இந்திய ரெயில்வே தொடக்க காலம்

இந்திய ரெயில்வே தொடக்க காலம், எஸ். வெங்கட்ராமன், சென்னை, விலை 800ரூ. இந்திய ரெயில்வேயில் நீண்ட காலம் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ். வெங்கட்ராமன் (தற்போது வயது 92). அவர் இந்தியாவில் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கியது, அதற்குக் காரணமாக இருந்தவர் யார், ஆரம்ப கால ரெயில் எப்படி இருந்தது என்பதை எல்லாம் ஆராய்ந்து, இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 500 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம், முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. சுமார் 600 படங்கள் இடம் பெற்றுள்ள. புத்தகத்தின் தொடக்கத்தில் பிரதமர் […]

Read more

நலம் 360

நலம் 360, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணர்வுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்தும் மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். நம் உடல் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்து பராமரிப்பதை மறந்துவிடுகின்றோம். விளைவு? செயற்கை கருத்தப்பரிப்பு மையங்களின் பெருக்கம், மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை குறைந்திருப்பதன் எதிரொலி, இளைய தலைமுறையினர் இது மாதிரியான மையங்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மறந்ததுதான். சுத்தம் என்ற நல்ல […]

Read more

வடகரை

வடகரை, ஒரு வம்சத்தின் வரலாறு, டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 400ரூ. ஒரு வம்சம், 600 ஆண்டு காலத்தில் எப்படியெல்லாம் துளிர்த்தும் துவம்சம் ஆகியும் உருமாறிக்கொண்டு இருந்தது என்பதைச் சொல்லும் வரலாறு இது. புனைவுகளில் மட்டும்தான் திடுக்கிடும் திருப்பங்களும் அலற வைக்கும் அழுகைகளும் நல்லது கூடிவரும்போது குலமே கெட்டுப்போகும் அளவுக்கு இழப்புகளும் இருக்க முடியுமா? இல்லை, உண்மை வரலாற்றிலும் இப்படி படிநிலை வளர்ச்சியைப் போல நடக்கும் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்துக்காரராக டாக்டர் மு. ராஜேந்திரன் இருக்கிறார். எங்கோ […]

Read more

இந்தியப் பயணக் கடிதங்கள்

இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா ஃபே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. பல்வகை இடர்கள், துன்பங்களுக்குப் பின் களிப்பூட்டும் நல் ஓய்வு அளிக்கும் இடமாக இந்த நகர் அமைந்திருக்கிறது. வசீகரிக்கும் அழகுடன் இந்த நகர் மிளிர்கிறது. வீடுகளும் பொதுக் கட்டடங்களும் பெரிதாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. இவை இத்தாலியில் இருக்கும் உணர்வை அளித்தன. தடையின்றி வழிந்தோடும் ஆடை அணிகலன்களின் விற்பனை. பகட்டையும் ஒய்யாரத்தையும் வெளிப்படுத்தும் பல்லக்குகள். அழகான கோச்சு வண்டிகள். எண்ணிக்கையற்ற வேலையாட்கள். பகட்டு நிறைந்த இலகுவான சொகுசான வாழ்க்கை. […]

Read more

பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. ஒரு காலத்தில், கன்னட அரசால் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு, இரண்டு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட குமார வியாசகனின், கன்னட பாரதம்; தெலுங்கில் கவித்ரயம் என்று போற்றப்படும் நன்னயர், திக்கணர், எர்ரப்ரகடா என்ற இலக்கிய மூம்மூர்த்திகளால் உருவான, தெலுங்கு மகாபாரதம்; இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாய் மாதவ கண்டாவி இயற்றிய, காலத்தால் முற்பட்ட, அசாமிய ராமாயணம்; தெலுங்கில் பதகவிதா பிதாமகர் எனும் உயர்பட்டம் பெற்ற, அன்னமாச்சார்யா; பண்டரிநாதரை மீட்ட பானுதாசர், ஒரிய […]

Read more

சக்தி பீடங்கள் 51

சக்தி பீடங்கள் 51, தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 225ரூ. பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால் அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வுதோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள். புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க 51 சக்தி பீடங்கள் அமைந்திருப்பதாகவும், அவை தேவியின் திருவுடலின் ஒவ்வொரு பாகத்தை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தியின் ஆதாரமாக தட்சயக்ஞ சம்பவம் அமைந்துள்ளது. அதை […]

Read more

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள்

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 110ரூ. ஜெயகாந்தன் பற்றிய 100 அரிய தகவல்கள் அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழ் இலக்கிய உலகில் புரட்சிசெய்தவர். அவருடைய சிறுகதைகளிலும், நாவல்களிலும் வருபவர்கள் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல, உயிரும், உணர்ச்சியும் நிறைந்தவர்கள். ஜெயகாந்தன் சினிமா உலகத்திலும் தடம் பதித்தவர். உலகப்புகழ் பெற்ற டைரக்டர் சத்யஜித்ரேயின் சாருலதா, அகில இந்திய ரீதியில் முதல் பரிசு வாங்கியபோது இவருடைய உன்னைப்போல் ஒருவன் மூன்றாம் பரிசு பெற்றது. ஜெயகாந்தன் பற்றிய அரிய […]

Read more

தமிழகத்தின் ஈழ அகதிகள்

தமிழகத்தின் ஈழ அகதிகள்,  காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 80ரூ. தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் பற்றியும், அங்குள்ள தமிழ் ஈழ அகதிகளின் அவலங்களைப் பற்றியும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த நூலை 8 ஆண்டுகள் அகதிகள் முகாமில் வாழ்ந்த தொ. பத்தினாதன் எழுதியுள்ளார். முகாம்களில் அகதிகளின் வாழ்க்கை நிலை, அவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம், எப்போதும் கண்காணிப்பு என்னும் கொடுமை போன்ற பல்வேறு செய்திகளைத் தருகிறார். ‘எங்களுக்கு இலவசமோ, உதவித்தொகையோ தேவையில்லை. எங்களுக்குத் தேவை சுதந்திரமான வாழ்க்கை – இங்கு வாழும்வரை’ என்பதை […]

Read more

திருக்குறள் பன்முக உரை

திருக்குறள் பன்முக உரை, சா. டேவிட் பிரதாப்சிங், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 300ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு உள்பொருளைத் தேடும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆளுக்கு ஓர் உரை, நாளுக்கு ஓர் உரை என்று விரிவடைந்து செல்கிறது. அந்த வகையில் ஆங்கிலப் பேராசிரியர் சா. டேவிட் பிரதாப்சிங், திருக்குறளுக்கு எழுதியுள்ள இந்த பன்முக உரை தமிழர்கள் இன்முகங்காட்டி வரவேற்கத்தக்க இனிய உரை. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு, பொழிப்புரை, பதவுரை, அதோடு கவிதை நடையில் ஒரு வரி உரை. பின்னிணைப்பில் திருக்குறளோடு […]

Read more

ஆயுஷ் குழந்தைகள்

ஆயுஷ் குழந்தைகள், டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, விலை 390ரூ. நவீன உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப மாறி வரும் வாழ்க்கை சூழல், பாரம்பரிய வாழ்வியலோடும், சித்த மருத்துவத்தோடும் தொடர்புடைய குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான மருத்துவம் குறித்து இந்த நூல் விளக்குகிறது. கரு உருவாவதில் இருந்து மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு முறைகள், குழந்தைகளுக்கான சித்த மருத்துவம், பாரம்பரிய நோய் தடுப்பு முறைகள், ஆகிய அனைத்தையும் டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் விரிவாக விளக்கியுள்ளார். மருந்து […]

Read more
1 79 80 81 82 83 336