தலைவலியே உன் முகவரிதான் என்ன?

தலைவலியே உன் முகவரிதான் என்ன?, அ.வேணி, சிவாவேணி பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.220. மூளை நரம்பியல் நிபுணரான நூலாசிரியர், தலைவலி எதனால் வருகிறது? அதன் வகைகள் யாவை? தலைவலி வந்தால் எதைக் கவனிக்க வேண்டும்? தலைவலி பரம்பரை நோயா? தலைவலிக்கு என்னென்ன சிகிச்சைமுறைகள் உள்ளன? தலைவலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? தலைவலியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் என்ன சொல்ல வேண்டும்? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூல் மூலம் விடையளிக்கிறார். உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை வலியின் மூலமாகத்தான் உடல் நமக்குத் தெரியப்படுத்துகிறது. எந்த எந்த […]

Read more

பெண்ணியம்

பெண்ணியம்,  இரா.பிரேமா, பாரி புத்தக பண்ணை, பக்.216, விலை ரூ.90. பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானது அல்ல; காலம் காலமாக அடிமைப்பட்ட பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, கல்வியின் மூலமாக அவர்களை வளர்த்தெடுத்து உயர்த்துவதே பெண்ணியத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். பெண்ணியம் எவ்வாறு தோன்றியது? அது தோன்றுவதற்கான பின்னணி, உலக அளவில் பேசப்படும் பெண்ணிய வகைகள், பலவிதமான பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் கருத்துகள் என விரிவாக இந்நூல் பேசுகிறது. வேத காலத்தில் யாக்ஞவல்கியருடன் வாதிட்ட கார்கி போன்ற பெண்மணிகளும் இருந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக கல்வி கற்பது, […]

Read more

அறிவுடையார் எல்லாம் உடையார்

அறிவுடையார் எல்லாம் உடையார், பிரேமா பதிப்பகம், பக். 192 முதுகலைத் தமிழ் ஆசிரியராக 32 ஆண்டுகள் பள்ளியில் பணிபுரிந்தமைக்கு நல்லாசிரியர் விருது பெற்ற சிறந்த ஆன்மிகப் பேச்சாளர். திருவொற்றியூர், “பாரதி பாசறை அமைப்பை உருவாக்கி 26 ஆண்டுகளாக பலநூறு இளைஞர்களை உருவாக்கிய பெருமை பெற்றவர் படைத்த 20 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. “நெஞ்சம் மறவா கட்டுரை நெஞ்சை நெகிழ வைக்கிறது. “வாழ்வதற்கு பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற, அவரது கவிதை நெறிப்படி அறிவுபாதையில் பயணிக்க உதவிடும் நூல். […]

Read more

பூதங்களின் கதை

பூதங்களின் கதை, சிவ.விவேகானந்தன், காவ்யா, விலை 480ரூ. பூதங்களின் கதை என்ற தலைப்பைப் பார்த்ததும், இது திகிலும் திகைப்பும் நிறைந்த கதைகளின் தொகுப்பு என்று நினைத்துவிடத் தேவையில்லை என்பதை இதில் உள்ள இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன. தமிழகத்தில் பழங்காலம் முதலே பூதங்களின் வழிபாடு நடைமுறையில் இருக்கிறது என்பதையும், பல கோவில்களில் பல்வேறு பெயர்களில் பூத உருவங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதையும் இந்த நூல் ஆய்வு நோக்கில் தந்து இருக்கிறது. தென் மாவட்டங்களில் வழங்கும் பூத கதைப் பாடல்களில் பூதப்பெருமாள் கதை (ஈஸ்வரகாலப் பூதக்கதை), […]

Read more

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, […]

Read more

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, நீலகிரி காவிரி திட்டம் மற்றும் […]

Read more

ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம்

ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம், தமிழில்: எஸ்.எம்.கார்மேகம், முல்லை பதிப்பகம், பக்.96, விலை ரூ.30 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 37 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் ஹாரி மில்லர். அவர் புகைப்படக் கலை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய தொடர், தமிழில் தினமணி கதிர் இதழில் 26.3.1995 முதல் 1.6.1995 வரை வெளிவந்தது. அதனுடைய நூல் வடிவம்தான் இந்நூல். விலை உயர்ந்த காமிராவை வைத்து ஒருவர் நல்ல புகைப்படங்களை எடுத்துவிட முடியாது. நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படம் எடுப்பவர் காமிராவை எப்படிக் கையாள வேண்டும் என்று […]

Read more

ஹிதோப தேசத்தில் நிர்வாகம்

ஹிதோப தேசத்தில் நிர்வாகம், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. தமிழகத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், கலை, இலக்கியம், ஆன்மிகம் போன்ற துறைகளிலும் நாட்டம் கொண்டவர். வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் பற்றிய நூல்கள், மகாகவி பாரதியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றிய நூல்கள் என்று நல்வழிகாட்டக்கூடிய 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அந்த வகையில் அமைந்துள்ளதே இந்நூலும். ஹிதம் என்றால் மென்மையான என்றும், உபதேசம் என்றால் அறிவுரை என்றும் பொருள். […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. சோழ சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லாத பேரரசனாகவும், தந்தையை மிஞ்சிய தனயனாகவும் விளங்கிய மன்னர் ராஜேந்திரன் மனதில் வெகு காலமாக நிலை கொண்டு இருந்த வேதனையைச் சுற்றி இந்த சரித்திர நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது. தந்தை ராஜராஜனுக்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் படை நடத்திச் சென்று, வெற்றியை மட்டுமே ஈட்டித் தந்த ராஜராஜன், இளவரசு பட்டத்திற்காக தனது 50 வயது வரை காத்து இருக்க நேரிட்ட வரலாற்று நிகழ்வையும், அது குறித்து அந்த மன்னரின் உள்ளக்கிடங்கில் குவிந்து கிடந்த […]

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன், நாடக வடிவம், சக்தி வெங்கடாசலம் வயிரவன், முல்லை பதிப்பகம், பக். 296, விலை 200ரூ. அமரர் கல்கியின் படைப்புகளில் தலைசிறந்தது ‘பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் கதை. அதன் இலக்கிய ஆழமும், கற்பனை வீச்சும், வண்ணத் தமிழும் படிப்பவர்களை பரவசப்படுத்தும். 2400 பக்கங்களைக் கொண்ட 5 பாகங்களான அந்த நாவலை, 296 பக்கங்களில் நாடக வடிவில் தந்துள்ளார் இந்நூலாசிரியர். இவர் இயல், இசை, நாடகத்தின் மீது பற்றுக் கொண்டு, தனது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களை எழுதி இயக்கும் ஆற்றலைப் பெற்றவர். […]

Read more
1 188 189 190 191 192 505