காலத்தை வென்ற கலாம்

காலத்தை வென்ற கலாம், செயின்ட் பிரிட்டோ கல்விக் குழுமம் வெளியீடு, சென்னை, விலை 70ரூ. மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றி நிறைய புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை செயின்ட் பிரிட்டோ கல்விக்குழுமம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ் எழுதிய காலத்தை வென்ற கலாம் என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். கலாம், திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்தவர். அந்த முறையில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ். […]

Read more

பொன்மொழிகள்

பொன்மொழிகள், தந்தை பெரியார், திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 30ரூ. தந்தை பெரியார் பொன்மொழிகள் பெரியார் ஈ.வே.ரா. பொன்மொழிகள் கொண்ட புத்தகம், 1949-ம் ஆண்டு திருச்சி திராவிடமணி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அதை அன்றைய காங்கிரஸ் அரசு தடைசெய்தது. பின்னர் 1979-ல் பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அந்தத் தடையை அ.தி.மு.க. அரசு நீக்கியது. தடை நீக்கப்பட்ட புத்தகத்தை, இப்போது திராவிட கழகம் வெளியிட்டுள்ளது. அரசியல், மதம், கடவுள், சமுதாயம் இயக்கம், ஆட்சி, மொழி முதலான தலைப்புகளில் பொன்மொழிகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. சிந்தனைக்கு விருந்தளிக்கும் […]

Read more

துடியான சாமிகள்

துடியான சாமிகள், நா. இராமச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 292, விலை 240ரூ. நெல்லில் பதரைக் கலந்தோமோ? முக்கடல் சங்கமம் ஆகும் குமரி மாவட்டத்து கிராமக் கோவில்களில் நடக்கும் வில்லுப்பாட்டை, மிக விரிவாகக் கள ஆய்வு செய்கிறது இந்த நூல். வன்கொலை செய்யப்பட்டு தெய்வம் ஆக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் ஆறு கதைகள், ஆய்வு செய்யப்பட்டு, அதன் வழி வரலாறு, பண்பாடு, சமூகச் சூழல் ஆராயப்பட்டுள்ளன. கலப்பு மணமும், அதனால் எழும் சிக்கல்களும் முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை, சின்ன நாடான் கதையில் […]

Read more

வெள்ளை நிழல் படியாத வீடு

வெள்ளை நிழல் படியாத வீடு, லாங்ஸ்ன் ஹியூஸ், மாயா ஏஞ்சலு, எதேல்பர்ட் மில்லர், தமிழில் ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, பக். 64, விலை 40ரூ. தமிழ்ச் சூழலில் கருப்பு கவிதைகள் அமெரிக்காவில், கருப்பின மக்கள் எதிர்கொண்ட நிற, இனவெறி ஒடுக்குதல் குறித்த, ஆப்ரோ அமெரிக்க இலக்கியங்கள், கருப்பு இலக்கியம் என குறிப்பிடப்பட்டன. அவற்றுக்கும், இந்தியாவில் தலித்துகள் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குதலுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக, தமிழில் வெளிவந்த, நிறப்பிரிகை, கவிதாசரண் போன்ற இதழ்கள் கருதின. அதனால், கருப்பு இலக்கியங்களை அவை தமிழில் மொழிபெயர்த்து அறிமுகம் […]

Read more

சிந்தனை ஒன்றுடையாள்

சிந்தனை ஒன்றுடையாள், கே.எஸ். சுப்ரமணியன், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு. மனிதனின் அடையாளம் எது? ஆசிய வளர்ச்சி வங்கியில் இயக்குனநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற, கே.எஸ். சுப்ரமணியன் எழுதி, அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள, சிந்தனை ஒன்றுடையாள் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மனிதனுக்கு, பெற்றோர், ஜாதி, மதம், நாடு, மொழி என பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இவற்றில், மொழி மட்டுமே இறுதியில் நிற்கிறது. ஆனால் மொழியும் அடையாளம் அல்ல. சிந்தனைதான் ஒருவரின் அடையாளம் என்கிறது இந்த நூல். அந்த […]

