சிந்திப்போமா?

சிந்திப்போமா?, க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, பக். 128, விலை 90ரூ. இந்தியாவுக்கு பின் விடுதலையடைந்த நாடுகளின் வளர்ச்சியை பட்டியலிட்டு, நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லையே என, தான் ஆதங்கத்தை, கல்வி, இலக்கியம், அரசியல், சமுதாயம் எனும் தலைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். தாய்மொழியாகிய சீன மொழியிலேயே பள்ளிக்கல்வி துவங்கி, பல்கலைக்கழக ஆராய்ச்சி கல்வி வரை நடத்தும் சீனா, உலக தரப்பட்டியலில் முன்னிடம் பெற்றிருக்கிறது. தாய்மொழியில் படித்தால், தரம் தாழ்ந்து விடும் என கூறும், தமிழக பல்கலைக்கழகங்கள், கண்டுபிடிப்பு சாதனை எதனையும் […]

Read more

ஸ்வரஜதி

ஸ்வரஜதி, சீதா ரவி, கல்கி பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. கல்கியின் ஆசிரியராக விளங்கிய, சீதா ரவி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இசையையும், மனித மனங்களையும் மிக நுணுக்கமாக அணுகி, அனுபவித் நூலாசிரியர், கதைகளாக வடித்திருக்கிறார். ஒரு மலர் மலர்ந்து இதழ் விரிப்பதைப் போன்ற வர்ணனைகள் மனதைக் கொள்ள கொள்கின்றன. ‘மடியிலிருந்து வீணையை இறக்கி வைத்தான் கமலம். வாசித்து முடித்த கல்யாணி ராகத்தின் ஒய்யார வளைவுகளும், ஒடுங்கிய முடுக்குகளும், மழை நாளின் குளிர்ச்சியாகச் சூழ்ந்திருந்தன. தியாகேசர் கோவிலில், அவள் நாட்டியம் செய்வதைப் பார்த்திருக்கிறான். […]

Read more

சின்ன அண்ணி

சின்ன அண்ணி, தேவி வெளியீடு, விலை 140ரூ. இயல்பான ஏழைகளின் வாழ்க்கை, வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகள், பாத்திரப் படைப்புகள், வர்ணனைகள், வட்டார வழக்குகளைப் புகுத்தி, அந்த மண்ணுக்குரிய மேன்மைகள், மென்மைகளை கதாபாத்திரம் மூலம் வாசகர் நெஞ்சில் பதிய வைக்கும் எழுத்தாளர் உமா கல்யாணி, அருமையான நாவலை படைத்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 85ரூ. தொழிலில் வெற்றி பெற கடின உழைப்பு தவிர்த்து வேறு சில காரணிகளும் தேவை என்பதை […]

Read more

இந்திய குடியரசுத் தலைவர்கள்

இந்திய குடியரசுத் தலைவர்கள், மு. ஆனந்தகுமார், அறிவுப் பதிப்பகம், விலை 40ரூ. இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் அதிகாரம், தகுதிகள், சம்பளம், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெட்டகமாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- கசங்கிய காகிதம், காளிதாஸ், சவுத் இந்தியன் போஸ்ட், விலை 50ரூ. காடு மரங்களை அழித்து விட்டு அதிக கட்டிடங்களைக் கட்டிவிட்டு எப்படித்தான் தோன்றுகிறதோ தொட்டியில் செடி வளர்க்க என்பது போன்ற பொதுநல கூர்மைப் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு நூல். […]

Read more

பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள்

பாட்டி சொன்ன புத்திசாலித்தனமான கதைகள், சரோஜா வைத்தியநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. நல்லதையே நினை, நல்லதையே செய், நல்லது நடக்கும். சோம்பேறியாக வாழாதே, சுறுசுறுப்புடன் வாழ், பிறரிடம் பொறாமை கொள்ளாதே, உழைப்பு உயர்வு தரும், நீயும் ஏமாறாதே, பிறரையும் ஏமாற்றாதே போன்ற நன்மை தரும் கருத்துக்களுடன் நம் பாட்டி சொன்ன கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- சிவங்கங்கைச் சீமை படமாத்தூர் வரலாறு, கோ. மாரிசேர்வை, தமிழில் எஸ்.ஆர்.விவேகானந்தம், காவ்யா வெளியீடு, விலை 300ரூ. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த படமாத்தூர் […]

