எண்பதுகளின் தமிழ் சினிமா

எண்பதுகளின் தமிழ் சினிமா; ஸ்டாலின் ராஜாங்கம், நீலம் வெளியீடு, விலை: ரூ.150. எண்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களைச் சமூக, அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘எண்பதுகளின் தமிழ் சினிமா: திரைப்படங்களின் ஊடான தமிழ்ச் சமூக வரலாறு’ என்ற புத்தகம் ஒரு முக்கியமான வரவு. எண்பதுகளில் வெளியான சினிமாக்கள் என்னென்ன விஷயங்களைக் கையாண்டன, சமூகங்களை – குறிப்பாக, சாதிய உரையாடல்களை – சினிமாக்கள் எப்படிப் பிரதிபலித்தன, சினிமாக்களைச் சமூகங்கள் எப்படி உள்வாங்கிக்கொண்டன என்று சமூகத்துடன் திரைப் பிரதிகள் நிகழ்த்திய ஊடாட்டங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது […]

Read more

கேரக்டர் (பாகம் 1)

கேரக்டர் (பாகம்-1), கலைஞானம், பக்.336; ரூ.280- (பாகம்-2) நக்கீரன் வெளியீடு, பக். 328; விலை: ரூ.280;  திரைப்பட கதாசிரியர், நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறன் கொண்ட கலைஞானம் எழுதிய திரையுலக அனுபவங்களின் தொகுப்பு. சென்னை பாண்டிபஜாரில் கார் ஓட்டுநர்கள் 4 பேர் சினிமா கனவுகளுடன் இருந்தார்கள்.அவர்களின் கனவு நிறைவேறியதா… என்பதை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். அந்த 4 பேரில் ஒருவரான பாலகிருஷ்ணன் என்கிற கலைஞானம். கே.பாக்யராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் ஐயர் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர். […]

Read more

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள்

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக்.223, விலை 250ரூ. செல்லமுத்து வருவாய் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், கவிஞர் என்ற எழுத்து பணியில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்கிறார். காலத்தால் அழியாத என்.எஸ்.கிருஷ்ணனின் கலையுலக பயணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர் பாடி, நடித்த, 176 பாடல்களையும், மதுரம் அம்மையாருடன் இணைந்து நடித்த, 74 படங்களையும் நுால் வழியே தொகுத்து அளித்ததன் மூலம் சினிமா மீதும், கலைவாணர் மீதும் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது. கலை வித்தகனின் நடிப்பு, குணம், […]

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள் – பாகம் 1, தமிழில்: ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150. உலக அளவில் பிரபலமான திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஏழுபேரின் பேட்டிகள் அடங்கிய நூல். MASTERS OF LIGHT என்ற ஆங்கிலநூலின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. காந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பில்லி வில்லியம்ஸ்,  எக்ஸார்சிஸ்ட் ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மன்,  தி புளு லாகூன் ஒளிப்பதிவாளர் நெஸ்டர் ஆல்மன்ட்ராஸ் உள்ளிட்ட ஏழு ஒளிப்பதிவாளர்களின் திரைமொழி குறித்த உரையாடல்கள் கருத்தைக் கவர்கின்றன. இயக்குநர்தான் படத்தின் ஆணிவேர். இயக்குநரின் கற்பனையையும், […]

Read more

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி, சே ராஜேஸ்வரி வெளியீடு, சந்திரோதயம் பதிப்பகம்,விலை ரூ 200 புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டும் நூல்களில் இந்தப் புத்தகம் சிறப்பான இடத்தைப் பிடித்து இருக்கிறது. பெண்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த அபரிதமான மதிப்பு பற்றிய பல செய்திகள் இந்த நூலில் காணப்படுகின்றன. பெண்களுடன் பேசுவதற்கு எம்ஜிஆர் எந்த அளவு கூச்சப் படுவார் என்பது பல சம்பவ சான்றுகளுடன் தரப்பட்டிருக்கின்றன. அதேபோல் எம்ஜிஆர் நடித்த படங்களில் அண்ணன் தங்கை பாசம் எந்த […]

Read more

ரஜினிகாந்த் எனும் காந்தம்

ரஜினிகாந்த் எனும் காந்தம், ஆசிரியர் ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலை பிரசுரம், விலை 50 ரூ. சாதாரண நடிகராக திரைப்படத் துறையில் நுழைந்து குறுகிய காலத்தில் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக அதே சமயம் எதுவும் விட்டுப் போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன. அபூர்வராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரையும் அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும் ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய […]

Read more

சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள்

சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள், தொகுப்பு ஆசிரியர் கோவை சுந்தரம், விலை ரூ. 50 நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சிவாஜிகணேசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனப்படுவது உண்டு. அவற்றில் குறிப்பாக வாழ்ந்து மறைந்த உயர்ந்த மனிதர்களான வ.உ.சி., கட்டபொம்மன், பாரதியார், ராஜராஜசோழன் உள்பட பலரது கதாபாத்திரங்களில் சிவாஜி நடித்ததன் மூலம் அந்தத் தலைவர்களின் சிறப்பை மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்பதை இந்த நூல் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறது. இவற்றுடன் சிவன், திருமால், கர்ணன், பரதன் ஆகிய இடங்கள் உள்பட […]

Read more

ரஜினிகாந்த் எனும் காந்தம்

ரஜினிகாந்த் எனும் காந்தம், ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. சாதாரண நடிகராகத் திரைப்படத் துறையில் நுழைந்து, குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக, அதே சமயம் எதுவும் விட்டுப்போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரை அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும், ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய […]

Read more

சினிமா ரசனை

சினிமா ரசனை, அம்ஷன்குமார், சொல் ஏர் பதிப்பகம், விலை 275ரூ. தமிழ்நாட்டில் சினிமா ரசனை பெரிதாக வளர்ந்திராத காலத்தில், அயல் சினிமாவையும் நம் சினிமாவையும் புரிந்துகொள்வது எப்படி, அவற்றின் கலைநுட்பங்கள், தன்மை குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவந்தவர் இயக்குநர் அம்ஷன்குமார். மகாகவி பாரதி, சர் சி.வி.ராமன் குறித்த அவருடைய ஆவணப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000022755.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

சொல்லித்தந்த வானம்

சொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. திரை உலகில் தடம் மாற்றி யோசித்து, தடுமாறமல் நடைபோட்டு, தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மகேந்திரன். அவரது சிந்தனையும் செயலும் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா உலகினரையே வியக்கச் செய்தவை. மாற்றி யோசித்து மகத்தான கலைச்சேவை செய்த அவரைப்பற்றி மறக்க முடியாத தங்கள் நினைவுகளை திரை உலகைச் சார்ந்த சாராத பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த நூலில். மகேந்திரனின் எண்ணங்களைப் போலவே இதுவும் வித்தியாசமாக மணக்கிறது.. நன்றி: குமுதம், 23/10/19 […]

Read more
1 2 3 27