பனியில் ஒரு பிரளயம்

பனியில் ஒரு பிரளயம், தமிழில் எஸ். விஜயன், ஜம்போ காமிக்ஸ் சன்ஷைன் லைப்ரரி வெளியீடு, விலை 200ரூ. மீண்டும் தமிழுக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட் உள்ளங்கவர் உளவாளியாம் ஜேம்ஸ் பாண்ட், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்; முற்றிலும் புதிய வடிவில். வண்ணச் சித்திரங்கள் கொண்ட இந்த காமிக்ஸ் கதை, ஷான் கானரி காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போலன்றி, டேனியல் க்ரெய்க் பாணி படங்களைப் போல் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டது. அதேசமயம், அதிக விவரணைகள், வசனங்கள் இல்லாமல் காட்சிகள் […]

Read more

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம்,  பக்.184, விலை ரூ.120, இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழும் பின்னி பிணைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.முத்தமிழ், மூவேந்தர்,மூன்று தலைநகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாலும், அமைப்பாலும் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ரத்தினச் சுருக்கமாக தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிலப்பதிகாரம் முழுவதும் காணப்படுகின்ற பன்முகத் தன்மை குறித்து நூலாசிரியர் ஆராய்ந்து சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி தமிழறிஞர்கள் மற்றும் பிற நாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை காட்டி ஒப்பிட்டும் விளக்குகிறார்.பண்டிய மன்னன் அரசவையில் […]

Read more

போதி தர்மா

போதி தர்மா (4 பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், மொத்த பக்.2856, விலை ரூ.1700. நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் என்ற நூலில் இந்தியாவிலிருந்து சீனா போவதற்கான கடல் வழியைப் பற்றி விவரிக்கும் இடத்தில் போதி தர்மா பற்றிய குறிப்பு வருகிறது. காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சன்னியாசியாகி சீன தேசத்திற்கு ஜென் பெளத்தத்தையும் குங்ஃபூ என்கிற மற்போரையும் கற்றுத் தந்தவர் போதி தர்மா. அவரது கால (கி.பி.520) தந்திர அரசியலைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நாவல் […]

Read more

வைகைக் கதைகள்

வைகைக் கதைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.604, விலைரூ.600; வைகை நதி ஓடிவரும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்றிதழ்கள், பேரிதழ்களில் எழுதிய எழுத்தாளர்களின் 56 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை முதல் நவீனகால எழுத்தாளர் லக்குமணசாமி எழுதிய சிறுகதைகள் வரை இடம்பெற்றுள்ளன. வைகை நதி நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில கதைகளைத் தவிர, பல கதைகளில் தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை, பழக்க, வழக்கங்கள், பேசும் மொழி […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவண கார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. ஏவாளான காந்தியின் கதை கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல். இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் […]

Read more

கூடு விட்டு கூடு பாயும் வித்தை

கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ஜெகாதா, அருணா பதிப்பகம், விலை 70ரூ. பிற தேகத்தில் கூடு விட்டு கூடு பாய்தல் என்பது அஷ்டா சித்தியில் பிரகாமியம் எனும் சித்தியில் அடங்குகிறது. இந்த கலை ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வு அல்ல. தனிப்பட்ட பயிற்சியும் இல்லை. பல சித்திகள் கைவரப்பெற்றதன் கூட்டு கலவையின் உச்ச சித்தியாகும். சித்தர்கள் அனுபவத்தில் கண்ட இந்த அற்புத கலையை அறிவியல் கூறுகளோடு ஒப்பிட்டு பார்த்து பிரமிக்கும் நிலையை இந்நூல் வாசிப்பில் உணரலாம். இந்நூலில் கூடு விட்டு கூடு பாயும் […]

Read more

ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம், பிரபா ஸ்ரீதேவன், வி பாட்டில் பவுண்டேஷன், விலை 200ரூ. நீதிபதி பிரபா ஸ்ரீதேவனின், ‘ஆப் வைன்யார்ட் ஈகுவாலிட்டி’ எனும் ஆங்கில நுாலின் தமிழாக்கம் இந்நுால். தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியும், வழக்குரைத்தும் வல்லமை பெற்ற நீதியரசி எழுதிய, 20 கட்டுரைகள் அடங்கிய இந்நுாலில், சமூக நீதியை சரியாக உணர்த்தும் திறனையும், எடுத்துரைக்கும் கருத்துகளின் மீதுள்ள நியாயமான போக்கையும் காண முடிகிறது. மூன்றாம் பாலினத்தவரின் கவுரவத்திற்கான உரிமை குறித்து கூறும் நுாலாசிரியர், நேபாள உச்ச நீதிமன்றம் யோக்கர்த்தா கொள்கைகளைப் பயன்படுத்தி, தம் கருத்தை வெளிப்படுத்துகிறார். […]

Read more

வான் மண் பெண்

வான் மண் பெண், ந.வினோத்குமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. சூழலியல் பெண்களின் கதை இயற்கையைப் பாதுகாக்க வந்த 50 பெண்களைப் பற்றிய ஆவணம் இந்நூல். உலகின் முன்னோடி சூழல் போராட்டங்களில் தொடங்கி தற்போது நம்மிடையே செயல்பட்டுவருபவர்கள் வரை பல்வேறு தரப்புப் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. சூழலியல் பெண்ணியவாதிகள் குறித்துப் பேசும் இந்நூல், தமிழில் முதல் முயற்சி. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தி இந்து, 13/10/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் 2)

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் 2), உளிமகிழ் ராஜ்கமல், வானதி பதிப்பகம், விலை 180ரூ. ஏற்கனவே வெளியான சோழ சிரஞ்சீவி கரிகாலன் என்ற நாவலின் 2 வது பாகமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் முடிவடைந்ததில் இருந்து தொடங்கி, சோழத்தில் உத்தம சோழரின் ஆட்சி தொடங்கியது வரை பயணிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வினை சிறப்பாக விவரித்து உள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4)

வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4), பேராசிரியர் பானுமதி தருமராசன், புதுகைத் தென்றல், விலை 150ரூ. ஆண்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இன்றைய உலகில் பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம். சமுதாயத்தில் முன்னேற துடிக்கும் இளம் பெண்களிடையே ஒரு உத்வேகத்தை தூண்டும் வகையில், சாதனை புரிந்த வைர மங்கையர்களின் வரலாற்று தரவுகளை சுவைபட படைத்துள்ளார் ஆசிரியர். நாம் இதுவரை அறியாத, விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற சில சாதனை பெண்மணிகளின் தகவல்களையும் இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. தங்களது இலக்கை […]

Read more
1 256 257 258 259 260 505