மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்,  வெ. இறையன்பு, விகடன் பிரசுரம், விலை 140ரூ. மனித உடல் பல விசித்திரங்களின் தொகுப்பு, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அவசியமான பணி ஒன்றை ஏற்றுக்கொண்டு ஓயாமல் உழைக்கின்றன. அந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கும் விதத்தில் இந்த நூலை ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான வெ. இறையன்பு எழுதியுள்ளார். கண்கள் பேசும் மொழி, முடியைப் பற்றி நாம் இதுவரை அறியாத சில செய்திகள், புருவத்தின் […]

Read more

மயில்

மயில், அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், விலை 350ரூ. அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் அறிஞர் பெருமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இசை, இலக்கணம், இலக்கியம், சமயம், சமூகவியல், செவ்வியல், இலக்கியம், தகவலியல், நாட்டுப்புறவியல், புதினம், வரலாறு என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் சமுதாய மக்களுக்குப் பயன் தருவனவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பதிப்பித்து இருக்கிறார்கள் முனைவர் இராச. கலைவாணியும், முனைவர் வாணி அறிவாளனும். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- மு.வ. […]

Read more

இஸ்லாத்தில் முன்னுரிமைகள்

இஸ்லாத்தில் முன்னுரிமைகள், மௌலவி நூஹ்  மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. ஒரே நேரத்தில் இரண்டு செயல்கள் நம் முன்னே நிற்கின்றன. இதில் எதற்கு முன்னுரிமை கொடுபப்து? இடம், பொருள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்க வேண்டிய அம்சங்களை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் இஸ்லாத்தில் எந்தெந்த செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நூஹ் மஷ்ழரி இந்த நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார். தனி மனித நலனா? சமுதாய நலனா? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றால், சமூக நலனுக்கே முன்னுரிமை […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம், ஓஷோ, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகப் புகழ்பெற்ற ஆன்மிகக் குருவாகத் திகழ்ந்தவர் ஓஷோ. மனித குலத்தின் விழிப்புணர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னைக் கொண்டறிதலும், தியானமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். அவரது இதய சூத்திரம் என்ற நூலைத் தமிழில் சுவாமி சின்மானந்த் மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிக அன்பர்களின் இதயம் கவரும் நூல். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- குருசேத்திரக் குடும்பங்கள், ஜோதிர்லதா கிரிஜா, பூம்புகார் பதிப்பகம், விலை 145ரு. இருவேறு பொருளாதார நிலையில் வாழும் இரு குடும்பங்களின் வாழ்வை […]

Read more

தமிழின் பெருமை

தமிழின் பெருமை, முனைவர் மூ. இராசாராம், அல்லயன்ஸ் கம்பெனி, விலை 390ரூ. இந்த நூலின் முன்னுரையில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதியதுபோல, தமிழரின் தொன்மை முதல் புதிய கற்காலம் வரை தமிழ் மற்றும் தமிழர்தம் வளர்ச்சியை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த நூலை படித்தால் போதும். பண்டைய தமிழகம் என்றால் எது? என்று தொடங்கி தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ் பண்பாட்டின் தொன்மையை வரலாற்றுச் சான்றுகளோடு, 71 தலைப்புகளில் இந்த நூலாசிரியரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மூ. ராஜாராம் விளக்கி உள்ளார். இந்த நூலை […]

Read more

முல்லை மண் – மக்கள் – இலக்கியம்

முல்லை மண் – மக்கள் – இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. தமிழகத்தின் ஐவகை திணைகளில், முல்லைத் திணை பற்றிய ஆய்வாக, இந்த நூல் திகழ்கிறது. முல்லை பற்றிய 233 பாடல்கள் பாடிய, 82 புலவர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளனர். கிரேக்க, லத்தீன் உலக இலக்கியங்களுடன், முல்லைப் பாக்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. முல்லை மலர்களால் இத்திணைப் பெயர்கள் அமைந்ததும், முல்லைப்பண், முல்லை யாழ் பற்றிய விளக்கமும் தரப்பட்டுளள்ன. கற்பை முல்லையோடு மட்டும் சேர்த்து ‘முல்லை சான்ற கற்பு’ என்பதன் […]

Read more

நான் கண்ட அருட்செல்வர்

நான் கண்ட அருட்செல்வர், முனைவர் ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 121, விலை 100ரூ. அருட்செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மறைந்த பெகாள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் நினைவை போற்றம் வகையில், தன்னுடன் அவர் கொண்டிருந்த நட்பையும், பொது தொடர்பையும் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். ஆசியிவியல் நிறுவனத்தில் நடந்த, முதல் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு, அருட்செல்வர் வழங்கிய ஒத்துழைப்பு முதற்கொண்டு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில், அவர் கொண்டிருந்த ஈடுபாடு ஒவ்வொன்றும் விளக்கப்பெற்றுள்ளன. அருட்செல்வர் பற்றிய செய்திகளுடன், தமிழ் ஆய்வுச் சிந்தனைகளும், அரிய தமிழ்த் தரவுகளும் […]

Read more

மீண்டும் ஒரு மழைக்காலத்தில்

மீண்டும் ஒரு மழைக்காலத்தில், கவிஞர் தியாரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 194, விலை 210ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024600.html மனிதாபிமானமும், சமூகப் பிரக்ஞையும், சிந்தனைத் தெளிவும் உள்ள சிறந்த, 21 கதைகள். ‘சாமுத்யகா’ என்ற முதல் கதையே தனிச்சிறப்பு வாய்ந்தது. மலர் விட்டு மலர் தாவும் வண்டு போன்ற கதாநாயகன். ஆனால் அவன் அன்பு மனைவியையே, ஒரு மாற்றான் காமப் பார்வை பார்க்கிறான் என்று உணரும் சமயத்தில், அவன் தவறு அவனுக்கு உரைக்கிறது. நடைபாதை வாசிகளை […]

Read more

இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!

இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!, ப. திருமலை, முன்னேற்ற பதிப்பகம், பக். 192, விலை 130ரூ. தமிழகம் அறிந்த பத்திரிகையாளர் ப. திருமலை எழுதிய அரசியல், பொருளாதாரம், தேசிய பிரச்னைகள் சார்ந்த கட்டுரைகளின் அருமையான தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளில், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு இதழ்களுக்காக எழுதியவை இவை. ‘நடுங்க வைக்கும் சீனா, நடுக்கத்தில் நாம்’ என, இந்தியா சார்ந்த சர்வதேச பிரச்னையையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் நிகழ்வுகள் தானே என்று நினைத்து நாம் படித்தால், அதில் பல சம்பவங்கள் […]

Read more

ப்ளிங்க்

ப்ளிங்க், சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்து கொள்ளும் உத்திகளையும், வேக உணர்திறன் சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியதுதான் என்பதையும் உளவியல் ரீதியாக கற்றத் தருகிறார் நூலாசிரியர் மால்கம் கிளாட்வெல். ஆங்கிலத்திலிருந்து எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- குறுந்தொகை மலர்கள், ரமணி பதிப்பகம், விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் தனிச்சிறப்பு பெற்ற குறுந்தொகையைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல். பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவரான பேராசிரியை ப. அனுராதா, […]

Read more
1 4 5 6 7 8 9