அய்யா வைகுண்டரின் சாதனையும் ஆங்கிலேயரின் வேதனையும்

அய்யா வைகுண்டரின் சாதனையும் ஆங்கிலேயரின் வேதனையும், கேப்டன் எஸ்.பி.குட்டி, அறிவுசால்சால் ஆன்மீகக் கல்விக் கழகம், விலை 100ரூ. பிரிட்டிஷார் காலத்தில், ஆட்சியாளர்கள் ஆதரவோடு இந்துக்களிடையே சமுதாயப் பகைமையை ஏற்படுத்தி, மதமாற்றத்தை எளிதாக்கிக் கொண்டிருந்தார்கள், கிறிஸ்தவர்கள். அந்தக் கொடுமையை முறியடித்து இந்துக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி அன்னியர் சூழ்ச்சியைத் தடுத்த அவதார புருஷர் அய்யா வைகுண்டரின் பெருமையைச் சொல்லும் நூல். வரலாற்று சம்பவங்களை தகுந்த ஆதாரக் குறிப்புகளுடன் தந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. மகாத்மா காந்தியைப் பற்றி பொதுவாகச் சில விஷயங்களே தெரிந்தவர்களுக்கு, அவரது எளிமை, அன்பு, அஹிம்சை, ஒழுக்கம், நேர்மை, சகிப்புத்தன்மை, எதையும் சரியாகச் செய்யும் குணம் என்று காந்தியின் எல்லா நற்குணங்களையும் சித்திரித்துக் காட்டுவது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் இருநூறு. படிக்கப் படிக்க காந்திஜி மீது மதிப்பு கூடுகிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027224.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

மறுக்கப்படும் மருத்துவம்

மறுக்கப்படும் மருத்துவம்,  தொகுப்பாசிரியர்: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பாரதி புத்தகாலயம், பக்.94, விலை ரூ.30. இந்திய மருத்துவ ஆணைய மசோதா (NMC BILL, 2017) நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கலாகியுள்ளது. 2018 குளிர்கால கூட்டத் தொடரில் இது நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், மருத்துவம் சார்ந்த மாநில அதிகாரங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், மருத்துவத்தையும், மருத்துவக் கல்லூரியையும் சந்தையிடம் ஒப்படைக்க வழி ஏற்படும் என்றும் இந்நூல் எச்சரிக்கிறது. ஏற்கெனவே உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலின் இடத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதால் ஏற்படக் கூடிய […]

Read more

கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான், எஸ்.சுதர்சனம், ஆலய தரிசனம் பதிப்பகம், விலை 200ரூ. கண்ணபிரான் பிறந்தது முதல் குருகுலவாசம் வரை உள்ள வரலாற்றை ஆசிரியர் சுவையாக விவரித்துள்ளார். இந்த கட்டுரை தொகுதி 41 அத்தியாயங்களின் தலைப்புகள் ஆழ்வார் பாசுரங்களில் இருந்தே கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் எளிய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது. நூலின் கதை ஓட்டமும் நடையும் படிப்பவர் மனதை கவர்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் பல அறிவுரைகளை அழுத்தமாகவும், தெளிவாகவும் நயம்பட எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கண் அறியாக் காற்று

  கண் அறியாக் காற்று, சஹானா, ஆகுதி பனிக்குடம் பதிப்பகம், விலை 100ரூ. கீறி குணப்பட்ட கண்களின் அறிதல் என் படகு கடல் மீன்கள் தூங்கியிருக்கும் மணல் நண்டுகள் சண்டையிடும் கடல் ஆமைகள் அமைதியாக கரை ஏறித் தவழ்ந்து மகிழும் சூரியன் கடலறையில் ஓய்வெடுக்கும் வான் நிலா மேலேறி பணியைத் தொடரும் மேகம் புகைநிறம் ஆகிவிடும் ஒரே ஒரு மீன் மட்டும் விழித்து இருக்கும் என் படகு கடலில் செல்லும் நேரம். ‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை […]

