விலை மதிக்க முடியாத உயிர்கள்

விலை மதிக்க முடியாத உயிர்கள், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. தி.மு.க.வின் இலக்கிய அணி புரவலரான முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி ஏற்கனவே 3 நூல்களை எழுதி இருந்தாலும், தற்போது ‘விலை மதிக்க முடியாத உயிர்கள்’ என்ற தலைப்பில் 19 சரித்திர பெண் மணிகளின் விலை மதிக்க முடியாத, வீரமிக்க, மனிதாபிமானமிக்க செயல்களை கவிதையாக படைத்து உள்ளார். இதில் பலர் தியாகங்களும், இதுவரையில் முழுமையாக வெளிவராத தியாகங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இலங்கையில் நடந்த விடுதலை போரில் இன்னுயிர் நீத்த பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அங்கையற்கண்ணி, […]

Read more

இனியவளே

இனியவளே, என்.சி.மோகன்தாஸ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. ‘இனியவளே வா… கால் சிலம்புகள் கண்ணகியிடமே இருக்கட்டும். கானல் வரிகள் கனவிலும் வேண்டாம். நாம் மூவரும் இணைந்து, இங்கே சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுதுவோம்’ என்று சொல்லும் மோகன்தாஸ், ஒரு அருமையான முக்கோணக் காதல் கதையை தந்திருக்கிறார். கோபியின் காதலி யாமினி. இருவரும் வேளாங்கண்ணிக்கு, சுற்றுலா செல்கின்றனர். ஒரு மழைநாளில் அவர்கள் முதலிரவு. இடி எனும் மேளதாளத்தோடு, மின்னல் தெறிக்கும் மத்தாப்போடு, காற்று எனும் சாமரத்தோடு, மழை எனும் அட்சதையோடு அங்கே நடந்து முடிகிறது. […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம் (கௌதம புத்தரின் பிரக்ஞா பரமிதா இதய சூத்திரம்), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 448, விலை 350ரூ. இந்நூலில் பத்து தலைப்புகளில் கூறப்பட்டுள்ளவற்றை ஓரிரு பத்திகளில் விளக்கிவிட முடியாது. பக்கத்திற்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்து, திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் நூல். ‘நான் ஒரு புத்தர்’ என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்கட்டும். மேலும் இந்த ‘நான்’ என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ‘நான்’ மற்றும் புத்தநிலை ஆகிய இரண்டும் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. வெளிச்சம் உள்ளே வரும்போது இருட்டானது […]

Read more

வேலி

வேலி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்களை படைத்தவரும், பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவருமான வாஸந்தி படைத்த 14 சிறுகதைகள் கொண்ட நூல். “மனுசத்தனம் இல்லாத குலப் பெருமை நமக்கு வேணாம்! ஒரு பெண்ணோட மனசு எப்படிப்பட்டதுன்னு அவங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கிறது கூடத் தெரியுமா? முகமே இல்லாத கும்பலா போயிட்டோம். இப்படியே வாயை மூடிக்கிட்டு இருந்தோம்னு வெச்சுக்குங்க, நமக்குன்னு அடையாளமே இருக்காது. அவங்க சொல்றதுதான் […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம், ஓஷோ, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகப் புகழ்பெற்ற ஆன்மிகக் குருவாகத் திகழ்ந்தவர் ஓஷோ. மனித குலத்தின் விழிப்புணர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னைக் கொண்டறிதலும், தியானமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். அவரது இதய சூத்திரம் என்ற நூலைத் தமிழில் சுவாமி சின்மானந்த் மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிக அன்பர்களின் இதயம் கவரும் நூல். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- குருசேத்திரக் குடும்பங்கள், ஜோதிர்லதா கிரிஜா, பூம்புகார் பதிப்பகம், விலை 145ரு. இருவேறு பொருளாதார நிலையில் வாழும் இரு குடும்பங்களின் வாழ்வை […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழில் உருவான முதல் காப்பியம் ‘சிலப்பதிகாரம்’. ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் புகழப்பட்ட நூல். இயல், இசை, நாடகம் என்ற இலக்கண எல்லைக்குள் இடம் பெற்ற முத்தமிழ் நூல் எனப் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரத்தை கதை வடிவில் வீ. இளவழுதி எழுதியுள்ளார். மாணவர்களுக்கு பெரும் பயனளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- கட்டுரைக் கதம்பம், மு. ஸ்ரீனிவாஸன், அருள் பதிப்பகம், விலை 150ரூ. கண்ணன் வாழ்ந்த துவாரகை, சேழர்களின் தலைநகரும், உலகின் […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 110ரூ. கனடாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பிறக்காதவர்கள். அதாவது, 120 நாட்டு மக்கள், பிறந்த நாட்டைவிட்டு, இங்கு வந்து குடியேறியவர்கள் என்கிறார் நூலாசிரியர் சா. கந்தசாமி. இது வழக்கமான பயணக்கட்டுரை அல்ல. தகவல்கள், வரலாறுகளின் குவியல் இந்நூல். உதாரணத்திற்கு விமானத்தில் சிற்றுண்டியாக வறுத்த வேர்க்கடலையைத் தருகிறார்கள். உடனே நூலாசிரியரின் நினைவு வேர்க்கடலையின் தாயகமான மணிலாவுக்குப் போய்விடுகிறது. மணிலாவிலிருந்துதான் இந்த ‘peanut’  இன்று உலகம் முழுவதும் பரவி விளைவிக்கப்பட்டு, பணப்பயிராக மாறியிருப்பதன் வரலாற்றைக் […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 110ரூ. 60 ஆண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா. கந்தசாமி படைத்த பயணக் கட்டுரை நூல். கனடா நாட்குறிப்பு தனிப்பட்ட வாழ்க்கை என்பதைத் தாண்டி, பொதுவாகவே இருக்கிறது. வேறுநாடு, வேற்று மனிதர்கள் என்பதால் வாழ்க்கை அடியோடு மாறிவிடுவதில்லை. அது எப்போதும் போலவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறார்கள். அதுவே வாழ்க்கை என்பதை […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

செல்லப் பிராணிகள் வளர்ப்பு

செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டாய் கூறப்படுவது நாய். காவல் காப்பதிலும், ஆபத்து காலத்தில் உதவுவதிலும் நாய்க்கு நிகரான விலங்கு இல்லை. அதுவே மனிதர்களின் செல்லப் பிராணிகளில் முதலிடம் பெறுகிறது. அத்தகைய நாய்களை முறையாக வளர்பப்து எப்படி? என்பது பற்றி பல சுவையான, சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் ஆசிரியர் வாண்டு மாமா விவரித்துள்ளார். மேலும் பூனை வளர்ப்பு, முயல் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வெள்ளெலி, சீமைப் பெருச்சாளி, தேனீ வளர்ப்பு போன்றவை பற்றியும் இந்த […]

Read more
1 2 3 4 5 6 8