குழந்தைகள் மன நலம்

குழந்தைகள் மன நலம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 160ரூ. இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருக்கிறார்கள். அதை எவ்வாறு உணர்வது, எப்படி அவர்களது மனநலத்தைப் பாதுகாப்பது? எப்படி சரியான வழியில் சரியான திசையில் கொண்டு செல்வது என்ற வழிகாட்டலுக்குத் தகுதி படைத்த நூலாக படைத்திருக்கிறார் மருத்துவ உளவியலாளர் ஏ. வினோத்குமார். நன்றி: தினத்தந்தி, 28/9/2016.   —-   தமிழே என்னுயிரே, சு. திருநாவுக்கரசு, தேன்பழனி பதிப்பகம், விலை 150ரூ. காலத்திற்கு ஏற்ற வகையில் 76 வெவ்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ள மரபுக் […]

Read more

அறிவியல் புதையல்

அறிவியல் புதையல், டாக்டர் குமார் கணேசன், இன் அண்டு அவுட் சென்னை பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக எளிய தமிழில் எழுதப்பட்ட 20 அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 28/9/2016.   —-   புனித கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துகள், இந்திய வரலாற்று ஆய்வாளர் வி.பி. ராமராஜ், மணிமேகலைப் பிரசுரம், விலை 85ரூ. புனித கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துக்களை உலகில் உள்ள அனைத்து இன மக்களும் படித்துப் புரிந்து கொண்டு […]

Read more

பையன் கதைகள்

பையன் கதைகள், மலையாளம் வி.கெ.என்., தமிழில் மா. கலைச்செல்வன், சாகித்திய அகாதெமி, விலை 365ரூ. சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு நூல். இதில் 73 கதைகள் இடம் பெற்றள்ளன. ஒளி வீசும் கண்கள் படைத்த பையன், எண்ணெய் மின்னும் முகத்தில் எப்போதும் ஒரு தியாகியின் பாவம், ஒவ்வொரு நிமிடமும் அவசியமின்றி மரணிப்பது போலவும், எத்தனை முறை மரணித்தாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது போலவும் ஒரு பாவனை, கற்பனையில் ஓர் இரும்புச் சிலுவையை தூக்கி சுமப்பது போன்ற உணர்ச்சி வெளிப்பாடு, இவர்தான் பையன். […]

Read more

ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லர், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, அருள்மொழிப் பதிப்பகம், விலை 90ரூ. பார்வையும் இல்லாமல், பேசவோ, கேட்கவோ முடியாத ஒரு பெண்மணி, படித்துப் பட்டதாரியாகி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக விளங்கினார் என்றால் அதிசயமாக இருக்கிறது அல்லவா? அந்தப் பெண்மணியின் பெயர் ஹெலன் கெல்லர். இருபதாம் நூற்றாண்டின் அதிசயப் பெண்மணி. உடல் ஊனமுற்றவர் என்றாலும் மன உறுதி இருந்தால், சாதனை புரியலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய ஹெலன் கெல்லர் வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. நன்றி: தினத்தந்தி, 28/9/2016.

Read more

கழிந்தன கடவுள் நாளெல்லாம்

கழிந்தன கடவுள் நாளெல்லாம், தென்னம்பட்டு ஏகாம்பரம், பக். 136, விலை 125ரூ. ‘ஆலயம் சென்று ஆண்டவனை வழிபடுவதெல்லாம், விளையாட்டுப் பருவத்தில் ஆன்மிகம் முளைவிடுமறும் வழி என்று கூறும் இந்நூலாசிரியர், ஆரம்பத்தில் இறை மறுப்பு சிந்தனைக்கு ஆட்பட்டு 1972-74 வரை ‘முரசொலி’ நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி, உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். ‘அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதன் இயல்பை அறிதலே ஆத்மஞானம்’ என்கிறது பகவத்கீதை. ஆனால், நாமே ஆத்ம ஞானத்தை […]

