காந்தி என்கிற காந்தப்புலம்

காந்தி என்கிற காந்தப்புலம், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.138. தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் குறித்து எழுதப்பட்ட இருபது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தென்னாப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிய கண்டத்தினர் தங்கள் சுயவிவரங்களைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தார், அப்போது அங்கு பாரிஸ்டராக இருந்த மகாத்மா காந்தி. அந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் கைக்கொண்ட முறையே பிற்காலத்தில் சத்தியாகிரகம் […]

Read more

கால்தடம் இல்லா நீலவானம்

கால்தடம் இல்லா நீலவானம், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. சீனாவைச் சேர்ந்த புத்தமதத் துறவியான இஸான் ரியு என்ற குரு தொடர்பான பல செய்திகளை இந்த நூலில் தந்து இருக்கிறார் ஓஷோ, இந்தத் தகவல்களுடன், வழக்கம்போல அவரது கேள்வி-பதில் ரூபமான பிரசகங்கங்களும் பெரும் அளவில் இந்த நூலில் இடம்பிடித்து இருக்கின்றன. இடையிடையே அவர் கூறி இருக்கும் கவுதம புத்தர் பற்றிய கதைகளும், ஜென் கதைகளும் ருசிகரமானவை என்பதோடு ஆழமான கருத்துகளையும் கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வழியிலேயே ஞானம் […]

Read more

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 5

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 5, தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 440ரூ. மர்மக் கதை மன்னர் தமிழ்வாணன் எழுதிய மர்ம நாவல்கள் தொகுப்பின் 5-ம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், 5 பெரும் நாவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்வாணனின் ஆகச் சிறந்த மர்ம நாவல்களில் ஒன்றான ‘கருநாகம்‘ என்ற திகில் நாவல், ஏராளமான மர்மங்களும், எதிர்பாராத திடீர் திருப்பங்களும் கொண்டு தனித்துவம் பெற்று இருக்கிறது. ஓரே மூச்சில் படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இநத் நாவலை தமிழ்வாணன் படைத்து இருக்கிறார். மர்ம […]

Read more

விந்தன் படைப்புலகம்

விந்தன் படைப்புலகம், மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.200.   “கல்கியின் மாணவன்’ என்று போற்றப்படும் எழுத்தாளர் விந்தனின் படைப்புகள் இன்றும் பேசப்படுகின்றன. நகைச்சுவையாக எழுதுவது அவருடைய நோக்கமாக இருந்தது. நாற்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் விந்தன் எழுதிய ஒரே வரலாற்று நூல் எம்.கே.டி.பாகவதர் கதைதான். “தினமணி கதிர்’ இதழில் தொடராக வந்தது. விந்தனின் “ஆத்திசூடி’ வித்தியாசமானது. புரட்சி சிந்தனை உடையது. நடிகர் எம்.ஆர். ராதாவைப் பேட்டி கண்டு “சிறைச்சாலை சிந்தனைகள்’ என்ற தொடர் வெளிவரவிந்தன் காரணமாக இருந்தார். “ஓ மனிதா!’ தொடர் அவருடைய […]

Read more

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 650ரூ. அரசு அலுவலகங்களில் ஊழில் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அம்சமாகக் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முழு விவரங்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் நீதி மன்றத்தை அணுகாமலேயே வீட்டில் இருந்தபடி குறைந்த செலவில் நீதியைப் பெற முடியும் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவலைக் கேட்டுப் பெற 30 நாட்கள் காத்திருக்கத் தேவை இல்லை, 48 மணி நேரத்திலேயே தகவலைக் […]

Read more

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும், பெ.சிவசுப்ரமணியம், சிவா மீடியா வெளியீடு, விலை 400ரூ.   தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அச்சமூட்டும் வகையில் காடுகளில் மறைந்து வாழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை முழுமையாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் இந்த நூல் தயாராகி இருக்கிறது. துணிந்து காட்டுக்குள் சென்று, மாயாவி என்று அழைக்கப்பட்ட வீரப்பனை முதல் முறை நேரடியாகச் சந்தித்து அவனது பிகைப்படத்தையும் பேட்டியையும் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய இந்த நூலின் ஆசிரியர், சந்தனக் கடத்தல் வீரப்பனின் சிறு வயது முதல், யானை வேட்டைக்காரனாக இருந்த அவன், […]

