சட்டமே துணை

சட்டமே துணை, பி.எஸ்.அஜிதா, தி இந்து வெளியீடு, விலை: ரூ.100 பெண்கள் தொடர்பான சட்டப் போராட்டங்களை எல்லோருக்கும் புரியும் எளிய மொழியில் சொல்கிறார் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா. பெண்களுக்கான சட்டங்கள் குறித்துச் சொல்வதோடு கூடுமானவரை குடும்ப அமைப்பு சிதையக் கூடாது என்பதும் கட்டுரையின் அடிநாதமாக ஒலிக்கிறது. இருட்டில் தவிக்கும் பெண்களுக்குக் கலங்கரை விளக்கமாகச் சட்டங்கள் துணைநிற்கும் என்ற நம்பிக்கையை இப்புத்தகம் ஏற்படுத்தும். நன்றி: தமிழ் இந்து, 25/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

மனித வாழ்வில் ஆவணங்கள்

மனித வாழ்வில் ஆவணங்கள்,  வழக்கறிஞர் தரும் விளக்கங்கள்,  ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நந்தவன படைப்பகம், பக்.176, விலை ரூ.200. சொத்துகளை விற்பது, வாங்குவது, சொத்துகளைப் பிறருக்கு எழுதி வைப்பது, சொத்துகளைப் பாகப்பிரிவினை செய்து கொள்வது, சொத்தை விற்பதற்கு பிறருக்கு உரிமை கொடுப்பது, சொத்தை அடமானம் வைப்பது, வாடகைக்கு விடுவது, குத்தகைக்கு விடுவது, கடன் வாங்குவது என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் நிகழத்தான் செய்கிறது. அந்த நிகழ்வுகளின்போது நாம் ஏமாறாமல் இருக்க, அது பற்றிய சட்டரீதியான தெளிவு நமக்கு மிகவும் அவசியம். உதாரணமாக, சொத்தை […]

Read more

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள்

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள், சோ.சேசாசலம், ஜீவா பதிப்பகம், பக்.280, விலை ரூ. 230 ஓர் அரசின் நிர்வாக கட்டமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்பது மிகவும் இன்றியமையாதது. அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைவதிலும், அடிப்படை வசதிகள், வரி வசூல், நிர்வாகம் போன்றவற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், 1919-இல் இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டங்கள், அதன் தொடர்ச்சியாக இயற்றப்பட்ட நகராட்சி சட்டங்கள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் எண்ணிக்கை, மாநகராட்சியை நிர்வகிக்க மக்களால் […]

Read more

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?, முவப்பிகா பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, நாடாளுமன்றத்தில் முத்தலாக் மகோதாவைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி கற்பதில் உரிமை, கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, விவாகரத்து உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை இஸ்லாம் வழங்கி உள்ளது. அந்த வகையில் முத்தலாக் சட்டம் தேவையற்றது என்பதை உடன்குடி மு.முகம்மது யூசுப் பல்வேறு ஆதாரங்களுடன் திருக்குர்ஆன் […]

Read more

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம்,வானதி பதிப்பகம், பக. 80, விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர்,2/12/18.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள், ஆ.சங்கரசுப்பிரமணியன், சைவ சபை, பக். 75, விலை 80ரூ. அன்றாட வாழ்விற்கு பயன்படும் சட்டங்களை எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தன், 53 ஆண்டு கால வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் என்ற நுாலில் தந்துள்ளார். சட்டங்களை விளக்குவதுடன், அதை வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தந்துள்ளது, படிக்க அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணச் சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து […]

Read more

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், பக்.144, விலை 100ரூ. சம்பள வருமானம் எப்படி கணக்கிடப்படுகிறது, வரி விலக்கு பெற்ற வருமானங்கள், அவற்றுக்கான கழிவுகள், வீட்டுச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம், டிவிடெண்டு, நிலம் மற்றும் வீடு போன்ற சொத்துகளை விற்கும்போது ஏற்படும் லாபத்தை கணக்கிடும் விபரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் பட்டியலிட்டுக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027079.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ. இந்தியாவில் வசிக்கும் தனிநபர் ஒவ்வொருவரின் வாழ்விற்கும் ஆதார் பதிவு ஆதாரமாக ஆகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஆதார் சட்டத்தை முழுமையாக விளக்கிக் கூறும் நூல். அனைவரும் தெரிந்து பயனடைய வேண்டிய தகவல்கள் ஆதார் சட்டம் ஓர் அறிமுகம், வகைமுறைகள், ஒழுங்குமுறை விதிகள் என 3 தலைப்புகளில் பயனுள்ள வகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டு உள்ளன. ஆதார் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் வகை செய்வதற்காக நமது அரசு 2016-ம் ஆண்டு […]

Read more

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், ஆலடி அருணா, விகடன் பிரசுரம், பக்.400, விலை ரூ.250. 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் கூட்டாட்சி பற்றியும் எழுதப்பட்ட இந்நூல், இன்றைய அரசியல் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள உதவுவதாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிர்வாகம், நிதி, நீதி, மொழிக் கொள்கை உட்பட பலவிஷயங்களில் எவ்வாறு மத்திய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்தும் பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதை நூல் விளக்குகிறது. மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். தன்னிடம் உள்ளநிர்வாகத்தை நேரடியாக அல்லது தமக்குக் கீழ் பணிபுரியும் […]

Read more

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது?, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. சட்டம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம், பல்வேறு பிரச்சினைகளுக்கு சட்டம் கூறும் தீர்வு என்ன என்பதை, சட்ட நிபுணர் ஏ.பி.ஜெயச்சந்திரன் கேள்வி – பதில் ரூபத்தில் எழுதியுள்ளார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more
1 2 3 4 10