புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை, பத்மாவதி குமரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்,  பக்.168, விலை ரூ.250. இந்தியா மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சக்தி பீடங்கள், திருக்கோயில்களின் உன்னதமான தகவல்கள், (புகைப்படங்களுடன்) அடங்கிய அற்புதமான ஆன்மிகப் பயண நூல். சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாக விளங்குகின்றன. சதி தேவியின் மண்டை ஓடு விழுந்த இமாச்சலில் உள்ள சாமுண்டா தேவி கோயில் தொடங்கி, அம்மையின் திரு நாக்கு விழுந்த வஜ்ரேஸ்வரி (தாரா தேவி), ஜ்வாலாமுகி, பாதம் விழுந்த சிந்த்பூர்ணி […]

Read more

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல்

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல், சாமுவேல் பி.ஹண்டிங்டன், அடையாளம், பக்.570. விலை ரூ.540. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாறுதல்களை விளக்கும் நூல். ரஷியாவின் வீழ்ச்சிக்கு முன்பு உலகம் அமெரிக்கா, ரஷியா ஆகிய இருநாடுகளின் பின் அணி திரண்டது. கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தனியுடமை, ஆளும் சக்திகளின் கருத்துகளுக்கும், பொதுஉடமை, உழைக்கும் மக்களின் கருத்துகளுக்கும் இடையிலேயே இருந்தன. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரியான கருத்தியல் முகங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத, இன, […]

Read more

காற்றில் கரையாத நினைவுகள்

காற்றில் கரையாத நினைவுகள், வெ.இறையன்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. இந்து தமிழ்’ நாளிதழில் வெ.இறையன்பு வாரந்தோறும் தொடராக எழுதி பெரும் வரவேற்பு பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. பயணங்கள், அனுபவங்கள் வழியாகத் தன்னை செழுமைப்படுத்திக்கொண்ட விஷயங்களை சுவாரசியமான நடையில் பகிர்ந்துகொள்கிறார் இறையன்பு. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் நமக்குள் பசுமையான கருப்பு – வெள்ளைக் காட்சிகளை ஓட்டிக் காண்பிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 13/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

தி டாடாஸ்

தி டாடாஸ்: ஹவ் அ பேமிலி பில்ட் அ பிஸினஸ் அண்ட் அ நேஷன், கிரீஷ் குபேர்,ஹார்பெர்காலின்ஸ், விலை: ரூ.699 அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இந்தியா ஆட்பட்டிருந்த காலத்திலேயே இரும்பு உருக்காலை என்ற கனரகத் தொழிலைத் தொடங்கிய நிறுவனம் டாடா. ஜாம்ஷெட்பூர் என்ற புதியதொரு தொழில் நகரத்தையே உருவாக்கிய ஜாம்சேட்ஜி டாடாவின் கண்களிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்பு தெறித்த தொழில் முனைவு என்ற ஆர்வத் தீப்பொறி பற்றிப் பரவி, சாதாரண மக்களின் காரான ‘நானோ’வை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடா வரை டாடா குழுமத்தைச் சிறியதொரு […]

Read more

காலமெல்லாம் கண்ணதாசன்

காலமெல்லாம் கண்ணதாசன், ஆர்.சி.மதிராஜ், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.130 ‘இந்து தமிழ்’ குழுமத்தின் அங்கமான ‘காமதேனு’ இணையதளத்தில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே கண்ணதாசனின் பாடல்கள் இருந்திருக்கின்றன. அவரது வரிகளில் மயங்கித் திளைத்தவர்களுள் ஒருவரான மதிராஜ், இந்தப் புத்தகத்தில் கண்ணதாசனைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 13/4/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027960.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஒவ்வொரு கணமும்