Read more

நாவல்களில் பொருளியல் பார்வை

நாவல்களில் பொருளியல் பார்வை, முனைவர் சி.மாதவன், வெளியீடு பேரா.கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், விலை 150ரூ. நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும், மாமிசப் படைப்பு, மிதவை, ஐசக் அருமைராஜன் எழுதிய கீறல்கள், அழுக்குகள், கல்லறைகள், தோப்பில் முகமது மீரான் எழுதிய ஒரு கடலோரக் கிராமத்தின் கதை ஆகிய நாவல்களில் சித்திரிக்கப்படும் சமூக கண்ணோட்டத்துடன் அமையும் பொருளாதாரப் பார்வையை இந்நூல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது. ஒவ்வொரு நாவலிலும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுள்ளன? ஏற்றத்தாழ்வுகளுக்கு அந்த நாவல்களில் […]

Read more

தீயில் எரிந்த உண்மைகள்

தீயில் எரிந்த உண்மைகள், கே.எஸ்.சந்திரசேகரன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனையில் எழுந்த நாவல் இது. பதவி மோகம் கொண்ட ஒரு செல்வந்தர் தனது 2 பேரன்களில் ஒருவனை தமிழ் நாட்டின் முதல் – அமைச்சராகவும், மற்றொருவனை கர்நாடக முதல் – அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி மத்திய அரசை கைப்பற்ற எண்ணுகிறார். மிகப்பெரிய சினிமா இயக்குனராக வேண்டும் என்பதற்கா திருமணம் முடிக்காமல் குடும்பத்தை உதறிதள்ளும் சிந்துஜா சினிமாத்துயில் பெண்களின் பங்களிப்பை பெருக்கும் வகையில் பெண்களுக்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்பதை […]

Read more

கால் பட்டு உடைந்தது வானம்

கால் பட்டு உடைந்தது வானம், எஸ்தர், போதிவனம் பதிப்பகம், விலை 120ரூ. உணர்விழைகளால் நூற்கப்பட்டவை இலங்கையின் மலையகத்தை இனி எஸ்தரின் கவிதைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்தரின் முதல் தொகுப்பு இது. ‘விடுதலையை நினைத்தவனும் போராடியவனும் நிலமற்றுப்போன என் மலையக மூதாதையர்களுக்கும்’ என நூலின் சமர்ப்பணமே கவிதையாய் விரிகிறது. மெல்லிய உணர்விழைகளால் நூற்கப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. காதல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, தவிப்பு, தோல்வி, பிரிவு, துரோகம், இயலாமை என மனிதருக்குள் ஊறும் உணர்வுகளை உருவி எடுத்துக் கவிதைகளாக்கியிருக்கிறார். மலையும் கடலும் வானமும் நதியும் […]

Read more

டைனமைட் ஸ்பெஷல்

டைனமைட் ஸ்பெஷல், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 700ரூ. வீர சாகச அதிரடி கதாநாயகன் டெக்ஸ்வில்லர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதையொட்டி 507 பக்க அளவில் வண்ணப்படங்களுடன் ஒரு கதையும் அதே போல கருப்பு வெள்ளையில் ஒரு மெகா கதையுமாக வெளியாகி உள்ள இந்தப் புத்தகம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புதுவெள்ளம்

புதுவெள்ளம், அகிலன், தாகம் பதிப்பகம், விலை 500ரூ. இந்திய விடுதலையை வெறும் ஆட்சிமாற்றமாகத்தான் பலரும் பார்ப்பது உண்டு. காரணம் இங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சுதந்திரத்துக்கு பின்னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழைகள் பரம ஏழைகளாகவும், செல்வந்தர்கள் பெரும் பணக்காரர்களாகவும்தான் மாறி வருகின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதைதான் இந்த நூல். 1962ம் ஆண்டில் கல்வி இதழில் தொடர்கதையாக வெளியான இந்த கதை, தற்போது நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 3 பாகமாக எழுதப்பட்டு இருக்கும் இந்த நூலில், நாடு விடுதலைக்குப்பின் இந்திய சமூகத்தில் […]

Read more
1 253 254 255 256 257 505