என்றென்றும் கண்ணதாசன்

என்றென்றும் கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், விலைரூ.330.   காலத்தால் அழியாத கவித் தென்றல் கண்ணதாசன். இவரின் திரைப் பாடல்கள் கேட்டு மனம் கரையாதவரே இருக்கமாட்டார்கள். அவர் திரைக்கதை சூழலுக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அப்பாடல்கள் எழுந்த வீட்டுச் சூழலை வெகு அற்புதமாய் அவர் மகன் எழுதியுள்ளார். கண்ணதாசனின் 13 பிள்ளைகளில், இந்த நுாலாசிரியர் அண்ணாதுரை மட்டுமே இளம் வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர். எனவே, அற்புதமான திரை அனுபவங்களால் கவிஞரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கவிஞரது புலமையும், […]

Read more

மகாமுனி திரைக்கதை

மகாமுனி திரைக்கதை, சாந்தகுமார், அறம் பதிப்பகம், விலைரூ.390.   நடிகர் ஆர்யா, இரு கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி. சமகால அரசியல், ஜாதி, வன்முறையால் சராசரி மனிதன் எவ்வளவு துயரங்களை சந்திக்கிறான் என்பதை, இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவில் விளக்குகிறது இந்நுால். வெவ்வேறு நிலப்பரப்பில், வெவ்வேறு வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்பின் அறியாத இரண்டு பேர், தாம் இரட்டையர்கள் என்பதை உணர வைக்க, சமுதாய அழுக்குகளில் இருந்து எடுத்துள்ள விதம், ஆசிரியரின் புதுமையை காட்டுகிறது. திரைமொழியில், இலக்கியத்தை உருவாக்க முடியும் என்பதை படிக்கும் போது உணர […]

Read more

திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்

திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள், ஜி.எஸ்.எஸ்.,, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. மொழிக்கு இசையில்லை. ஆனால் பாடலுக்கு மொழி அவசியம். கவிஞர்களின் ரசனையில் தோய்ந்து வரும் வார்த்தைகள் வரிகளாக கட்டமைக்கும் போது, மொழி புரிந்தால் மட்டுமே மனம் லயிக்கும். 32 முத்தான பாடல்களை, அவற்றின் வரிகளை படமாக்கப்பட்ட விதத்தை, ஒளிப்பதிவு கோணத்தை, இன்னும் சில கூடுதலான தகவல்களோடு சேர்த்து காவியமாக்கியுள்ளார் நுாலாசிரியர் ஜி.எஸ்.எஸ்., ‘திருப்புமுனையான திரைப்பட பாடல்கள்’ புத்தகத்தில் ஒவ்வொரு பாடலுக்குமான பாடலாசிரியரின் தாக்கத்தையும் தெளிவுபடுத்தியது அருமை. தசாவதாரம் படத்தில், ‘கல்லை மட்டும் […]

Read more

அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலைரூ.200. சென்னையிலிருந்து இடம்பெயர்ந்த 10ம் வயதில் பள்ளியில் சேர்வதற்கான மாற்றுச் சான்றிதழ் கிடைக்கக் காலதாமதமானபோது அப்பா, தாத்தாவின் மரப்பெட்டிகளைக் குடைந்து கிடைத்த பழைய இலக்கியங்கள் பற்றி பேசும் நுால். அவை இன்னதென அறிய இயலா இளமைக் காலத்திலேயே தனிப்பட்ட ஈர்ப்பு வந்ததாக குறிப்பிடுகிறார். ‘மறந்துபோன பக்கங்கள், வடுவூர் துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி, ஓலைச் சுவடிகள், அந்தக் கால விளம்பரங்கள், நாடி சோதிடம் புரியாத புதிரா, எழுத்து மூவர், விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள், […]

Read more

கொங்கு தேன்

கொங்கு தேன், சிவகுமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 நடிகர் சிவக்குமாருடன் ஒரு பயணம். திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டுவந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற […]

