சிவமூர்த்திகள் 64

சிவமூர்த்திகள் 64, தெள்ளாறு M. மணி, சங்கர் பதிப்பகம் வெளியீடு, பக். 408, விலை 250ரூ. சைவம், சாக்தம் ஆகிய இரு சித்தாந்தகளிலும் பரம்பொருளை நிராகார ரூபமற்ற நிலை, அருவுருவ நிலை, ரூபமுள்ள நிலை – என்ற மூன்ற நைலகளிலும் தியானிப்பதாக ஹிந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் லிங்க வடிவ வழிபாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ரூபமற்ற அருவுருவமாக பரம்பொருள் இருந்தாலும், உருவ அம்சத்தில் சிவலிங்கம் இருப்பதால், அதனையே மூலமாக வைத்து 64 வடிவங்களில் மூர்த்திகள் உருவானதாக ‘சிவபராக்கிரம்’ என்கிற வடமொழி நூல் […]

Read more

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?, எஸ். சிதம்பரதாணுப்பிள்ளை, சித்தா மெடிக்கல் லிட்ரேச்சர் ரிசர்ச் சென்டர் வெளியீடு, பக். 158, விலை 100ரூ. பல நூல்களில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளின் சேகரிப்பு என்றாலும் பல கருத்துகள் படிக்க பயனுள்ளவையாக உள்ளன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.     —- துடுப்பும் தூரிகையும், முனைவர் செ. வில்சன், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்ட தொகுப்பு நூல். குறிப்பாக நம் மனதில் குடிகொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெடுக்கும் நூல். […]

Read more

எனது வாழ்க்கைப் பயணம்

எனது வாழ்க்கைப் பயணம், மருத்துவர் சு. முத்துசாமி, தாய்த்தமிழ்ப்பள்ளி வெளியீடு, பக். 360, நன்கொடை 200ரூ. ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து, படித்து இன்று சிறந்த மருத்துவராக விளங்கும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தை கதைபோல் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.   —- அருட்பெருஞ்சோதி நாட்டிய நாடகம், அருள்பாரதி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 80, விலை 55 ரூ. வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்கள் படித்து நாடகமாக நடிப்பதற்கு ஏற்ற […]

Read more

சமரன்

சமரன், ச. மோகனகிருஷ்ணன், தியாக தீபங்கள் வெளியீடு, பக். 600, விலை 400ரூ. சரஸ்வதி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த வ. விஜயபாஸ்கரன் நடத்திய விமர்சன இதழே ‘சமரன்’ என்ற அரசியல் இதழாகும். 1962-64 வரை சுமார் இரண்டாண்டு காலம் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்திய அளவில் அரசியல் கட்சிகள் சந்தித்த சவால்கள், நீதிக்கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் போன்ற மூத்த கட்சிகளுக்குள் நடந்த பிரச்னைகளை விமர்சித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், பேராசிரியர் இரா. மோகன், திருவரசு புத்தகநிலையம், பக். 282, விலை 180ரூ. மனித குலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையை, நெறியை ஏடுத்தியம்பும் இலக்கிய கட்டுரைகள் முப்பதைக் கொண்ட நூல். கவிஞர்களைப் பற்றிய கவி அமுதம், சங்க இலக்கியம் குறித்த செவ்வியல் அமுதம், இக்கால நடப்பியலை பதிவு செய்யும் சிந்தனை அமுதம் என இலக்கிய அமுதத்தை மூவகையாகத் தந்து சுவைக்க சுவைக்க இன்பமூட்டுகிறார் பேராசிரியர் இரா. மோகன். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.

