நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

நினைவுகள் நிறைந்த வெற்றிடம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 100ரூ. எழுத்ளரும் மங்கையர் மலர் பொறுப்பாசிரியருமான ஜி.மீனாட்சி, சிறுகதை எழுதுவதில் தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டிருக்கிறார். கதைகளை வீணாக வளர்க்காமல், ரத்தினச் சுருக்கமாக எழுதுவார். அதுவும், நல்ல தமிழில் அமைந்திருக்கும். கதைகளில் நிச்சயம் ஒரு மெசேஜ் இருக்கும். இந்த சிறுகதைத் தொகுதியில் 12 கதைகள் உள்ளன. எல்லா கதைகளிலும் அவருடைய முத்திரைகளாகப் பதிந்துள்ளார். நினைவுகள் நிறைந்த வெற்றிடம் என்ற கதை, புரட்சிகரமானது. நெஞ்சில் அதிர்வுகளை உண்டாக்குகிறது. சிந்திக்க வைக்கிறது. […]

Read more

உலகை உலுக்கிய வாசகங்கள்

உலகை உலுக்கிய வாசகங்கள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 432, விலை 200ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு உலகை உலுக்கிய வாசகங்கள் என்ற தலைப்பில் தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடர்ந்து 101 வாரங்கள் எழுதி வந்தார். அந்தத் தொடர் இப்போது தந்தி பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. சிந்தனையாளர், ஆன்மிகவாதிகள், அறிவியல் அறிஞர்கள், சங்க காலப் புலவர்கள் வழங்கிய பொன்மொழிகளைக் கூறி அதற்கு ஆழ்ந்த விளக்கம் அளித்துள்ளார். உலகின் முதல் புரட்சியாளர் புத்தர், ஆர்க்கிமிடிஸ், சாக்ரட்டீஸ், ஸீஸர், சீன […]

Read more

வரலாறு படைத்த மாமனிதர்கள்

வரலாறு படைத்த மாமனிதர்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. முன்னாள் ஜனாதிபதிகளான ஜாகீர் உசேன், அப்துல் கலாம், மவுலானா அபுல் கலாம் ஆஸாத், மகாகவி இக்பால் உள்பட 9 மாமனிதர்கள் பற்றிய வரலாறு. இவர்களின் வாழ்க்கை, இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி வாழ்க்கை என்பதை ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் எளிய நடையில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு, பிரபோதரன் சுகுமார், அயக் கிரிவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. யோக சாதனைகளின் முயற்சியில் இறங்குவதற்கு […]

Read more

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். […]

Read more

யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால்

யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால், நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர், நீதிநாயகம் சிவராஜ் வி.பாட்டில் ஃபவுண்டேசன் வெளியீடு, மதுரை, நன்கொடை 50ரூ. இந்தியா ஏன் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்? ஆன்மிக நோக்கில் ஒரு புரட்சிகரமான பார்வையை, விரிந்தளாவிய மனப் பக்குவத்தை இந்தியாவுக்கு வழங்கிய விவேகானந்தரின் சிந்தனைகளின் தொடர்ச்சியாக நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் திகழ்கிறார். இந்தியா ஏன் ஒரு மதச்சார்பின்மை நாடாக இருந்தாக வேண்டும் என்பதற்கு இந்த இருவருமே இந்திய ஆன்மிக மரபைத் துணைகொண்டு விளக்கம் தருகிறார்கள். இந்திய வரலாற்றை மதமோதல்களின் வரலாறாக மாற்றுவதற்குப் […]

Read more

முகமற்றவர்களின் அரசியல்

முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப், உயிர்மை பதிப்பகம், விலை 110ரூ. ஆதிக்க வர்க்கம் அதிகாரப் பசி கொண்டு அலைகிறது. அதிகாரத்திற்கு மாற்று வழியாக, மதவெறியை அது பயன்படுத்தப் பார்க்கிறது. மனித மூளைகளில் மத விஷம் ஏற்றுகிறது. தேசத்தை மரண வாயில் நோக்கி அது அழைத்துச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியல் தேவைகள் இங்கே பூமிக்குக் கீழே புதைக்கப்படுகிறது. புதிய சமூகம் படைப்போம் என பிணந்தின்னும் பிசாசுகளே, இங்கே கூக்குரலிடுகின்றன. அரசியல் கட்சிகள் அடித்தட்டு மக்களின் ரத்தம் குடித்து மகிழ்கின்றன. இஸ்லாமியர்களும் சாமான்ய மக்களும் இங்கே […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், பிரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. ஆண், பெண் வாழ்வில் ஒரு புரிதலை ஏற்படுத்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அக்கட்டுரைகளின் மூலம் தனது பால்ய காலம் தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம் பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூலாசிரியர் பிரியா தம்பி. காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை என்று கூறுவார். ப்ரியாவின் […]

Read more

மாண்புமிகு முதலமைச்சர்

மாண்புமிகு முதலமைச்சர், கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் பெரியபுராணத்தை கதையாக பாடிய சேக்கிழார். அவரது வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் படைக்கப்பட்ட புதினம் இது. சரித்திரப் புதினங்களைப் படைக்க விரும்புவோருக்கு வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், இலக்கியப் புலமையும் இருந்திடல் வேண்டும். புதினத்தைப் படைப்பதற்காகத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் நிலவிய சமூகச் சூழ்நிலை, கலாச்சாரச் செழிப்பு, பழக்க வழக்கங்கள் இவை பற்றிய செய்திகள் தெரிந்திருக்க வேண்டும. இவை அனைத்தோடு, வீரம், காதல், போர்க்களத்தந்திரங்கள் இவற்றைப் […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 500ரூ. தமிழ் இலக்கியத்தில், திருவள்ளுவரின் திருக்குறளுக்கு அடுத்தபடியாக சிறப்புக்கு உரியவை அவ்வையாரின் நீதி நூல்கள். ஆயினும், அவ்வையார் என்ற பெயருடன் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் பற்றியும், அவர்களுடைய படைப்புகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவ்வையார் பற்றி விரிவான ஆய்வுகள் செய்து, 683 பக்கங்கள் கொண்ட இந்த பெருநூலை எழுதியுள்ளார், முனைவர் தாயம்மாள் அறவாணன். எட்டு அவ்வையார்கள் இருந்ததாக, இவர் தமது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார். சங்க கால அவ்வையாரின் வாழ்க்கை […]

Read more

வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., தொகுப்பு வெ. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. திரை உலகிலும், அரசியல் வானிலும் அசைக்க முடியாத இடத்தை பெற்றவர். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரது பெருமைகள், சிறப்புகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், சினிமா இயக்குநர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளை வெ. குமரவேல் தொகுத்து வழங்கியுள்ளார். ஏழைகளிடம் எம்.ஜி.ஆர். காட்டிய பரிவு, வீடு தேடி வந்தவர்களுக்கு அவர் அளித்த விருந்தோம்பல் பண்பு, தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் […]

Read more
1 3 4 5 6 7 11