லைட்டா பொறாமைப்படும் கலைஞன்

லைட்டா பொறாமைப்படும் கலைஞன், இசை,  காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 100ரூ. சில்லென்று ஒரு தொகுப்பு! பாரதியின் கவிதைகளைப் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றைக் கொண்ட இந்த கட்டுரைத் தொகுப்புக்கு நடிகர் வடிவேலுவைப் பற்றிய சின்னகட்டுரை ஒன்றின் தலைப்பை வைத்திருக்கிறார் கவிஞர் இசை. ஒரு வினோதமான ஆசை இது என்று முன்னுரையில் குறிப்பிடும்போதே இசை இந்த கட்டுரைத் தொகுப்பு எப்படி இருக்கும் என்பதைக் கோடிட்டுக்காட்டிவிடுகிறார். பெருமாள் முருகன் கவிதைகளுடனான பயணம், திருடன் மணியன் பிள்ளை புத்தகம் பற்றிய கட்டுரை, ஞானக்கூத்தன் கவிதைகள், கட்டுரை, க.மோகனரங்கனின் […]

Read more

பிள்ளையார் அரசியல்(மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள்)

பிள்ளையார் அரசியல், மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள், ஆ. சிவசுப்ரமணியன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 204, விலை 140ரூ. மத அடிப்படைவாதிகளின் மனசாட்சியை உலுக்கும் கட்டுரைகள் வரலாறு என்பது அதிகார வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எழுதிக் கொண்ட புனைவுகள் என்பார் எழுத்தாளர் சாருநிவேதிதா. காலம்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறே, முழுமை பெற்ற வரலாறாக நம் முன் வைக்கப்பட்டது. அதையும் நம்பிக்கொண்டிருந்தோம். கடந்த 1990களின் துவக்கத்தில் ஆய்வுலகில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டது. அது விளிம்பிலிருந்து மைய வரலாறை அணுகியது. அன்றிலிருந்துதான் வரலாற்றில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன் பிரசன்னா, மயிலை முத்துக்கள் வெளியீடு, பக். 359, விலை 300ரூ. ஒன்றை ஒன்று முந்தாத புனைவும் தரவும்! புனைவுகளில் கவிதைக்கும் நம்மிடம் இருக்கும் ஆர்வம் சிறுகதைகளில் இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில் ஆர்வமாக எழுதி வரும் புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஹரன்பிரசன்னா. இது அவருடைய முதல் தொகுப்பு. பால்யத்துக்கு சென்று வரும் ‘வயது’, மனநல மருத்துவமனைகளின் குரூர முகங்களை சொல்லும், ‘மீண்டும் ஒரு மாலைப் பொழுது’, தமிழ் பெண்ணை காதலிக்கும் மலையாளியின் பயங்கள் கொண்ட‘ ஒரு காதல் கதை‘, இரண்டு […]

Read more

நீராதிபத்தியம்

நீராதிபத்தியம்,(புளு கோவிநட்), ஆங்கிலம் மார்ட் விக்டோரியா பார்லோ, தமிழில் சா.சுரேஷ், எதிர்பதிப்பகம். மார்ட் விக்டோரியா பார்லோ ஆங்கிலத்தில் எழுதிய புளு கோவிநட் என்ற நூலை சா. சுரேஷ் நீராதிபத்தியம் என தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். எதிர் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. சர்வதேச தண்ணீர் நெருக்கடியால், தண்ணீர் ஓர் உரிமை என, உலகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் பற்றி, இந்த நூல் பதிவு செய்துள்ளது. இன்று, பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரையே அனைவரும் குடிக்கிறோம். அதை குழந்தையைப்போல, போகுமிடம் எல்லாம் ஆரத் தழுவிக்கொண்டே செல்கிறோம். பாட்டில் […]

Read more

இவர்தான் சந்துரு

இவர்தான் சந்துரு, நிதர்ஸனா, மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 126, விலை 100ரூ. இழப்பதற்கு தயாராக இருந்தால் வாழ்க்கை ஏராளமான விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் என்ற அடிப்படை பாடத்தை இப்போது வரை நான் மறக்கவில்லை எனும்(பக். 11), நீதியரசர் கே. சந்துருவின் கட்டுரைகள், நேர்காணல்கள், உரைகள், கேள்வி – பதில்கள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. கோவிலில் பெண்கள் பூசாரியாக இருக்கலாம். சென்னை நகரில் விளம்பர பலகைகளை நீக்க வேண்டும். நூலகங்களுக்குப் பொரத்தமற்றவர்களை நியமிப்பது ஒரு இனத்தின் கலாசாரத்தையும், சரித்திரத்தையும் அழிப்பதற்குச் சமம் இப்படி எத்தனையோ […]