Read more

திரைக்கதை- கருவும் உருவும்

திரைக்கதை- கருவும் உருவும், சுரேஷ்வரன், பாரதி புத்தகாலயம், விலைரூ.150 சினிமாவின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் திரைக்கதை உள்ளது. ஒரு வலுவான கதையை, திரைக்கதை தான் சுவாரசியப்படுத்தும். இதை விவரிக்கிறது இந்த நுால். குறும்படம், முழுநீள சினிமா இரண்டிற்கும் திரைக்கதை எப்படி எழுத வேண்டும்; தயாரிப்பாளர், நாயகன், நாயகி ஆகியோரிடம் கதை சொல்லும் முறை குறித்து அறிய முடிகிறது. கதை தேர்வு, சொல்லும் நுணுக்கம், காட்சி விவரிப்பு, மெருகேற்றல் உள்ளிட்ட 31 தலைப்புகளில், நுால் ஆசிரியர் விளக்குகிறார். சினிமாவில் முதல் காட்சி என்பது, கதையின் […]

Read more

வைரமுத்து வரை

வைரமுத்து வரை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1600ரூ. இமாலயச் சாதனை என்று பாராட்டும்வண்ணம் 1550 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரம்மாண்ட நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1931-ஆம் ஆண்டு முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய அத்தனைபேர் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு பாடல் எழுதியவரைக் கூட விட்டுவிடாமல், அனைவரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்து இருப்பது வியப்பளிக்கிறது. காலவரிசைப்படி, ஒவ்வொரு பாடலாசிரியர் பற்றிய குறிப்பு, அவர் எழுதிய பாடல் வரிகளில் காணப்படும் […]

Read more

ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்

ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.125. ஒரு சிலர் குறித்து எத்தனை புத்தகங்கள் வெளிவந்தாலும் அத்தனையும் வாசகர்களின் வரவேற்பைப் பெறும். அவர்கள் குறித்த சம்பவங்களும், செயல்பாடுகளும் ஏற்படுத்தும் வியப்பு அத்தகையவை. மக்கள் மனதில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அதற்குக் காரணம். அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் தமிழகத்தால் கொண்டாடப்படும் ஜே.பி.சந்திரபாபு. சந்திரபாபு நடித்த திரைப்படங்கள் 70. அதில் 25 திரைப்படங்களில் அவரது பாடல்கள் இடம் பெறவில்லை. 45 படங்களில் 65 பாடல்களைப் பாடியிருக்கிறார். […]

Read more

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்,  ஞா.கற்பகம், கற்பக வித்யா பதிப்பகம், பக்.400, விலை ரூ.300.   தமிழ்மொழியில் முதல் பேசும் படம் 1931 – ஆம் ஆண்டில் வெளியானது. அதற்கு முன்னர் மெளனப் படங்களே வெளிவந்தன. தமிழ்த் திரைப்படம் பேசத் தொடங்கிய, பாடத் தொடங்கிய 1931 முதல் 2000 -ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்பட உலகில் பணியாற்றிய 61 இசையமைப்பாளர்கள், 64 பாடகர்கள், 54 பாடகிகள், 22 இசைக்கருவி இசைக்கும் கலைஞர்கள் என மொத்தம் 201 பேரைப் பற்றிய தகவல்கள் இந்நூலில் தொகுத்துக் […]

Read more

வெள்ளித்திரைக்கேற்ற கதைகள்

வெள்ளித்திரைக்கேற்ற கதைகள், ஆர்.மகேந்திரகுமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230. மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய தலைப்புகள் கொண்ட கதைகள் சுவாரசியமாக உள்ளன. உடல் உறுப்பு தான மோசடி, அரசியல் நகர்வு, ஏமாற்றுதல், அதிகாரிகளின் சுயநலம், நட்பு, குடும்பம் என, பல அம்சங்களை உணர்த்துகிறது. சினிமா இயக்கும் ஆசையுள்ளோருக்கு உதவும். – டி.எஸ்.ராயன். நன்றி: தினமலர், 22/11/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030817_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 29