Read more

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றங்கள்

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றங்கள், கார்த்திலியா, விலை 90ரூ. விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட மனித சமுதாயமே இந்த நூற்றாண்டில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினை புவி வெப்பமயமாதல். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், வாழ்வாதாரங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை முறைகள் பாதிக்கின்றன. இது குறித்து உலகளவில் விவாதங்கள், கருத்தரங்குகள் நடந்துவரும் நிலையில், சுற்றுச்சூழல் பிரச்சினை, உள்ளூரில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தால், தமிழகம் என்ன ஆகும்? ஆழிப்பேரலைக்கு அஞ்சாத காடுகள், வறட்சி போன்ற […]

Read more

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கோ.வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், விலை 900ரூ. வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்துக்கு கவிதை அழகு மிக்க வர்ணனைகளுடன் புதுவடிவம் கொடுத்த கம்பரின் அற்புதத் திறமையால், ராமாயணம் என்றாலே கம்பராமாயணம் என்று கூறும் அளவுக்கு பெருமை பெற்ற கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு, மிகச் சிறப்பான தெளிவுரையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அயோத்தியா காண்டத்தில் இடம் பெற்ற அனைத்து கவிதைகளுக்கும் விரிவான தெளிவுரையும், விளக்கமும் கொடுத்து இருப்பதுடன், கடினமான சொற்களுக்கான அர்த்தத்தையும் தந்து இருப்பதால், கம்பரின் காவிய சுவையை முழுமையாக […]

Read more

தோன்றியது எப்படி?

தோன்றியது எப்படி?, தனலெட்சுமி பதிப்பகம், விலை 375ரூ. காகிதம், பேனாக்கத்தி, காலனி, கத்தரிக்கோல், காக்குலேட்டர் (கணக்கிடும் கருவி), போன்ற எண்ணற்ற பொருட்களை தினந்தோறும் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எப்படி, யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்ற விஷயம் தெரியாது. இந்த நூலில் நாம் பயன்படுத்தும் 137 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை வாண்டு மாமா தருகிறார். இவை வெறும் பொழுதுபோக்காக படிக்கப்படும் விஷயங்கள் அல்ல. அறிவை வளர்க்கும் சுவாரசியமான தகவல்கள். மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —-   பாதச்சுவடுகள், பா. சிவன்பாரதி […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் உரை

தாயுமான சுவாமிகள் பாடல் உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், விலை 450ரூ. இந்திய தத்துவ ஞான மரபில் தாயுமான சுவாமிகளுக்கென்று தனியிடம் உண்டு. தாயுமானவர் ஒரு ஞானக்கடல். அதில் தத்துவ முத்துக்களும், தரங்குறையா பவழங்களும் நிரம்ப உண்டு. அத்தகைய தாயுமான சுவாமிகளின் பாடல்களை அரிய பழைய உரையுடன் க. இலம்போதரன் தொகுத்துள்ளார். “கல் எறியப் பாசி கலைந்து நன்னீர் காணும், நல்லோர் சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே” என்று எளிய உவமையைக் கூறி தாயுமானவர் நம்மைத் தெளிவுபடுத்துகிறார். மலரின் […]

Read more

புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல்

புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறள் எண்ணற்ற மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் மு. வரதராசனார் வரை ஏராளமானோர் உரை எழுதியுள்ளனர். இப்போது அருணா பதிப்பகம் 6 இன் 1 என்ற வகையில், திருக்குறள் மூலம், ஆங்கிலம் எழுத்துப் பெயர்ப்பு, ஜி.யு. போப் உரை, லாசரஸ் ஆங்கில விளக்கம், பரிமேலழகர் உரை, கீர்த்தியின் தமிழ் விளக்கம் என்று புதிய உரை நூலை வெளியிட்டுள்ளது. பின்னிணைப்பாக செய்யுள் முதற்குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது போற்றத்தக்க, பாராட்டத்தக்க […]

Read more
1 3 4 5 6 7 9