அப்துல் கலாம்

அப்துல் கலாம், வரலொட்டி ரங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 280, விலை 200ரூ. சிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த கனவு நாயகர் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களை கோர்வையாக, படிக்க அலுப்பு தட்டாத வகையில், 280 பக்கங்களில் விவரித்துள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. ‘காந்தி காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என்று ஒரு தலைமுறை பெருமை பேசியது என்றால், ‘நாங்கள் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என, இன்னொரு […]

Read more

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை, சிற்பி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 80ரூ. சிற்பி தன் கவிதைக்கு வயது ஐம்பதைக் கடக்கும் என்கிறார். இந்த ஐம்பதாண்டுகளில் கவிதைகயின் அகமும் புறமும் பெருமளவு மாறிப்போயிருந்தாலும், யாப்புகளில் புதிய பரிசோதனைகளும் மாற்றங்களும் நிகழ்ந்திருந்தாலும், மரபு நீங்காத புதிய காலப் பதிவுகளோடு இன்றைக்கும் புது சிறகோடு பறக்கிறது அவரது கவிதைப் பறவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், இசையரசியின் வாழ்க்கை பயணம், ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 800ரூ. கர்நாடக இசையுலகில் நிகரற்ற கலைஞராக விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி வெளியாகியிருக்கும் அவரது வாழ்க்கைப் பயண நூல் இது. மதுரை சேதுபதி பள்ளியின் திறந்தவெளியில் மதுரை சண்முகவடிவு வீணை வாசிக்க அவரது ஆறு வயதுக் குழந்தையான குஞ்சம்மா சற்று தொலைவில் மணல் வீடு கட்டி விளையாடுவதில் தொடங்கி, அந்த ஆறு வயதுக் குழந்தை “ஆனந்தஜா’‘ என்கிற மராட்டிய மொழிப் பாடலை முதன்முதலாக மைக்கில் பாடியது, மதுரை […]

Read more

ராமச்சந்திர ரகசியம்

ராமச்சந்திர ரகசியம், குமரவேல்,முல்லை பதிப்பகம், விலை 150ரூ. எம்.ஜி.ஆரின் சித்தாந்த சிறப்பை, பண்பாற்றைல பலர் சொல்ல மறந்த நுட்பங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர் வே. குமரவேல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   நின்று ஒளிரும் சுடர்கள், உஷா தீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. சிவாஜி கணேசன், எஸ்.வி. ரங்காராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, நாகேஷ் உள்பட 11 நடிகர்களின் சிறப்பை வர்ணிக்கும் நூல். எம்.ஜி.ஆர். பற்றியும் எழுதி இருக்கலாமே. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 800ரூ. இசையரசி “பாரத ரத்னா” எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் ரமணன். எம்.எஸ். பாடலைக்கேட்டு மகாத்மா காந்தியும், நேருவும் பாராட்டியிருக்கிறார்கள். ஐந்து திரைப்படங்களில் மட்டுமே நடித்த எம்.எஸ். அதன் பிறகு வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்துவிட்டு, இசைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். 1940-ம் ஆண்டில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், “கல்கி” சதாசிவமும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின், எம்.எஸ்.சை சிகரத்துக்கு கொண்டு சென்ற பெருமை சதாசிவத்துக்கே […]

Read more

முதல் குரல்

முதல் குரல், பாரதி பாஸ்கர்,கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. பலவகையான காய்கறிகளைக் கலந்து செய்த ருசியான – காரமான அவியல் மாதிரியான ஒரு தொகுப்பு இந்நூல். ஆம். ஒன்பது கட்டுரைகள், ஒன்பது கதைகள், எட்டு பதிவுகள் ஆகிய மூன்றின் கலவை. முதல் பெண் பேச்சாளர் யார்? சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த ஐஸ் ஹவுஸ் எப்படி விவேகானந்தர் இல்லமாக மாற்றப்பட்டது? மதுரையை விட்டு சென்னைக்குத் தனியாக வந்த எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாழ்க்கைப் பாதை மாறிய விதம் எப்படி? என்பன போன்ற கட்டுரைகள், நல்ல தகவல்கள். […]

Read more

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. எம்.ஜி.ஆர். வரலாறு புத்தி கூர்மை, சாதுர்யம், சாதக சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுதல், தகுந்த சூழ்நிலைக்காகக் காத்திருத்தல், மீன் கொத்திய வேகத்தில் தூண்டிலை ‘சரக்கென்று’ வெளியே வீசி எடுக்கும் தூண்காரனைப்போல சாதகச் சூழ்நிலை அமைந்த வேகத்தில் அதைப் பயன்படுத்தி நினைத்ததை ஜெயித்தல், எதிரிகளை வசப்படுத்துதல், வளைந்தும், நெளிந்தும், நிமிர்ந்தும் தனது பயணப் பாதைக்கு பங்கம் வராதபடி தொடர்ந்து முன்னேறுதல் – எல்லா வாழ்வியல் வித்தைகளும் அறிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வாழ்க்கையில் நடந்த […]

Read more

பாட்டுடைத் தலைவி

பாட்டுடைத் தலைவி, லட்சுமி ராஜரத்தினம், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 224, விலை 160ரூ. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 1,200 சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொடர்கள், மாத நாவல்கள் என்று பன்முகத் தன்மையோடு எழுதி வருபவர் லட்சுமி ராஜரத்னம். அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை, ஒரு சிலர்தான் உணர்வூட்டி கருவாக்கி, கற்பனை கலந்து கதையாக உருப்பெற்றெடுக்கிறார்கள். அந்த வகையில் லட்சுமி ராஜரத்னம் படைத்திருக்கும் ஒரு நெடுங்கதை தான் இந்த பாட்டுடைத் தலைவி. ரவி, ராதா, நிர்மலா மற்றும் அவர்களைச் சார்ந்த மனிதர்களின் வாயிலாக வாழ்க்கைச் […]

Read more

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை, ராகுல சாங்கிருத்தியாயன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 400ரூ. இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், ரஷியாவிலிருந்து பாய்ந்தோடும் நதி வால்கா. இது 9,690கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இந்த நதிக்கரையில் வசித்தவர்கள்தான் இந்தோ – ஐரோப்பிய இனத்தவர்கள் (ஆரியர்கள்). இவர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளில் மெல்ல மெல்ல நகர்ந்து, சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் (இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்புறத்தில்) குடியேறினர். இந்தக் காலக்கட்டத்தில் (கி.மு. 6000 ஆண்டு முதல் 1942 வரை) மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை […]

Read more

கடல்களும் கண்டங்களும்

கடல்களும் கண்டங்களும், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. அறிவியல் நூல்களை எழுதுவதில் புகழ் பெற்ற “வாண்டுமாமா” எழுதிய நூல் “கடல்களும் கண்டங்களும்”. “உலகம் உருண்டையானது அல்ல; தட்டையானது” என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த சிலர் கடலின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கப்பலில் பயணம் செய்து, புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். அவர்களில், அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக், கனடாவை கண்டுபிடித்த ஜான் கபாட் உள்பட 14 […]

Read more
1 2 3 4 5 8