வேத கணிதம்

வேத கணிதம், அன்பழகன், நோஷன் பிரஸ், பக். 187, விலை 220ரூ. வேத கணிதம் எனப்படும் கணித சிந்தனையில், எளிய முறையில் எண்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 30 ஆண்டு காலமாக பிரபலமாக விளங்கி வரும் இந்த சிந்தனைகளையே நூலாசிரியர், ‘வேத கணிதம்’ என்ற தலைப்பில், இந்த நூலில் வழங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் இந்த கருத்துகளை குறிப்பிட்டிருந்தாலும், தமிழில் அவ்வளவாக புத்தகங்கள் அமையவில்லை. அந்த குறையை இந்த புத்தகம் நீக்கி உள்ளது. அதற்கு நூலாசிரியரை பாராட்டலாம். வேத கணித கருத்துகளில் […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், சீத்தாகந்த் மகாபாத்ரா, தமிழில் முனைவர் ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாடமி, பக். 208, விலை 125ரூ. பழங்குடி மக்களை விவரிக்கும் சிறுகதைகள்! இந்த நூல் 13 கதைகள் வழி, வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியர், புகழ்மிக்க கோபியாத் மொகந்தி, பழங்குடி மக்களின் வாழ்வியலைத் தம் கதைகளில் படம் பிடித்துக் காட்டுவதில் ஈடுபாடுடையவர். இந்த நூலிலும், ஒன்றிரண்டு கதைகள் அந்த பின்புலத்தில் அமைந்துள்ளன. இருப்பினும் குடும்பப் பாங்கான கதைகளும் இதில் உள்ளன. ‘அம்புப் படுக்கை, இருவீரர்கள், வீடு […]

Read more

ஊரங்கு உத்தரவு

ஊரங்கு உத்தரவு, பி.என்.எஸ். பாண்டின், வெர்கோபேஜஸ் பதிப்பகம். புதுச்சேரியை உலுக்கிய 10 நாட்கள் புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும், ‘ஊரடங்கு உத்தரவு’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். பி.என்.எஸ். பாண்டியன் எழுதிய இந்த நூலை, வெர்கோ பேஜஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது நடந்த போராட்டம். அவர் எழுத்தாளர் ஆன பின், ஒரு வரலாறாகப் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, புதுச்சேரியை, 1979ல் ஆண்டது. மத்தியில் ஜனதா ஆட்சி நடந்தது. புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி […]

Read more

நினைவில் நிற்கும் ஆசிரியர்

நினைவில் நிற்கும் ஆசிரியர், டாக்டர் ஆர். நடராஜன், ஆதாரம் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. லட்சியவாதிகளாய் திகழ்ந்த ஆசிரியர்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன், தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருந்த ஆசிரியர்களில் பலர், மிகுந்த அறிவாளிகளாகவும், லட்சியவாதிகளுமாய் திகழ்ந்தனர். தம் ஆசிரியப் பணியில் மிக மிக ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் விளங்கினர். தம்மிடம் பயிலும் மாணவர்களுக்குத் தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது போன்ற அக்கறையுடன் பாடம் நடத்தினர். நூலாசிரியர், அப்படிப்பட்ட ஆசிரிய ரத்தினங்களிடம் பயின்று, இன்று சமூகத்தில் மிக உயரிய நிலையில் இருப்பவர். […]

Read more

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 212, விலை 120ரூ. கழிவுநீர் வடிகால இணைப்பிற்குக் கூட, வார்டு கவுன்சிலருக்குக் கமிஷன் தர வேண்டியுள்ளது என்கிறார், பழ. கருப்பையா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவியிருக்கும் ஊழலைப் பற்றி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் தீய உறவைப் பற்றி அவர் பேசுகிறார். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? அவருக்கு, ப. சுப்பராயன் வரலாற்றைப் பரிந்துரைக்கிறோம். சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர். மாநில முதன்மை அமைச்சர், அரசியல் […]

