் அடைய முடியாத சாதனைகளை வெறும் 33 ஆண்டுகளில் வென்றெடுத்த அலெக்சாண்டரின் வாழ்க்கைப் […]

Read more

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம்

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம் (51 பகுதிகள் 51 ஆய்வுரைகள்), பதிப்பாசிரியர்கள் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், குன்றக்குடி பெரியபெருமாள், தா.மணி, பக்.256, விலை ரூ.100. 2002ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், தற்போது இரண்டாவது(2016) பதிப்பு கண்டிருக்கிறது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களுக்கும் 51 சமயத் தமிழறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தவத்திரு ஊரன் அடிகள், சாந்தலிங்க இராமசாமி அடிகளார், வை.இரத்தினசபாபதி, தமிழண்ணல், கலைமாமணி விக்கிரமன், ச.வே.சுப்பிரமணியன், அய்க்கண், கு.வெ. பாலசுப்பிரமணியன், பழ.முத்தப்பன், சரஸ்வதி இராமநாதன், சோ.சத்தியசீலன், கவிஞர் மரு.பரமகுரு, […]

Read more

இந்தியா பாகிஸ்தான் போர்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள், துவாரகை தலைவன், கிழக்கு பதிப்பகம், பக். 317, விலை 250ரூ. பொது வாசகர்கள் விரும்பி வாசிக்கும்படி சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் வரலாற்று நூல்கள் தமிழில் மிக அரிதாகவே வெளிவருகின்றன. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த யுத்தங்கள் குறித்த புத்தகம் வருவது வரவேற்கத்தக்கது. மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய இரு நாடுகள் அல்லது இரு சமூகங்கள், நம்பவே முடியாத அளவுக்குப் பகை கொள்வது இந்தியா – பாகிஸ்தானுக்கு மட்டுமே உரித்தான விஷயமல்ல. இராக்-ஈரான், இன்றைய இஸ்ரேல் பகுதி போன்ற இடங்களிலும் நெடுங்காலமாகப் […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. கதாசிரியர், திரைப்பட இயக்குநர் என்ற புகழுக்கு உரியவரான கலைமாமணி ஏ.சி. திருலோகசந்தர் தன் சமகாலத்து சினிமா அனுபவங்களை இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். திரு. ஏவி.எம். சரவணன் நட்பு தொடங்கி, அவரது பிறப்பின் பிரமிப்பில் ஆரம்பித்து, கல்லூரி வாழ்க்கை, முதல்பட வாய்ப்பு, எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்டோரை இயக்கியது, ‘அன்பே வா’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய அனுபவம், ஜனாதிபதி பரிசு பெற்றது. ஜெயலலிதா நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’, […]

Read more

அவள் பிரிவு

அவள் பிரிவு, வெ.சாமிநாத சர்மா, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.100. வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு.சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். “ஒளி விளக்கு’ என்ற தலைப்பிடப்பட்டு தொடங்கும் கடிதம் “சங்கற்பம்’ என்ற தலைப்புடன் முடிகிறது. “என் மனைவி இறந்துவிட்டதாக என்னால் எண்ண முடியவில்லை; இருப்பதாகவே என் நினைப்பு. எங்கோ அயலூருக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வந்துவிடுவாளென்றுமே என் […]

Read more

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு. அருண் திவாரி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.548, விலை ரூ.495. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் அதற்கும் […]

Read more
1 103 104 105 106 107 180