Read more

சி.பா. ஆதித்தனார்

சி.பா. ஆதித்தனார், முகிலை இராஜபாண்டியன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. மக்கள் தமிழ் எனும் எளிமைத் தமிழ் உரைநடையை உருவாக்கி பாமரர்களையும் பத்திரிகை படிக்க வைத்தவர், சி.பா. ஆதித்தனார். லண்டனில் பார்ஸ்டர் பட்டம் பெற்று சிங்கப்பூரில் மிகப்பெரிய வழக்கறிஞராக விளங்கினார். இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்ததன் விளைவாக பல இன்னல்களுக்கிடையே தாயகம் திரும்பினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் மீதும், இதழியல் மீதும் நாட்டம் கொண்ட ஆதித்தனார், தமிழன், மதுரை, முரசு, தந்தி போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தமது இதழ்களில், […]

Read more

அவன் அவள் அன்லிமிடெட்

அவன் அவள் அன்லிமிடெட், கோகுலவாச நவநீதன், சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஆண் பெண் இடையிலான குணநல வேறுபாடுகளை, நகைச்சுவைப்பட விளம்புகிறது இந்த நூல். குங்குமம் இதழில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தற்போது வெளியாகி உள்ளது. இவள் மாறாமல் இருப்பாள் என்ற நம்பிக்கையோடு ஆணும், இவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கையோடு பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருமே ஏமாறுகின்றனர். பெண்களுக்கு பிடித்த சிறந்த ஆண் என்பவன்,அவர்களின் பிறந்த நாளைச் சரியாக நினைவில் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற எண்ணற்ற புன்னகைக்க வைக்கும் […]

Read more

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 320, விலை 140ரூ. இந்த நூல், சமயம் சாராத சமூகச் சீர்திருத்த அமைப்புகள் பற்றி முழுமையாக எடுத்துரைத்துள்ளது. தீண்டாமைக் கொடுமை, ஜாதி ஒழிப்பு, பிறப்பு வழி ஜாதி உயர்வு ஆதிக்கம், அவற்றின் அவலங்களை மிகத் துல்லியமாக உணர்த்துகிறது. இந்தியாவின் துன்பங்களான வறுமை, ஜாதி முதலிய இரண்டு குழப்பங்கள், சமத்துவம் குறித்த பாரதியின் அணுகுமுறை ஆகியவற்றை நூல் விளக்குகிறது. பாரதியின் ஓர் அரிய கடிதம் இதில் இடம் பெற்றுள்ளது. பாரதி தம் நோக்கில், பிராமணர், […]

Read more

ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 448, விலை 300ரூ. படிக்க படிக்க தீராத அதிசய பிறவி! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022658.html இந்த 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், தன்னை கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தையே உருவாக்கி, உலக வரலாற்றை மாற்றியமைத்த வல்லமை பொருந்திய ஒரு தனி நபரின் ஆளுமையையும், வன்மத்தையும் பற்றிய சுவாரசியமான நூல் இது. ஹிட்லர் பற்றி எத்தனை நூல்கள் வரலாற்றில் வந்தாலும் அத்தனையையும் படிக்கத் தோன்றும் அதிசயப் பிறவி அவர். எத்தனை சர்ச்சைகள், […]

Read more

சீறாப்புராணம்

சீறாப்புராணம்(மூலமும் உரையும்), உமறுப்புலவர், உரையாசிரியர் செய்குத் தம்பி பாவலர், யுனிவர்ஸல் பப்ளிகேஷன்ஸ், முதல் பாகம் பக். 850, விலை 500ரூ, இரண்டாம் பாகம் பக். 968, விலை 600ரூ. ஒப்பாரும் மிக்காருமற்ற தன்னிகரில்லாத் தலைவராக, முகமது நபியை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே சீறாப்புராணம். தமிழ் இலக்கியத்தில் கம்பராமாயணம் ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பிறகே பல சமய காப்பியங்கள் உருவாகின. அந்த வகையில் சீறாப்புராணமும் மதம் கடந்து தமிழ் இலக்கியவாதிகளால் வாசிக்கப்பட்டு வருகிறது. புராணத் தலைவரின் பெருமைகளையும், அற்புதங்களையும் கூறும்போதுஅதனுடனே, தமிழ் மொழியின் செறிவையும், வளத்தையும் பாடல்களில் […]

Read more
1 2 3 4 5 11