ஒவ்வொரு கணமும், சுகதேவ், நோஷன் பிரஸ்,விலை: ரூ.170 மூத்த பத்திரிகையாளரும் தூதரக ஊடக ஆலோசகருமான சுகதேவின் முதல் கவிதைத் தொகுப்பு. எளிமையான சொற்களில் ஆழமான கருத்தை நிறுவ முடியும் என்ற அவரது நம்பிக்கை, கட்டுரைகளைப் போலவே கவிதைகளிலும் சாத்தியப்பட்டிருக்கிறது. பொழுதுகள் மாறிக் கிடக்கும் நவீன வாழ்க்கைக்கு இரவில் கரையும் காகங்களை உருவகமாக்கியிருப்பது சிறப்பு. ‘வரலாறு என்பது உண்மையில் யாருக்கும் தெரியாத ரகசியம்’ என்பது போன்ற ஒற்றை வரித் தெறிப்புகள் நிறைய எதிர்ப்படுகின்றன. சமகாலக் கவிதை, கவிஞர்கள் குறித்த ஆழமான விமர்சனமாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பின் முன்னுரை. […]

Read more

குறள் இனிது கதை இனிது

குறள் இனிது கதை இனிது, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 200ரூ. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 108 குறள்களைத் தேர்ந்தெடுத்த அவற்றின் பொருளை விளக்கும் வண்ணம் ஒரு பக்க கதைகளாக எழுதி இருக்கிறார் காவல்துறை அதிகாரியான ஆசிரியர். புராண இதிகாசம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரையிலான பல நிகழ்வுகளைப் படம்பிடித்து அவற்றை திருக்குறளுடன் ஒப்பிட்டு கதைகளை பின்னி இருப்பது படிக்க சுவாரசியமாகவும், பயன் அளிக்கும் வகையிலும் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

யாசகம்

யாசகம், எம்.எம்.தீன், ஜீவா படைப்பகம், விலை: ரூ.200. ஓயாத யாசகக் குரல்கள் ஒவ்வொரு யாசகரின் வாழ்வும் எதிர்பாராத திருப்பத்தில் திசைமாறி, குடும்பம் விட்டு விலகி, தனிமையில் ஒண்டி, கடைசியில் எல்லோரும் ஒரே முகத்துக்கு மாறிவிடுகிறார்கள் என்று சொல்லும் எழுத்தாளர் தீன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சுற்றுப்புறத்தில் உள்ள யாசகர்களின் வாழ்வை இந்நாவலில் நுட்பமாகப் பதிவுசெய்திருக்கிறார். யாசகர்கள் உணவுக்காகப் பல தூரம் நடக்கிறார்கள். எல்லா நாட்களிலும் சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லை. பல நாட்கள் கொலைப்பட்டினியாகவும் இருக்க நேரிடுகிறது. யாரோ ஒருவர் தனக்கான உணவுப் பொட்டணத்தைக் கொண்டுவந்து தருவார்கள் […]

Read more

வானொலி தமிழ் நாடக இலக்கியம்

வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, பக். 192, விலை 180ரூ. வானொலியில் இடம்பெற்ற நாடகங்கள் பற்றிய செய்திகளையும், அவை நுாலாக ஆக்கப்பட்டு உள்ள குறிப்புகளையும் இந்நுால் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. நுாலின் இறுதிப்பகுதி நுாலாசிரியரால் எழுதப் பெற்ற, ‘செம்பியர் கோன்’ எனும் வானொலி நாடகத்தை முழுமையாகக் கொண்டு சுவை பயக்கிறது. வானொலி என்னும் ஊடகம் எவ்வாறு, எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, அதன் வளர்ச்சி நிலைகளை விளக்குவதாக நுாலின் அறிமுகப் பகுதி அமைகிறது. வானொலி நாடகம் என்பது வானொலிக் காகவே […]

Read more

பரதநாட்டியம்

பரதநாட்டியம், வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ், பக்.264, விலை 1330ரூ. பரதநாட்டியம், இந்திய நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு நடனம். அதிலும், இதில் தமிழகத்துக்கு பெரும் சிறப்பு உள்ளது. பரதநாட்டிய கலைஞர்களை அதிகளவில் தநதுள்ளது தமிழகம் தான். பரதநாட்டியம் என்றால் என்ன? அதில் காட்டப்படும் பாவங்கள், முத்திரைகள் என, பரதநாட்டியத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். பரதநாட்டியம் கற்பவர்கள், கற்றவர்கள், இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த புத்தகம், அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். தமிழாக்கம் செய்து இதை வெளியிட்டால், […]

Read more
1 223 224 225 226 227 505