வேதகணிதம்

வேதகணிதம், (உலகின் அதிவேக மணக்கணக்கு முறை), அன்பழகன் தேவராஜ், தமிழ் அங்காடி, பக். 188, விலை 165ரூ. கணிதம் என்றாலே மாணவர்கள் மத்தியில் ஒருவித வெறுப்பு இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அனால் கணிதத்தை முறையாகக் கற்றுக்கொண்டால் அதைவிட, சுலபமான பாடம் எதுவும் இருக்காது என்பதுதான் உண்மை. கோலம் முதல் கோயில் கோபுரம் வரை எல்லாவற்றிலும் கணிதம் நீக்கமற நிறைந்துள்ளதை அறிய முடியும். அனைத்துவித அறிவியல் துறை வளர்ச்சிக்கும், கோயில் வடிவமைப்புக்கும் கணிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய அவசர யுகத்தில் காகிதத்தையும், எழுதுகோலையும் கையாளுவது […]

Read more

மாவீரன் மருதநாயகம்

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. மருதநாயகம் என்ற வீரனை மாவீரனாக உருவகப்படுத்தும் புதினம். இந்துவாகப் பிறந்த மருதநாயகம் ஒரு முஸ்லிமாக வாழந்து ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணந்தான். எல்லா மதங்களையும் மதித்தான். யூசுப்கானாக மாறி தன் வீர பராக்கிரமத்தால் ஆங்கிலேயரை மிரள வைத்தான். தன்னை மதுரைக்கு கவர்னராக்கிய பிரிட்டிஷாருக்கு விசுவாசத்தையும் விவேகத்தையும் காட்டி ஏமாந்து போனான். தமிழ்நாட்டையே பிரிட்டிஷாருக்கு தாரைவார்த்துக் கொடுத்ததுன் அவன் செய்த மாபெரும் தவறு. பிராய்ச்சித்தம் தேடிக்கொண்டபோது, பக்கத்தில் இருந்தவர்கள் காட்டிக்கொடுத்தார்கள். பயத்தில் இருந்த […]

Read more

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு, இரா. ரவிக்குமார், கொங்குமண்டல ஆய்வு மையம், உடுமலைப்பேட்டை, பக். 368, விலை 250ரூ. பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் ஒலித்து வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமான தக்க சமயத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. மதுப்பழக்கத்தினால் தனிமனிக்கும், அவனைச் சார்ந்துள்ளோருக்கும், சமுதாயத்துக்கும் ஏற்படும் பேராபத்துகள் பற்றி ஆசிரியர் இந்நூல் தெளிவாகக் கூறியுள்ளார். பழைய இலக்கியங்களில் சோமபானம், சுராபானம் என்று கூறப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில்தான் மதுவின் தாக்குதல் தமிழகத்தில் அதிகமாகியது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் […]

Read more

திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன்

திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன், சீ.பிரமிளா, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 100ரூ. தமிழ்க் கவிதைத் திறனாய்வில் சிலம்பொலி செல்லப்பனாரின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடாகி தற்போது நூலாகியிருக்கிறது. பிற மொழி இலக்கியத் திறனாய்வுகளை விடத் தமிழ் இலக்கியத் திறனாய்வு மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அந்த வரிசையில், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், கவிதை நூல்கள் எனப் பலவற்றுக்கும் திறனாய்வுகளை மேற்கொண்டவர் சு. செல்லப்பன். சங்க இலக்கியத் திறனாய்வு, […]

Read more

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

மார்க்சிய சிந்தனை சுருக்கம் (மூலதனம் பற்றிய எளிய விளக்கம்), தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 184, விலை 135ரூ. சமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸி எழுதிய மூலதனம் என்ற நூலின் சாராம்சத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல். பொருளியல் அறிவுடையவர்கள் மட்டுமே மார்க்ஸின் மூலதனத்தைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, பாமர மனிதர்களும் மூலதனத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பெரிய முயற்சியின் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நூலை மார்க்சிய […]

Read more

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும், உமரி காசிவேலு, வர்ஷன் பிரசுரம், பக். 520, விலை 350ரூ. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் தாக்கம் வலுவானது. உலக வரலாறே கிறிஸ்துவுக்கு முன் பின் என்றுதான் பகுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறது. தேவமைந்தன் ஏசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம் ஏக போதித்ததுபோல அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் மதப்பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தத்தால் திகிலடைவர். இந்தப் பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதாரங்களுடன் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கும் […]

Read more

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ கி.பி. 1741- ஆம் ஆண்டுகளில் குளச்சலில் மார்த்தாண்ட வர்மா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதில் ஆரம்பித்து கி.பி. 1859ஆம் ஆண்டு வரையிலான இந்தியச் சுதந்திரப்போர் குறித்த பல்வேறு தகவல்களை நூலாசிரியர் தேதி வாரியாகத் தொகுத்தளித்துள்ளார். இந்திய சுதந்திரப் பெரும்போரில் பங்கேற்ற முஸ்லிம் மன்னர்கள், சிப்பாய்கள், தளபதிகள், இளவரசர்கள், மௌலவிகள், அரசிகள் உள்ளிட்டோர் குறித்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட சரித்திரச் சான்றுகளை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்நூல். கி.பி. 1831ஆம் ஆண்டு முதல் கி.பி. […]

Read more

சுந்தரி

சுந்தரி, வ.ரா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 150ரூ. தமிழ் வசன நடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னோடியும் மணிக்கொடி ஆசிரியருமான வ.ரா. எழுதிய நான்கு நாவல்களில் இதுவும் ஒன்று. சுந்தரி ஓர் அற்புதமான நவ இலக்கிய பொக்கிஷம். எனக்கு இலக்கியப் பிரக்ஞை ஓரளவு உண்டானதாக நான் மதிக்கும் காலத்துக்குப் பின்பு, ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த நாவல்கள் நாலே நாலுதான். அதில் ஒன்று சுந்தரி என்ற நூலுக்கு முன்னுரை அளித்துள்ள தி.ஐ.ர. குறிப்பிட்டுள்ளார். நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களும் உயிர் […]

Read more

பூமித்தாய்

பூமித்தாய், தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. சிறந்த கார்ட்டூனிஸ்ட், சிறந்த எழுத்தாளர் என்று புகழ் பெற்றுள்ள மதன் எழுதிய சிறந்த நூல் இது. பூமியைப் பற்றிய உண்மைகளை மனிதன் அறிந்துகொள்ளாமல் இருந்த காலக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நகைச்சுவை ததும்ப எடுத்துக்கூறுகிறார். பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலத்தில், இல்லை இல்லை. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று புரூனோ என்ற இத்தாலிய நாட்டு அறிஞர் சொன்னார். உண்மையைச் சொன்னதற்காக அவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை. அவரை உயிரோடு தீயில் எரித்துக் […]

Read more

தந்தை பெரியார் பிறந்தநாள் மலர்

தந்தை பெரியார் பிறந்தநாள் மலர், விடுதலை வெளியீடு, சென்னை, விலை 120ரூ. தந்தை பெரியாரின் 136வது பிறந்த நாளையொட்டி விடுதலை வெளியிட்டுள்ள மலர், கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது. மறைந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, கி. வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்பட பல தலைவர்கள், பிரமுகர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வண்ணப்படங்களும் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- போட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள், ஜெ. வீரநாதன், பாலாஜி கணிண […]

Read more
1 2 3 4 5 6 11