உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. மிர்சா அசதுல்லா கான்காலிப் இந்தியாவில் வாழ்ந்த உருதுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது கஸல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. காதலும் மனிதமும் உள்ளவரை காலிப்பின் கவிதைகளும் உயிர்த்திருக்கும். இந்தியாவிற்குப் பெருமை தரக்கூடிய இப்பிரபஞ்சக் கவிஞரின் வாழ்வையும் அவரது படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்திருப்பது தமிழுக்கும் பெருமை. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

வளர்பிறைகளும் தேய்பிறைகளும்

வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. சிலரது வாழ்க்கை வளர்பிறை போல வளரும். சிலரது வாழ்க்கை தேய்பிறைபோல தேயும். இதற்கு என்ன காரணம் என்பதை இஸ்லாமியப் பின்னணியில் விளக்கும் சமூக நாவல். நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய பனையடியூரில் இஸ்லாம் எவ்வாறு வேரூன்றி செழித்து வளர்ந்தது என்பதை இப்பகுதி மக்களின் கலாச்சார பண்பாட்டு நோக்கில் பதிவு செய்யப்பட்ட நாவல் இது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/1/2017.

Read more

வான் தொட்டில்

வான் தொட்டில், முனைவர் ஆ. மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக். 192, விலை 125ரூ. தன்னை உணர்ந்தவன் ஞானி. சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்ற கவிதையாய் கொட்டுகிறது இந்நுல். நன்றி: தினமலர், 06/11/2016.   —-   வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. ஆசிரியர் தன் முதல் நாவலில் அனைத்து வகை சுவைகளையும் கூட்டி எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள், அரு. வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 120ரூ. வேதியியலில் சாதனை புரிந்த அறிவியல் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் பற்றி எழுதப்பட்ட நூல். மாணவர்களுக்கு உபயோகமான நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —-   ஐந்திரன் கவிதைகள், ஐந்திரன், லெனின் விஜி பதிப்பகம், பக். 260, விலை 120ரூ. சமூக அவலங்களை உடுத்துக் கூறும் மக்களுக்கான கவிதைகள். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.

Read more

பூபாள இராகங்கள்

பூபாள இராகங்கள், நா. அப்துல் ஹாதிபாகவி, ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம், பக். 150, விலை 100ரூ. சமூக அவலம், வறுமை, கொடுமை, சமத்துவம், பெண்ணுரிமை, இஸ்லாம் இந்த மானுட சமுதாயத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் என்று பலவற்றையும் கவிதைகளாகத் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- திருக்குறள் தமிழ் ஆங்கில உரை, மு.க.அன்வர்பாட்சா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 344, விலை 200ரூ. பாமரர்களும், மாணவர்களும் எளிதில் புரியும் வண்ணம் புதிய சிந்தனைகளுடன் திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரை நூல். தமிழோடு ஆங்கிலத்திலும் உரை […]

Read more

கவிதை ஓர் ஆராதனை

கவிதை ஓர் ஆராதனை, கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 176, விலை 125ரூ. கவிதை மனிதனை ஒழுங்கானவனாக்குகிறது. அழகனாக்குகிறது. கவிதை அழகை ஆராதிக்கிறது. அதாவது ஆண்டவனை ஆராதிக்கிறது. இப்படி மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆராதனை செய்யும் கவிதைகளின் தொகுப்பு கவிக்கோ வரிகளில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- டாக்டர் போத்தியின் கவிதைகள், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. கால்நடை மருத்தவரான போத்தி, பல்வேறு காலங்களில் தமிழரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய […]

Read more

காந்தி எனும் மனிதர்

காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதயா இலக்கியப் பண்ணை, விலை 100ரூ. மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில்இந்தியர்களின் உரிமைக்காக போராடியபோது, அவருடன் பழகியவர், இந்த நூலை எழுதிய திருமதி மிலி கிரகாம் போலக். “நான் அவரை (காந்தியை) எப்போதும் ஒரு மகாத்மாவாகவோ, புனிதராகவோ, நுட்பமான அரசியல்வாதியாகவோ அறிந்திருக்கவில்லை. அன்பும், மகத்தான கருணையும் நிறைந்த மனிதராகவே அவர் இருந்திருக்கிறார். இந்த மகத்தான மனிதரை வாசகர்களுக்கு கவனப்படுத்துவதே என் நோக்கம்” என இந்த நூலை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறார் நூலாசிரியை திருமதி போலக். நன்றி: தினத்தந்தி, […]

Read more

வரலாறு படைத்த மாமனிதர்கள்

வரலாறு படைத்த மாமனிதர்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. முன்னாள் ஜனாதிபதிகளான ஜாகீர் உசேன், அப்துல் கலாம், மவுலானா அபுல் கலாம் ஆஸாத், மகாகவி இக்பால் உள்பட 9 மாமனிதர்கள் பற்றிய வரலாறு. இவர்களின் வாழ்க்கை, இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி வாழ்க்கை என்பதை ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் எளிய நடையில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு, பிரபோதரன் சுகுமார், அயக் கிரிவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. யோக சாதனைகளின் முயற்சியில் இறங்குவதற்கு […]

Read more

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை)

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை), நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 200ரூ. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு என்பது பாரதியாரின் பாராட்டுரை. வள்ளுவர் தந்த பொதுமறையாம் திருக்குறள், தனி மனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் எழுதப்பட்டது. திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்தபோதிலும், ‘திருக்குறள் தூதர்’ மு.க. அன்வர் பாட்சா, எளிய உரையை எல்லோருக்கும் புரியும் வகையில் தந்திருக்கிறார். மேலும், ஆங்கிலம் அறிந்த மாணவர்கள் பயனடையும் வகையில் பாதிரியார்கள் டபிள்யூ.எந்.ட்ரூ, ஜான் லாசரஸ் […]

Read more

பட்டுத்தெறித்த பார்வைகள்

பட்டுத்தெறித்த பார்வைகள், பேராசிரியர் தி. இராசகோபாலன், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. ஆங்கிலத்திலும், தமிழிலும், பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும் ஒருங்கே வல்லவரான பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதியுள்ள பட்டுத்தெறித்த பார்வைகள் என்ற நூலில் உள்ள கருத்துகள், நடைகள் எல்லாமே பொறிகளாகத்தான் திகழ்கிறது. எடுத்துக்காட்டாக சாயம் போன சேலையை பார்த்திருப்பீர்கள். சாயம் போன சொக்காயைப் பார்த்திருப்பீர்கள். சாயம் போன ஒரு நாட்டை பார்த்திருக்கிறீர்களா? எந்த நாடு அந்த நாடு? எந்த நாடு விவசாயத்தை புறக்கணித்து, விவசாயிகளை தற்கொலைக்கு ஆளாக்குகின்றதோ, அந்த நாடு சாயம் போன நாடு. […]

Read more
1 2 3