ஆயுஷ் குழந்தைகள்

ஆயுஷ் குழந்தைகள், டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, விலை 390ரூ. நவீன உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப மாறி வரும் வாழ்க்கை சூழல், பாரம்பரிய வாழ்வியலோடும், சித்த மருத்துவத்தோடும் தொடர்புடைய குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான மருத்துவம் குறித்து இந்த நூல் விளக்குகிறது. கரு உருவாவதில் இருந்து மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு முறைகள், குழந்தைகளுக்கான சித்த மருத்துவம், பாரம்பரிய நோய் தடுப்பு முறைகள், ஆகிய அனைத்தையும் டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் விரிவாக விளக்கியுள்ளார். மருந்து […]

Read more

அவ்வையார் நூல்கள்

அவ்வையார் நூல்கள், செ. நாராயணசாமி, சுரா பதிப்பகம், சென்னை, பிக். 336, விலை 150ரூ. சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான தமிழ்ப் பெண்பால் புலவர்களில் அவ்வைக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறலாம். ஆனாலும் அவ்வையார் ஒருவர் அல்ல, இப்பெயரில் வெவ்வேறு காலங்களில் நான்கு அவ்வையார்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒருவர் சங்க காலத்து அவ்வையார். இவர் பாடியுள்ள 59 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. இரண்டாவது அவ்வையார் இறைப்பற்றாளர். விநாயகர் அகவல் போன்ற பக்திப் பாடல்களைப் பாடியவர். மூன்றாவது அவ்வையார் ஆத்திசூடி, […]

Read more

நவீன இந்தியாவின் சிற்பிகள்

நவீன இந்தியாவின் சிற்பிகள், தொகுப்பாசிரியர் ராமசந்திர குஹா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 525,விலை 400ரூ. இந்தியா நவீனமாக மாறியதற்கு யார் யார், எப்படி எல்லாம் காரணம் என்பதை, அந்தக் காரண கர்த்தாக்களே தங்கள் எழுத்து, பேச்சு, செயல் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தியவற்றின் தொகுப்பே இந்நூல். காந்திஜி, நேரு, அம்பேத்கர், மோகன்ராய், சையது அஹமது கான், கோகலே, ஜின்னா, ஜெ.பி., தாகூர், ராஜாஜி, கோல்வல்கர், ஈ.வெ.ரா. பெரியார் என்று பலர் குறித்தும், அவர்களது வெளிப்பாடுகள் குறித்தும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களைக் […]

Read more

இராஜாராம்

இராஜாராம், (சமூகவியல் நோக்கில் ராஜராஜ சோழன் வரலாறு), வெ. ஜீவகுமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 60ரூ. ஒளிக்கப்பட்ட தியாகங்கள் இராஜராஜ சோழனால் கி.பி. 1004ம் ஆண்டு கட்டத் துவங்கி, கி.பி. 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, தமிழர்களின் தனிப்பெருமையாய் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் பின்னணியை விமர்சனபூர்வமாக ஆராய்கிறது இந்நூல். கோயில் கட்டிய மன்னக் பெயர், கோயிலுக்கு நிதி உதவி செய்த அரசன் வீட்டுப்  பண்கள் உட்பட நிதியாளர்களின் பெயர்களையெல்லாம் பொறித்த அரசன், கோயில் கட்டிய தொழிலாளர்களின் […]

Read more

லண்டாய்

லண்டாய், ச. விஜயலட்சுமி, தடாகம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ. லண்டாய் எனும் போர்வாள் மாறுபட்ட, வீரிய மிக்க ஒரு கொள்கை மேலோங்கும்போது ஆதிக்க வெறி, ஆக்கிரமிப்புகளெல்லாம் தூளாகி, சுயசார்புள்ள ஒரு நாடாக ஒருநாள் ஆப்கன் மாறலாம். ஆனால் அந்நாட்டுப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஆக்கிரமிப்பு? விடை தெரியாத கேள்வி இது. ஆப்கன் பெண்களின் துயர வாழ்வு வாய்மொழிப் பாடல்களாகவும், கவிதைகளாகவும் பதிவாகிக் கிடக்கிறது. அதுதான் லண்டாய். மிகத் தொன்மையான இலக்கியம். உரிமைகைள நிலைநாட்டப் போராடும் ஆப்கன் பெண்களுக்கான கைவாள். திட்டமிட்டுப் பெண்களைச் சமயலறைக்குள் […]