Read more

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள்

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள், ச. சுப்பராவ், பாரதி புத்தகாலயம், பக். 95, விலை 70ரூ. ஆங்கில நாவல்கள் குறித்து, புத்தகம் பேசுது இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன. திரில்லர் நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய கோமா. அடுத்து, மருத்துவத் துறையின் மோசடி குறித்து எழுதிய, டெத் பெனிபிட் நாவல். கிரைட்டனின் கதைகளை விவரித்து, தமிழில் விஞ்ஞானக் கதைகள் ஏன் அதிகளவில் வரவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் […]

Read more

மக்கள் சமூகத்தின் மனசாட்சி

மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 200, விலை 150ரூ. வீரமாமுனிவரின் ஒப்பற்ற தமிழ்தொண்டு அனைவரும் அறிந்தது. இத்தாலியில் இருந்து இந்திய மண்ணில், கிறிஸ்தவப் பணிபுரிய வந்த தொண்டரான அவரது இயற்பெயர், கான்ஸ்தன்ஸ் ஜோசப் எசோபியோ பெஸ்கி என்பதே. தமிழில் வீரவளன் என்றும், தைரியநாதர் என்றும், பின் வீரமாமுனிவர் என்றும் மாற்றம் கண்டது. தூயமுனிவர், இஸ்மத் சந்நியாசி, மலர்களின் தந்தை, புறநிலைக் காப்பியனார், குளுந்தமிழ்ச் சாத்தன், தெருட்குரு, வீர ஆரியவேதியன், திருமதுரைச் செந்தமிழ்த்தேசிகன், ராஜரிஷி, குருசாமியார் என்ற பெயர்களாலும் அவர் […]

Read more

நதி மூலம்

நதி மூலம் (நாவல்), விட்டல் ராவ், விஜயா பதிப்பகம், பக். 392, விலை 225ரூ. தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான நாட்களை, இந்த நாவல் பதிவு செய்கிறது. நீலனோ, காலனோ என்று அந்நாள் ஜனங்கள் சொல்லி நடுங்குமாறு, இந்தியர்களைக் கொன்று குவித்த, லெப்டினென்ட் கர்னல் நீல் துரையின் சிலை அகற்றும் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு மறியல், வாணிவிலாஸ் தியேட்டரில், வள்ளி பரிணயம் நாடகத்தில் மிஸ். ரத்னாபாய், பண்டித ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பாடும்போது போலீஸ் தடுப்பது, போன்ற பல சரித்திர நிகழ்வுகளை நாவல் […]

Read more

கவுடலீயம் – பொருணூல்

கவுடலீயம் – பொருணூல், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், செண்பகா பதிப்பகம், பக். 664, விலை 400ரூ. கவுடல்யா, விஷ்ணு குப்தர் எனும் பெயர்களைக் கொண்டவர் சாணக்கியர். அவர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எனும் பொருள் நூலின் தமிழ் வடிவம்தான் கவுடலீயம். அர்த்தசாஸ்திரம் என்பது, பொருள் நூல் எனப்படும். இதன் மூன்று அதிகரணங்களைத் தமிழ் விளக்கவுரையுடன் பண்டிதமணி கதிரேச செட்டியார் படைத்துத் தந்துள்ளார். புலனடக்கத்தைத் துறவிக்கு உரியது என்று நாம் நினைப்போம். ஆனால் புலனடக்கம், மன்னனுக்கும் தேவை என்று உணர்த்தியுள்ளார் சாணக்கியர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவன், தொடுக்கப்பட்டவன் […]

Read more

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம், மாதவ் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. தமிழ் ஆதிமொழி என்று சுவாமி விவேகானந்தரும், திருக்குறளே என் வழிகாட்டி என்று ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாயும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் தமிழ் வாசகம் ஐ.நா.சபையின் முகப்பிலும்… இப்படி மாற்றாரும் மதித்துப் போற்றும் பெருமைகளைக் கொண்டது தமிழ். ஆனால் தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கிலம் பேசும் இன்றைய தலைமுறையினருக்கு தமிழின் சிறப்புகள் சிறிதும் தெரியவில்லை என்று ஆதங்கப்படும் இந்நூலாசிரியர், அவற்றை இந்நூலில் உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். […]

Read more
1 4 5 6 7 8 11