ஹிதோபதேசத்தில் நிர்வாகம்

ஹிதோபதேசத்தில் நிர்வாகம், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், பக்.160, விலை ரூ.100.  16/2, ஹிதோபதேசக் கதைகளுக்கு என்றுமே முதுமையில்லை. குழந்தைகளுக்கான புத்தகம் என்ற நிலையில் உள்ள அதனை நூலாசிரியர் நிர்வாகக் களத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். மூலத்தில் உள்ளபடியே கதைகளைத் தருவதென்றால் வர்ணனை, உரையாடலுக்கு அதிகப் பக்கங்களாகும். நீதிகள், நியதிகள், சுலோகங்கள் கதைகளை விட நீளமானவை. எனவே கதைகளைச் சுருக்கி தாத்பர்யங்களை விரிவாகவும் நிர்வாகவியலோடு சம்பந்தப்படுத்தியும் இந்தப் படைப்பை நூலாசிரியர் தந்துள்ளார். 49 கதைச் சுருக்கங்கள் கொண்ட இந்த நூலில், துணிவில் இருக்கிறது வெற்றி; […]

Read more

ஆநந்த மடம்

ஆநந்த மடம், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர், தமிழில்: மஹேச குமார சர்மா, ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.336, விலை ரூ.120. கி.பி.1771 இல் வங்காளத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. கிராமப்புறங்களில் வாழும் மக்களில் பலர் பசியால், நோயால் மாண்டுவிடுகின்றனர். அந்நிலையிலும் அப்பகுதியை ஆண்ட மன்னர் கடுமையாக வரி விதிக்கிறார். வரி வசூலிக்கும் பணியை ஆங்கிலேயர் மேற்கொள்கின்றனர். காட்டில் மறைந்து வாழ்ந்த சந்நியாசிகள் ஆட்சி செய்த மன்னரையும், வரி வசூலிக்கும் ஆங்கிலேரையும் எதிர்த்து போரிடுகிறார்கள். வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்களால் இறுதியில் அவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். […]

Read more

மனநிழல் காட்சிகளும் சலனங்களும்

மனநிழல் காட்சிகளும் சலனங்களும், ந.பிச்சமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. புதுக்கவிதை முன்னோடிகளுள் ஒருவரான ந.பிச்சமூர்த்தியின் கவிதையும் அல்லாத, கட்டுரையும் அல்லாத, கதையும் அல்லாத புதுவகை அனுபவத் தெறிப்புகளின் தொகுப்பு இந்நூல். வாழ்க்கையை தன் கவிதைக் கண்களால் மிக நுட்பமாக, அழகாகப் பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார் பிச்சமூர்த்தி. அவர் வாழ்வின் நேரடி அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. கூடவே அவருடைய வாழ்க்கைப் பார்வையும். மிகச் சிறு விஷயங்களிலும் கூட, இந்த வாழ்க்கைப் பார்வை வெளிப்படுகிறது. பிய்ந்து போன செருப்பைப் பற்றிக் கூறும்போது, இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் […]

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை ரூ.130. உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் நூல். வணிகம், புதையல், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, தேடல் என பல்வேறு காரணங்களுக்காக எத்தனையோ மனிதர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், சரித்திரத்தின் பக்கங்களை வசீகரித்த குறிப்பிடத்தக்க 13 பேரின் பயணங்கள் குறித்து இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. வாஸ்கோடகாமா போர்ச்சுகலில் இருந்து இந்தியாவைத் தேடி செயிண்ட் கேப்ரியல் என்ற கப்பலில் பயணிக்கிறார்; முதல் மூன்று மாதங்கள் நிலமே கண்ணில் படவில்லை. எங்கு திரும்பினாலும் […]

Read more

உணவின்றி அமையாது உலகு

உணவின்றி அமையாது உலகு,  அ.உமர் ஃபாரூக், விகடன் பிரசுரம், பக்கம் 103, விலை ரூ.110. ‘இந்த உலகில் எல்லா போர்களும் தொடங்கிய இடம் உணவுதான். எல்லா உணவுகளையும் நம்மால் இயற்கையைப் பின்பற்றி உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நாமோ அன்றாட உணவுகளில் கூட நஞ்சைக் கலந்து வைத்திருக்கிறோம்’ என்கிறார் நூலின் ஆசிரியர். ஆங்கில மருத்துவரும், அக்குபஞ்சர் மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றுள்ள நூலாசிரியர், நம் அன்றாட பயன்பாட்டுப் பொருள்களான பால், சர்க்கரை, எண்ணெய், மசாலாத்தூள் என அனைத்திலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை ஆதாரங்களோடு விளக்குகிறார். மேலும் பலர் விரும்பி […]

