எனது வாழ்க்கைப் பயணம்

எனது வாழ்க்கைப் பயணம், மருத்துவர் சு. முத்துசாமி, தாய்த்தமிழ்ப்பள்ளி வெளியீடு, பக். 360, நன்கொடை 200ரூ. ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து, படித்து இன்று சிறந்த மருத்துவராக விளங்கும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தை கதைபோல் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.   —- அருட்பெருஞ்சோதி நாட்டிய நாடகம், அருள்பாரதி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 80, விலை 55 ரூ. வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்கள் படித்து நாடகமாக நடிப்பதற்கு ஏற்ற […]

Read more

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?, எஸ். சிதம்பரதாணுப்பிள்ளை, சித்தா மெடிக்கல் லிட்ரேச்சர் ரிசர்ச் சென்டர் வெளியீடு, பக். 158, விலை 100ரூ. பல நூல்களில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளின் சேகரிப்பு என்றாலும் பல கருத்துகள் படிக்க பயனுள்ளவையாக உள்ளன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.     —- துடுப்பும் தூரிகையும், முனைவர் செ. வில்சன், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்ட தொகுப்பு நூல். குறிப்பாக நம் மனதில் குடிகொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெடுக்கும் நூல். […]

Read more

வேலி

வேலி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்களை படைத்தவரும், பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவருமான வாஸந்தி படைத்த 14 சிறுகதைகள் கொண்ட நூல். “மனுசத்தனம் இல்லாத குலப் பெருமை நமக்கு வேணாம்! ஒரு பெண்ணோட மனசு எப்படிப்பட்டதுன்னு அவங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கிறது கூடத் தெரியுமா? முகமே இல்லாத கும்பலா போயிட்டோம். இப்படியே வாயை மூடிக்கிட்டு இருந்தோம்னு வெச்சுக்குங்க, நமக்குன்னு அடையாளமே இருக்காது. அவங்க சொல்றதுதான் […]

Read more

பிருகு சம்ஹிதா

பிருகு சம்ஹிதா, தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், விலை பிருகு சம்ஹிதா ரூ.500, விவாக தீபிகா ரூ.400. இந்து ஜோதிடத்தின் தந்தையாக விளங்கும் பிருகு மகரிஷியின் ஜோதிட நூல், “பிருகு சம்ஹிதா”. இந்த நூலை தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன் மொழி பெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள மகரிஷியின் ஜோதிடக் கருத்துகளை தமிழ் மரபுக்கேற்ற வகையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார். 12 ராசிக்குரிய பலன்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1,296 லக்ன பாவ பலன்களை உள்ளடக்கியது. இதே ஆசிரியர் […]

Read more

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. இந்து சமயத்தில் நிறைய சம்பிரதாயங்கள், சடங்குகள். ஆனால் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அர்த்தம் அறியாததால் அவை வீண் என்று கருதுகிறோம். அவற்றின் பயன் அறிந்து பலன் பெற இந்நூல் உதவும். கோவிலில் இறைவனை வழிபடுதல், பிரகாரத்தைச் சுற்றி வருதல், திருமுழுக்கு (அபிஷேகம்) செய்தல், தானம் செய்தல், பூஜையறையின் விதிமுறைகள் இவை போன்ற ஆன்மிகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய பல விஷயங்களை கேள்வி – பதில் வடிவில் தொகுத்து அளித்துள்ளார் […]

Read more

அகச்சுவடுகள்

அகச்சுவடுகள், கவிதாயினி அமுதா பொற்கொடி, வானதி பதிப்பகம், விலை 200ரூ. கவிதாயினி அமுதா பொற்கொடி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “வல்லினமின்றி மெல்லினமின்றி இடையினமாய் அவதரித்தவள் நான்” என்று திருநங்கைகளைப் பற்றி பாடும்போதும், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பில் ‘கலாவதி ஆனது நல வாழ்வு, கண்ணீரில் மிதக்குது பலர் வாழ்வு’ என்று மதுக்கடை பார்’ குறித்து சொல்லும்போதும் இவரது சொல்லாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில், அவர் சமூகக் கேடுகளையும், கலாச்சார சீரழிவுகளையும் சாடுகிறார். அவரது ஆழ் மனதின் உள்ளே உள் […]

