கள்ளிவட்டம்

கள்ளிவட்டம், பா.சரவணகுமரன், போதிவனம், விலை 100ரூ. கீழத்தஞ்சை:மண்ணும் மனங்களும் நாகை திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த பா.சரவணகுமரனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருமணம் தள்ளிப்போகும் இளைஞனின் ஏக்கங்கள், அவன் மண் சார்ந்த நினைவுகள் என இரண்டு தளங்களில் எழுதப்பட்ட இயல்புவாதச் சிறுகதைகள். மகள் பருவம் எய்தியதும் கள்ளுக்கடையை மூடிவிட்டு தார்ச்சாலை போடும் வேலைக்குப் போகும் பரமேஸ்வரி, மகளின் திருமணத்துக்காக விற்ற ‘மாரியம்மா’ செல்லும் வழியில் இறந்துவிட மாடு வாங்கியவருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் சின்னச்சாமி என உழைப்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணங்களாக விளங்கும் காவிரிப் படுகையின் கதாபாத்திரங்கள், கதைகள் நெடுகிலும் […]

Read more

விண்ணளந்த கடல் மகன்

விண்ணளந்த கடல் மகன், வெ.அருணா, யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 175ரூ. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர், இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தவர் என பல்வேறு பரிணாமங்களை கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை இந்த புத்தகம் விளக்குகிறது. அப்துல் கலாமின் குடும்பம், பள்ளி பருவம், கல்லூரி வாழ்க்கை, விஞ்ஞானியாகி ஏவுகணைகளை விண்ணுக்கு அனுப்பியது, ஜனாதிபதியாகி மரபுகளை உடைத்தது, இளைஞர்களின் கனவு நாயகனாக வாழ்ந்து, விஞ்ஞானம் மட்டுமின்றி இசைஞானமும் கொண்டிருந்தது, அவருடைய மறைவு […]

Read more

ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, பி.ஆர். அம்பேத்கர், தலித் முரசு, விலை 120ரூ. இந்திய சமூகங்களில் புரையோடி கிடக்கும் சாதி எனும் கொடிய நோய்க்கு எதிராக போராடியவர்கள் பலர். அவர்களில் அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் முக்கியமானவர். நாடு விடுதலைக்கு முன் லாகூரில் நடைபெற இருந்த கூட்டம் ஒன்றுக்காக சாதி ஒழிப்பு தொடர்பாக அவர் தயாரித்த உரையின் சாரம்சமே இந்த புத்தகம். சாதியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய தான் காட்டிய வழியிலோ அல்லது தங்கள் சொந்த வழிகளிலோ முயலுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் […]

Read more

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள்

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும் தேன்மொழி, மணற்கேணி பதிப்பகம், விலை 100ரூ. கலைகள் குறித்த உணர்வும் அறிவும் அக்கறையும் இல்லாத சமுதாயம் தன் மனதையும் முகத்தையும் அழித்துக்கொள்கிறது. பண்டைய சமுதாயத்தின் பண்பாட்டு ஆவணங்களான அவை பேணப்படுவதுடன் ஆராயப்படவும் வேண்டும். இன்று தனியாரும் கல்விப்புலங்கள் சார்ந்த பலரும் ஆய்வுகளில் ஈடுபட்டாலும் ஆய்வை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான ஆய்வு அணுகுமுறை சார்ந்த நூல்களும் கோட்பாடு சார்ந்த நூல்களும் மிகமிகக் குறைவாகவே உள்ளன. இக்குறை களையப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவாக, கலையியல் […]

Read more

வாழ்க நலமுடன்

வாழ்க நலமுடன், செ.சரவணன், ஜெயலஷ்மி எண்டர்பிரைஸஸ், பக். 160, விலை 130ரூ. இந்நூலாசிரியர் மருத்துவரோ, மருத்துவ ஆராய்ச்சியாளரோ அல்ல. ஆனால், உடல் நலம், மனநலம் காக்கும் வழிமுறைகளையும், அதற்கான பயிற்சிகளையும், உணவு முறைகளையும் இந்நூலில் விளக்கியுள்ளார். அதற்காக, பல கருத்தரங்குகள், நூல்கள், பத்திரிகைகள், இயற்கை மருத்துவர்கள், இணைய தளங்கள் என்று பலவற்றிலும் தகவல்களைத் திரட்டி இந்நூலை உருவாக்கியுள்ளார். தவிர, படிப்பவர்களுக்கு எளிதில் புரியவும், மனதில் பதியவும் தன் நண்பர்களோடு கலந்துரையாடல் செய்வது போன்று, இந்நூலை இயற்றியுள்ளது புதுமையானது. ஆரோக்கியம் என்றால் என்ன என்பதற்கு முதல் […]