Read more

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ. தமிழ்நாட்டை கி.பி. 300 முதல் கி.பி. 600 வரை களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று அறியப்படுகிறது. இந்த 300 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் வரலாறு எப்படி இருந்தது என்பதை அறியாத நிலை வரலாற்று ஆய்வாளர்களுக்கே இருந்து வந்தது. அதனால் அந்த காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ என்று வர்ணித்தனர். ‘வேள்விக்குடிச் செப்பேடு’ மூலமாக களப்பிரர் பற்றிய செய்திகளுக்கு விடை கிடைத்தது. அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் தமிழகத்தினுள் படையெடுத்த காலம், […]

Read more

பெரியார் கணினி

பெரியார் கணினி, புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 650ரூ. பகுத்தறிவு தந்தை என்றும், பகுத்தறிவு பகலவன் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார். அவர் உதிர்த்த ஐயாயிரம் பொன் மொழிகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அரசியல், அறிவியல், கடவுள், கல்வி, சமூக சீர்திருத்தம், சாதி, சுயமரியாதை, தமிழர் நாத்திகம், நரகம் மோட்சம், மதம், பகுத்தறிவு, புராண இதிகாசங்கள், பொதுவுடைமை, மூடநம்பிக்கை என்பன போன்ற தலைப்புகளில் பெரியார் மொழிந்த மொழிகளை புலவர் நன்னன் இந்த நூலில் அழகுற தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூல் குறித்து […]

Read more

பார் போற்றும் பகலவன் பாபாசாகேப் பயணப்பாதை

பார் போற்றும் பகலவன் பாபாசாகேப் பயணப்பாதை, எம்.ஏ. பாலசுப்ரமணியன், சித்தார்த்த பதிப்பகம், விலை 450ரூ. ஆழ்ந்த கற்றல், வீரமிகு சுயமரியாதை, உயர்வான சிந்தனை, தெளிந்த ஞானம், ஓய்வறியா உழைப்பு மற்றும் உத்தம குணங்கள் முற்றாக நிரம்பியதே டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை. அத்தகைய தன்னலமற்ற பேரருளாளரின் வாழ்வின் நிகழ்வுகளை, அவர் பிறந்த 14/4/1891 முதல் இறப்பான 6/12/1956 வரை நாட்குறிப்பாய் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் எம்.ஏ. பாலசுப்பிரமணியன். தாம் பிறந்த மண்ணிற்கும், தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும் ஈடு இணையற்ற தொண்டாற்றிய பெருமகன் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கைப் […]

Read more

லெனின்

லெனின், ஜீவபாரதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. மொழி பெயர்ப்பாக அல்லாமல், விரிவான தகவல்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட லெனின் வாழ்க்கை வரலாற்று நூல். அவர் வரலாறு ஒரு தனி மனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது. லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை ஆரவாரமற்ற நடையில் எளிதாகப் புரியும் விதத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஜீவபாரதி. இன்றைய சூழலில் வளரும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் இனிய அரிய வரலாற்று […]

Read more

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, ஆர். வைத்தியநாதன், ஸ்ரீசங்கராலயம், பக். 208, விலை 250ரூ. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதிசங்கரர் முதல் அம்மடத்தின் தற்போதைய பீடாதிபதிகளான ஜயேந்திரர், விஜயேந்திரர் வரையிலான எழுபது குருமார்களின் வரலாற்றை எல்லாரும் புரிந்து கொள்ளும் வண்ணம் (குருரத்னமாலிகா பாணியில்) எளிய தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வோர் ஆச்சார்யாருடைய பூர்வாசிரம பெற்றோர், பிறந்த ஊர், ஆற்றிய பணிகள், முக்தியடைந்த ஊர், நாள் முதலிய செய்திகளைத் திரட்டிக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க பணி. பெரும்பாலான ஆச்சார்யார்களைப் பற்றிய […]

Read more
1 2 3 9