இந்தியாவும் ஈழத்தமிழரும்

இந்தியாவும் ஈழத்தமிழரும் (அவலங்களின் அத்தியாயங்கள்), நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, பக். 320, விலை 250ரூ. இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தனி நாடு கோரும் அமைப்பினரை ஒடுக்கவும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டதுதான் இந்திய அமைதிப் படை (ஐ.பி.கே.எஃப்.). இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப் படை இலங்கையில் தங்கியிருக்க வேண்டும் என இந்தியா, இலங்கையிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளை அடக்கி, […]

Read more

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், சேவியர், தோழமை வெளியீடு, சென்னை, பக். 184, விலை 150ரூ. மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்ததிலிருந்து கல்வி கற்றது, நாடக உலகில் புகுந்தது, திரையுலகில் சாதித்தது என அவரது வரலாறு சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. பாலசந்தர் எடுத்த குறிபிடத்தக்க திருப்புமுனைத் திரைப்படங்கள், அவர் அறிமுகப்படுத்தி உயரத்துக்குச் சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாசர், சரத்பாபு, சரிதா, விவேக் போன்ற நட்சத்திரங்கள், அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி சாதனைகள் புரிந்த வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, செல்வராகவன் […]

Read more

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள்

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள், நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-561-4.html ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக்கொலைக்கு ராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனத்துக்கு உரியவை. சிங்கள அரசின் இரவல் […]

Read more

காரியக் காமராசர் காரணப் பெரியார்

காரியக் காமராசர் காரணப் பெரியார், மே.கா. கிட்டு, தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 125ரூ. காமராசர், பெரியார் என்னும் இரு பெரும் தலைவர்கள் ஒரே இயக்கத்தில் வளர்ந்து வெவ்வேறு திசையில் அரசியலில் பயணித்தாலும், ஒருவர் மீது மற்றவர் கொண்ட மரியாதை அரசியல் நாகரிகத்தை இந்த நூல் பறை சாற்றுகிறது. காங்கிரஸ் கட்சியை வெறுத்துக் கொண்டே, காமராசர் என்ற அந்த பெருந்தலைவரை, அவரது ஆட்சியை பெரியார் ஆதரித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு அளிக்கிறது. மக்கள் தொண்டாற்றிய அந்த […]

Read more

ஆனந்த விநாயகர்

ஆனந்த விநாயகர், டாக்டர் பாலமோகன்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், பக். 256,விலை 195ரூ. விநாயகப் பெருமான் ஞானகாரகன். அவ்வைப் பிராட்டிக்கு முத்தமிழைத் தந்த வேத முதல்வன். ஆனந்த விநாயகர் வரலாறு, புராணக் கதைகள், விநாயக பிம்பத்தின் சிறப்பு, அணிகலன்கள், வாகனம், ஆயுதங்கள், திருவிழாக்கள், திருத்தலங்கள், இந்திய நாடு மட்டுமல்லாது, கடல் கடந்த நாடுகளில் உள்ள விநாயகர் கோவில்கள், பூஜை, சடங்குகள், நைவேத்தியங்கள், மந்திரங்கள், அகவல்கள் என மிக்த தெளிவாக ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று புறந்தள்ளாது, மூல நூல் போன்ற வாசிப்பை இந்நூல் வழங்குகிறது. தமிழில் […]

Read more

எதற்கு ஈழம்?

எதற்கு ஈழம்?, தீபச்செல்வன், தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே.நகர், சென்னை 78, விலை 175ரூ. ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், […]

Read more

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும்

எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும், விந்தன், தோழமை வெளியீடு, 5 டி, பொன்னம்பலம் சாலை, கே. கே. நகர், சென்னை – 78, விலை 80 ரூ. பெரியாருக்கு சினிமா பிடிக்காது. அவருக்குப் பிடித்த சினிமாக்காரர் எம்.ஆர்.ராதா. ராதா தன்னுடைய வாழ்க்கையை சினிமாவுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அவருக்கு சினிமாக்காரர்களைப் பிடிக்காது. காரணம், அவர்களிடம் இருந்த போலித்தனம். அந்த போலித்தனம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர்தான் ராதா. “வீட்டிலே சோறில்லை. டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும்  சுருக்கமாச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் […]

Read more
1 2