Read more

சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால்நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. பரிணாமத்தின் வரலாறு யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, மனித இனத்தின் சமூக, அரசியல், பொருளாதார பரிணாம வரலாற்றைப் பேசும் புத்தகம். பத்து லட்சம் பிரதிகள், முப்பது மொழிகளில் மொழியாக்கம் என்று உலகளவில் அதிகம் விற்பனையான நூல். நெருப்பு, மொழி, வேளாண்மை என்று தொடர்ந்துவந்த மனித அறிவின் பரிணாமத்தில் அடுத்தடுத்து வந்த பணமும் முதலாளித்துவமும் அறிவியலும் இன்றைக்கு மனிதர்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை வரலாற்று […]

Read more

அழகியசிங்கர் சிறுகதைகள்

அழகியசிங்கர் சிறுகதைகள், முழுத்தொகுப்பு, விருட்சம் வெளியீடு, விலை 400ரூ. சிங்கரின் கதைகள் முப்பது ஆண்டுகளாக ‘நவீன விருட்சம்’ இலக்கிய இதழை நடத்திவருபவர் அழகியசிங்கர். கடந்த நாற்பதாண்டுகளில் அவர் எழுதிய 64 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், ஐந்து சின்னஞ்சிறுகதைகள் ஆகியவை முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளன. அழகிய சிங்கரின் பெரும்பாலான கதைகள் ‘நவீன விருட்சம்’ இதழில்தான் பிரசுரமாகியிருக்கின்றன. எண்ணியதை எண்ணியவாறே எழுதும் வாய்ப்பு அவருக்கு. இலக்கிய இசங்களுக்கு இடையே யுத்தங்கள் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது குருவான அசோகமித்திரன் பாணியில் உள்ளடங்கிய குரலில் கதைகளை […]

Read more

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள், ந.ஜெயபாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. சொற்களால் ஒ நினைவுத்தடம் ந.ஜெயபாஸ்கரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பான ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்’, ஆலவாய் நகர் என்னும் மதுரையின் ஆவணமாகத் திகழ்கிறது. மதுரையின் வீதிகளில் பன்னெடுங்காலம் அலைந்துதிரிந்த ஜெயபாஸ்கரன் வேறொரு புதிய கோணத்தில் தன் ஊரைப் பார்க்கிறார். தொன்மும் புராணமும் இவரது கவிதைகளில் ஊடுபாவாகக் கலந்திருக்கின்றன. நிகழ்காலத்துக்கும் புராண காலத்துக்கும் சடுதியில் தாவுகிறார். ‘வெண்கலப்பாத்திரப் பளபளப்பு’ கொண்ட சொற்களைக் கொண்டு தனக்கே உரித்தான தன்மையுடன் கவிதைகளைப் பின்னியிருக்கிறார் ஜெயபாஸ்கரன். – […]

Read more

மஹத்

மஹத், முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்ப்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ. எழுச்சியின் தொடக்கம் மனித உரிமைச் செயல்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான ஆனந்த் டெல்டும்ப்டே சமீபத்தில் எழுதி பெரும் கவனத்தைப் பெற்ற நூலின் மொழியாக்கம். தலித் இயக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படும் 1927-ம் ஆண்டு மஹத் மாநாடுகளை, அதற்கு முன்பு நடந்த உரிமைப் போராட்டங்கள், உலகளவிலான எழுச்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கும் பகுத்தாய்வு. ஆவணக் காப்பகத் தரவுகள், இதுவரை மராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு […]

Read more

கிரா 95

கிரா 95, மூன்று தொகுப்புகள், தொகுப்பாளர்கள் பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், அன்னம் பதிப்பகம், விலை 700ரூ. ஆய்வுகள் அனுபவங்கள், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் 95-வது பிறந்தநாளையொட்டி ‘கி.ரா. என்னும் மானுடம்’, ‘கி.ரா.வும் புனைகதைகளும்’, ‘கோட்பாட்டு நோக்கு ஆய்வு’ என்ற மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. வாசக அனுபவங்கள், இலக்கிய நண்பர்களின் மதிப்பீடுகள், ஆய்வுக் கட்டுரைகள் என பல்வேறு கோணங்களில் கி.ரா.வை அணுகும் 82 கட்டுரைகளின் பெருந்தொகுப்பு. கி.ரா.வின் வாசகர்களுக்கு இக்கட்டுரைத் தொகுப்புகள் புதிய வெளிச்சங்களைத் தரக்கூடும். புதுப் புது அர்த்தங்களையும்கூட. […]

Read more
1 254 255 256 257 258 505