Read more

யாப்பு விளக்கம்

யாப்பு விளக்கம் (தமிழ்ச் செய்யுள் இலக்கணம்), ப.எழில்வாணன், தமிழ்வாணன் பதிப்பகம், பக்.572, விலை ரூ.650. தமிழில் உள்ள யாப்பிலக்கணங்கள்தாம் தொன்மையும் முதன்மையும் கொண்டவையாகத் திகழ்கின்றன. தொல்காப்பியத்திற்குப் பிறகு புலவர்கள் பலர் யாப்பிலக்கணம் செய்துள்ளனர் என்றாலும், தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைத்த இரு யாப்பிலக்கண நூல்கள், அமிர்தசாகரர் என்பவரால் எழுதப்பட்ட யாப்பருங்கலமும், யாப்பருங்கலக்காரிகையும்தான். இந்நூல்களுக்குப் பிறகு சுமார் முப்பது யாப்பிலக்கண நூல்கள் வந்ததாகத் தெரிய வருகிறது. இந்நூல் இயற்றமிழ்ப் பாக்கள், இசைத்தமிழ்ப் பாக்கள், பொது, சித்திரப் பாக்கள் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு உறுப்பியல், பாவினங்கள், புதுப் […]

Read more

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், விலை 120ரூ. பத்திரிகைத் துறை, கல்வி, ஆன்மிகம், விளையட்டு, பொது மக்கள் சேவை போன்ற பன்முகத் துறைகளில் ஒப்பற்று விளங்கிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கைக் குறிப்பும், அவர் செய்த சாதனைகள், சேவைகள் ஆகியவற்றின் சுருக்கமான வரலாறும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. தொழிலாளர்களோடு தொழிலாளியாக நெருங்கிப் பழகிய அவரது பண்பு, அரசியலில் ஈடுபடாமலேயே, அனைத்து அரசியல் தலைவர்களாலும் கொண்டாட்டப்பட்ட அதிசயம் ஆகியவை உள்ளிட்ட டாக்டர். பா.சிவந்தி […]

Read more

இவர்தான் லெனின்

இவர்தான் லெனின் (கட்டுரைகள், கதைகள், குறிப்புகள்),  பூ.சோமசுந்தரம், ஜீவா பதிப்பகம், பக்.264, விலை ரூ.220. ரஷ்ய பொதுவுடைமை இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சிக்கும் தலைமை தாங்கிய பெருமைக்குரியவர் வி.இ.லெனின். அவருடன் பழகியவர்கள் லெனினுடனான தமது அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதி இருக்கிறார்கள். அவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. லெனின் மிகப் பெரிய தலைவராக இருந்தபோதிலும், ரஷ்யாவில் வாழும் மிகச் சாதாரணமான ஏழை மக்களின் வாழ்க்கை குறித்து மிக அதிகமான கவனம் கொண்டிருந்தது; ஏழை மக்களுடன் நெருங்கிப் பழகியது; அவர்களின் நலன் என்கிற நோக்கில் […]

Read more

கஞ்சி

கஞ்சி (சிறுகதை தொகுப்பு),  ஞா.திரவியம், நர்மதா பதிப்பகம்,  பக்.264, விலை ரூ.225. குமரி மாவட்ட மக்களின் அரை நூற்றாண்டுக்கு முந்தைய வட்டார வழக்கு, கலாசாரம், வழிபாடு, பண்பாடு, வாழ்வியல் முறைகளைச் சித்திரிக்கும் 30 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முன்பொரு காலத்தில் கஞ்சி மிக முக்கிய உணவாக இருந்தது. தாங்கள் படிக்கும் சிதிலமடைந்த பள்ளியை மாணவர்களே புனரமைக்கின்றனர். மாணவர்களுக்கு அப்போது கஞ்சியை உணவாக வழங்கினர். நோன்பு கஞ்சி, பங்குனி உத்தரத் திருவிழாவின்போது பிரசாதமாக ஊற்றப்படும் கஞ்சி என கஞ்சி […]

Read more
1 50 51 52 53 54 505