Read more

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கம், (எழுத்தியல், சொல்லியல், புணரியல், பொருளியல், யாப்பியல், அணியியல் ஆறு தனி நூல்கள்), கலாநிலையம் கே. இராஜகோபாலாச்சாரியார், கண்ணப்பன் பதிப்பகம், ஆறு நூல்களின் மொத்த விலை 570ரூ. இலக்கண விளக்கம் என்ற பெயரில் வந்துள்ள, இந்த ஆறு நூல்களும், தமிழுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன. எளிய, இனிய நடையில், தமிழ் இலக்கணத்தை தெரிவிக்கின்றன. தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும் இலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. சொல்லுக்குஅடிப்படையான எழுத்து இலக்கணமும், சொல்லின் பெயர், வினை, இடை, உரி என்ற நான்கையும் விளக்கும் சொல் இலக்கணமும், சொற்கள் […]

Read more

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? தொகுதி 1

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? தொகுதி 1, புலவர் மா. நன்னன், ஏகம் பதிப்பகம், இரண்டு தொகுதிகள் சேர்ந்து விலை 1250ரூ. தமிழைப் பிழை இல்லாமல் எழுத வேண்டும். பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்பதில் பெரு விருப்பம் கொண்டவர் பேராசிரியர், புலவர் மா. நன்னன் ஆவார். எழுத்தாளர்கள், தாம் ஆளும் சொற்களின் திறத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். தக்க இடத்தில், தக்க சொல்லைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே அந்த உரைநடையின் பயன், தரம் போன்றவை விளங்கும். அந்த வகையில் நல்ல உரைநடையை எழுதுவதற்கு இந்த […]

Read more

அழகிய பாடல் வடிவில் சிலப்பதிகாரம்

அழகிய பாடல் வடிவில் சிலப்பதிகாரம், கிள்ளை வே. முனுசாமி, மணிமேகலைபிரசுரம், விலை 135ரூ. ஐம்பெரும் காப்பியங்களில் தலையாய காப்பியமாக சிலப்பதிகாரம் முழுவதையும் இனிய பாடல் வடிவில் வடிக்கப்பட்ட நூல். சிலப்பதிகாரம் பெரும்பான்மை தமிழ் மக்களிடையே இன்னும் சென்றடையவில்லை என்றே சொல்லலாம். பள்ளிப் பாடத்தில் ஒரு பாடலையே திரும்பத் திரும்ப சுட்டி, ‘சிலப்பதிகாரமே இவ்வளவுதானா’ என்று இளைய தலைமுறை என்னும் வண்ணம் நிலைமை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இளங்கோவின் செய்யுளாக்கம் கடினச் சொற்கள். பாரதியார், பாரதிதாசன் பாடலைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு, சங்க இலக்கியங்களைப் […]

Read more

ஒரு பிடி மண்

ஒரு பிடி மண், ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. கல்யாண பரிசு மூலம் தமிழ்த் திரை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீதர். 1965ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் யுத்தம் மூண்டபோது மக்களுக்கு வீரத்தையும், தேசபக்தியையும் உண்டாக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டார். அதற்காக அவர் எழுதிய கதைதான் ‘‘ஒரு பிடி மண்’’. இப்படத்தில் சிவாஜிகணேசன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், கே.ஆர்.விஜயா, பாரதி ஆகியோர் நடிக்க இருந்தனர். இந்த நிலையில் திடீரென்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, யுத்தம் நிறுத்தப்பட்டது. அதனால், […]

Read more

27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்

27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள், செந்தூர் திருமாலன்,  தினத்தந்தி பதிப்பகம், பக். 208, விலை 180ரூ. மனித வாழ்வில் நட்சத்திரங்களும், கிரகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்கள் மனிதனின் அங்கங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை, பார்வை, நிறம், குணம், ஆடை, அணிகலன், பூக்கள், தொழில், நைவேத்தியம், தூபம், மந்திரம், பலன் என்று தனித்தனியாக பல்வேறு அம்சங்கள் இந்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டள்ளன. அதன்படி உரிய நட்சத்திர கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதால் குறைபாடுகளைக் குறைத்துக் […]

Read more
1 6 7 8 9