Read more

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர்

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்,  காவ்யா, பக். 285, விலை ரூ.280. ‘ஆங்கிலேயரை மட்டுமல்லாது, நாயக்கர்களையும், நவாபுகளையும் எதிர்த்துப் போராடியவர் பூலித் தேவர்’. 1715 இல் பிறந்தவரான பூலித்தேவர் 1750 இல் இன்னிசு துரையுடன் போரிட்டார். அதற்குப் பின் 1767 இல் நடந்த போரில் அவர் மரணமடைவது வரை தொடர்ந்து அந்நிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போரிட்டார். முதல் சுதந்திரப் போர் வீரராக அவர் திகழ்ந்தார். முதல் சுதந்திரப் போர் வீரர் பூலித்தேவரா, கட்டபொம்மனா என்ற கேள்விக்கு இந்நூல் விடையளிக்கிறது. இந்நூலில் துர்க்காதாஸ் […]

Read more

50 + இளமையோடு இருப்பது எப்படி?

50 + இளமையோடு இருப்பது எப்படி?, டாக்டர் சு.நரேந்திரன்,  கற்பகம் புத்தகாலயம், பக். 264, விலை ரூ.190. ‘வயதானாலும் இளமையாக இருக்கவே எல்லாரும் விரும்புகிறார்கள்’. இந்நூலில் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் இளமையாக வாழ வழி சொல்லப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு வரக் கூடிய ரத்த அழுத்தம், மாரடைப்பு, எலும்புகள் பலவீனமடைதல், மூட்டுகளில் பாதிப்பு, ஜீரணக் கோளாறுகள், பற்கள், கண்களில் பாதிப்பு உட்பட பல நோய்களுக்கான காரணங்களையும் அதற்கான தடுப்புமுறைகளையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது. எவற்றை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்? என்னவிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? […]

Read more

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும்

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும், இரா.தங்கப்பாண்டியன், அகநி வெளியீடு, பக். 112, விலை ரூ.70. நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் பெறுபவர் கோமாளி. மக்களை உற்சாகப்படுத்த நகைச்சுவையாகப் பேசி நடிக்கும், ஆடும் கலைஞர்கள்தாம் கோமாளி கலைஞர்கள். நூலாசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக சமர்ப்பித்த‘ ‘ராசா ராணி ஆட்டத்தில் கோமாளிகள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடுதான் இந்நூலாக மாறியிருக்கிறது. கோமாளி கலைஞர்களின் தோற்றம், பல்வேறு நாட்டுப்புறக் கலைகளில் அவர்களுடைய […]

Read more

திருக்குறள் விளக்கம் (திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்)

திருக்குறள் விளக்கம் (திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்), விளக்கவுரை: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்; பதிப்பாசிரியர்: ஜெ.மோகன், இரண்டு பாகங்கள்,வெளியீடு: சிவாலயம்,பக்.1735, விலை ரூ.1800 (இரண்டு பாகங்களும்). திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால், காமத்துப்பால் மற்றும் அறத்துப்பால் தொகுப்புரை ஆகிய நான்கு பகுதிகள் – இரண்டு பாகமாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. பரிமேலழகர் உரைக்கு விரிவான விளக்கவுரை தந்தவர்களுள் வேதாந்த நோக்கில் உரை வகுத்தவர் கோ.வடிவேலு செட்டியார். சித்தாந்தம் திங்களிதழின் ஆசிரியரான, கி.குப்புசாமி முதலியாரோ சித்தாந்த நோக்கில் திருக்குறளை அணுகியிருக்கிறார். மிகச்சிறந்த உரை விளக்கம் மட்டுமல்ல, மிக எளிமையான உரையும்கூட […]

Read more

கேணி

கேணி, கோபால்தாசன், நீலம் பதிப்பகம், பக்கம் 120, விலை.120ரூ. கேணி கவிதை தொகுப்பு, கவிஞர் கோபால்தாசன் சிந்தனையின் ஊற்று . பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து நூலாக தந்திருக்கும் கோபால்தாசன் கற்பனை வளமிக்கவர் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்றாகும். எழுகின்ற கற்பனையை எழுத்தில் அவர் கோர்த்திருக்கின்ற விதம் வாசிப்போரை நேசிக்க வைக்கும் என்றால் அது மிகையில்லை. கவிதை என்பது வாழ்வின் பிம்பம். காலத்தின் கண்ணாடி. மொழியின் சுவை, என்பதை இவரின் ஒவ்வொரு கவிதைகளிலும் கண்டு கொள்ள முடிகிறது. வாழவைக்கும் பண்டிகை என்ற […]

Read more
1 78 79 80 81 82 180