Read more

வையத் தலைமைகொள்

வையத் தலைமைகொள், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. எந்த ஒரு துறையில் யார் கால் பதித்தாலும், அது கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை எந்த இடம் என்றாலும், மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் திறமையோடு மிளிர்வதை காட்ட வேண்டும் என்ற இயல்பு உள்ளவர்கள் தான் சிறந்தவர் என்று பொருள்படுவர் ஆவார். அப்படி தனித்துவத்தை அடைய வேண்டும் என்றால் அந்த நிலை தானாக வந்துவிடாது. உழைப்பே உயர்ந்த ஓய்வு என்று தொடங்கி என்னென்ன வகை முயற்சிகளை மேற்கொண்டால் இறுதியாக […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், மருத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் பொழுதுபோன்னு நாடகங்கள் அல்ல. ஒவ்வொரு நோயும் எதனால் வருகின்றன, அதற்கு சிகிச்சை என்ன, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை உணர்த்துகின்றன. எனவே, இதை ஒரு நாடக நூல் என்று கூறுவதைவிட, மருத்துவக் களஞ்சியம் என்று கூறுவதே பொருந்தும். மிகப் பயனுள்ள நூல். நன்றி: […]

Read more

இந்தியா 1948

இந்தியா 1948, அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 120ரூ. 1948ஆம் ஆண்டு மும்பையில் ஒரு குடும்பத்தில் நிகழும் கதைதான் நாவல். சென்னையிலிருந்து குடும்ப வறுமையால் வேலைக்காக மும்பைக்குக் குடிபெயரும் பாலக்காடு குடும்பத்தின் நாயகன் சுந்தர், கார் கம்பெனியில் வேலை செய்கிறார். கூடுதல் பயிற்சிக்காக விடுதலைக்கு முன்பே அமெரிக்கா செல்லும் அவரை, அங்கு படிக்கும் (பால்ய விதவை) குஜராத்தி பெண் சுயவரம் செய்துகொள்கிறாள். அந்நாளில் இரண்டாவது திருமணம் குற்றமல்ல. இருப்பினும் அந்த உண்மையை குடும்பத்தில் வெளியிடத் திணறுவதும், அதனிடையே குடும்பத்தின் சுக […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 130ரூ. நூலாசிரியர் பல்வேறு கட்டங்களில் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முதல் கட்டுரையில் பாரதியே நவீன சிறுகதையின் முன்னோடி என விளக்குவதோடு நிற்காமல் வ.வே.சு. அய்யரின் ஐரோப்பியத் தாக்கத்தை ஆதாரப் பூர்வமாகக் கூறியிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். புதுமைப்பித்தனும், சமீபத்தில் மறைந்த ஜெயகாந்தனும் எந்த அடிப்படையில் வேறுபடுகிறார்கள், அவர்களது வாழ்க்கைச் சூழல் அவர்களது எழுத்தை எந்த வகையில் வேறுபடுத்துகிறது என்பதை மிக நுட்பமாக விளக்கியிருக்கிறார். கயல் பருகிய கடல் எனும் […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, பக். 208, விலை 180ரூ. நாவலின் மையம் தேவி. நாவலின் முதுகுத்தண்டும், பொருள்பரப்பும் அவளே. கல்விக்குத் தடை விதிக்கும் குடும்பம் மற்றும் சமகத்தின் கொடுமைகளை அசாதாரண வலுவுடன் சகித்தபடி கல்வியே குறியாக அவள் செயல்படுகிறாள். சிறிய வயதிலேயே தாயின் வற்புறுத்தலால் மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் விதவையான பிறகு அந்தக் குற்றவுணர்ச்சி தாங்க முடியாது அவளை வெறி கொண்டு படிக்க வைக்கும் சாம்பசிவம் போன்ற எளிய மனிதர்களாலும்தான் பெண் விடுதலை சாத்தியமாகிறது. தனக்கான பாதையைத் தானே […]

Read more
1 80 81 82 83 84 336