Read more

அகச்சுவடுகள்

அகச்சுவடுகள், கவிதாயினி அமுதா பொற்கொடி, வானதி பதிப்பகம், விலை 200ரூ. கவிதாயினி அமுதா பொற்கொடி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “வல்லினமின்றி மெல்லினமின்றி இடையினமாய் அவதரித்தவள் நான்” என்று திருநங்கைகளைப் பற்றி பாடும்போதும், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பில் ‘கலாவதி ஆனது நல வாழ்வு, கண்ணீரில் மிதக்குது பலர் வாழ்வு’ என்று மதுக்கடை பார்’ குறித்து சொல்லும்போதும் இவரது சொல்லாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில், அவர் சமூகக் கேடுகளையும், கலாச்சார சீரழிவுகளையும் சாடுகிறார். அவரது ஆழ் மனதின் உள்ளே உள் […]

Read more

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. இந்து சமயத்தில் நிறைய சம்பிரதாயங்கள், சடங்குகள். ஆனால் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அர்த்தம் அறியாததால் அவை வீண் என்று கருதுகிறோம். அவற்றின் பயன் அறிந்து பலன் பெற இந்நூல் உதவும். கோவிலில் இறைவனை வழிபடுதல், பிரகாரத்தைச் சுற்றி வருதல், திருமுழுக்கு (அபிஷேகம்) செய்தல், தானம் செய்தல், பூஜையறையின் விதிமுறைகள் இவை போன்ற ஆன்மிகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய பல விஷயங்களை கேள்வி – பதில் வடிவில் தொகுத்து அளித்துள்ளார் […]

Read more

பிருகு சம்ஹிதா

பிருகு சம்ஹிதா, தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், விலை பிருகு சம்ஹிதா ரூ.500, விவாக தீபிகா ரூ.400. இந்து ஜோதிடத்தின் தந்தையாக விளங்கும் பிருகு மகரிஷியின் ஜோதிட நூல், “பிருகு சம்ஹிதா”. இந்த நூலை தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன் மொழி பெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள மகரிஷியின் ஜோதிடக் கருத்துகளை தமிழ் மரபுக்கேற்ற வகையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார். 12 ராசிக்குரிய பலன்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1,296 லக்ன பாவ பலன்களை உள்ளடக்கியது. இதே ஆசிரியர் […]

Read more

வேலி

வேலி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்களை படைத்தவரும், பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவருமான வாஸந்தி படைத்த 14 சிறுகதைகள் கொண்ட நூல். “மனுசத்தனம் இல்லாத குலப் பெருமை நமக்கு வேணாம்! ஒரு பெண்ணோட மனசு எப்படிப்பட்டதுன்னு அவங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கிறது கூடத் தெரியுமா? முகமே இல்லாத கும்பலா போயிட்டோம். இப்படியே வாயை மூடிக்கிட்டு இருந்தோம்னு வெச்சுக்குங்க, நமக்குன்னு அடையாளமே இருக்காது. அவங்க சொல்றதுதான் […]

Read more

பழந்தமிழ் நூல்கள் தற்காலத்திற்கும் வழிகாட்டி நூல்கள்

பழந்தமிழ் நூல்கள் தற்காலத்திற்கும் வழிகாட்டி நூல்கள், ச.லோகம்பாள், சுந்தர்லோக் வெளியீடு, பக். 80, விலை 150ரூ. எந்த மொழியையும் சாராது தனித்தன்மையுடன் விளங்கும் தமிழ் மொழியின் சிறப்பை, இந்த நூல் விளக்குகிறது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் தனிப்பெரும் சிறப்புகள், மானுடத்தை நன்னெறிப்படுத்தும் ஒரே இலக்கில் நிற்கின்றன. ‘வால்மீகி ராமாயணமும், பாரதமும் வடநாட்டிலிருந்து தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர். ராமனும், கண்ணனும் தலைவர்களாகவே தமிழர்களால் சுட்டப்பட்டுள்ளனர். சைவம் ஒன்றே தென்னகத்திற்கு உரியது’(பக். 16), ‘மரபு சார்ந்த தமிழ் நூல்களே, தமிழர் நன்னெறி வாழ்வு என்னும் வாடாத […]

Read more
1 8 9 10 11 12 336