Read more

தமிழியல் ஆய்வு வரலாறு

தமிழியல் ஆய்வு வரலாறு, முனைவர் அ. பிச்சை, கபிலன் பதிப்பகம், பக். 208,விலை 210ரூ. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக பேராசிரியர் குழுதான் தேவை! இலக்கிய ஆராய்ச்சி என்பது எவ்வளவுதான் அறிவியல் ரீதியாக செய்ய புகுந்தாலும், மக்கட்சமுதாயத்தினுடைய மரபுகளையும், குறிக்கோளையும், கற்பனைகளையும் உண்மை நிலையையும் அடியோடு மறுத்து எழுதுதல் இயலாது. எல்லோர்க்கும் ஒப்ப முடியும் கருத்தாக ஆராய்ச்சியின் முடிவு இருக்க வேண்டுவது இல்லை. அது சமுதாயத்தின் அறிவாக்கத்தில் சிறிதாகிலும் தூண்டுகையை உண்டாக்கும் வண்ணம் திகழும்போதே நிறைந்த ஆராய்ச்சி என, மதிக்கப்பெறுகிறது. இன்று மொழி, இலக்கணம், இலக்கியம் […]

Read more

விகடன் மேடை

விகடன் மேடை, விகடன் பிரசுரம், பக். 575, விலை 435ரூ. ‘அழகிரி உங்களுக்கு போட்டித் தலைவரா? அறிவியல், அரசியல், சினிமா, எழுத்தாளர்கள் என, பல்வேறு துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களின், கேள்வி-பதில் தொகுப்பு இந்த நூல். வெற்றி பெற, அவர்கள் பட்ட அவமானங்கள், சந்தித்துக் கொண்டிருக்கும் இடர்ப்பாடுகள், சமூகத்தின் மீதான பார்வை ஆகியவற்றைப் படிக்கும்போது, வாசகர்களுக்கு உத்வேகம் ஏற்படும் என்பது திண்ணம். அப்துல்கலாம், சகாயம், நீதிபதி சந்துரு போன்ற சமூக ஆர்வலர்களும், மு.க. ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களும், எஸ். ராமகிருஷ்ணன், […]

Read more

பழந்தமிழ் நூல்கள் தற்காலத்திற்கும் வழிகாட்டி நூல்கள்

பழந்தமிழ் நூல்கள் தற்காலத்திற்கும் வழிகாட்டி நூல்கள், ச.லோகம்பாள், சுந்தர்லோக் வெளியீடு, பக். 80, விலை 150ரூ. எந்த மொழியையும் சாராது தனித்தன்மையுடன் விளங்கும் தமிழ் மொழியின் சிறப்பை, இந்த நூல் விளக்குகிறது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் தனிப்பெரும் சிறப்புகள், மானுடத்தை நன்னெறிப்படுத்தும் ஒரே இலக்கில் நிற்கின்றன. ‘வால்மீகி ராமாயணமும், பாரதமும் வடநாட்டிலிருந்து தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர். ராமனும், கண்ணனும் தலைவர்களாகவே தமிழர்களால் சுட்டப்பட்டுள்ளனர். சைவம் ஒன்றே தென்னகத்திற்கு உரியது’(பக். 16), ‘மரபு சார்ந்த தமிழ் நூல்களே, தமிழர் நன்னெறி வாழ்வு என்னும் வாடாத […]

Read more

புத்தகங்கள் பார்வைகள்

புத்தகங்கள் பார்வைகள், வெளி ரங்கராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. வாசிப்பின் வழியே விரியும் உலகம் நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என கலை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் பற்றிய வெளி ரங்கராஜனின் கருத்தோட்டங்களை உள்ளடக்கியது இந்தப் புத்தகம். வெளி ரங்கராஜன், கலை இலக்கிய தளத்தில், பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர். தான் வாசித்த புத்தகங்கள் பற்றிய தனது விமர்சனத் தன்மையற்ற எளிய மதிப்பீடுகளை நம் முன் வைக்கிறார். புத்தகங்களைப் பற்றிய அறிமுகமாகவும், வாசிப்பவர்களுக்குத் […]

Read more
1 2 3 4 5 6 9