சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ. தமிழ்த் திரை உலகில், பெரிய வாத்தியார் எம்.ஜி.ஆர்., சின்ன வாத்தியார் கே. பாக்யராஜ். இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கதையாசிரியர்களில் ஒருவரான பாக்யராஜ், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில் என்ற கிராமத்தில், 1953ல் பிறந்தார். சென்னைக்கு வந்த அவர், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து, சிறு சிறு பாத்திரங்களில் நடித்து, கதாநாயகன் பாத்திரம் ஏற்றும், பிறகு சொந்தமாகக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற […]

Read more

நம் நாயகம்

நம் நாயகம், ஜெஸிலா பானு, அல்லாப் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளை, திருவாரூர் மாவட்டம், விலை 300ரூ. இறுதி இறைத் தூதராய் இந்த அவனியில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். நபிகளாரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனித சமுதாயம் பின்பற்றி நடக்க வேண்டிய போதனைகளாகும். அதே குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக […]

Read more

சாவித்திரி வாழ்க்கை வரலாறு

சாவித்திரி வாழ்க்கை வரலாறு, நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று சாவித்திரி – கலைகளில் ஓவியம் என்ற தலைப்பில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா. செ. இன்பா. 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில், ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். அப்போது அரும்பிய காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது. இரு குழந்தைகள் பிறந்தன. 1968ம் ஆண்டில் சாவித்திரி டைரக்டர் ஆனார். அதனால் பல பிரச்சினைகளை சந்தித்தார். சொத்துக்களை இழந்தார். ஈருல் ஓருயிர் என்பதுபோல் வாழ்ந்த […]

Read more

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி, கலைமாமணி வி. ராமமூர்த்தி, வி.ஆர். பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் 40 ஆண்டு காலம் அனுபவம் உள்ள பத்திரிகையாளர் கலைமாமணி வி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆருடனும், ஜெயலலிதாவுடனும் நெருங்கிப் பழகியவர். தனது 40 ஆண்டு அனுபவங்களை இப்புத்தகத்தில் சவைபட எழுதியிருக்கிறார். மைசூரில், பி.ஆர். பந்துலுவின் கங்காகவுரி படப்பிடிப்பு நடந்தபோது, அரிவாள் கத்தியுடன் வந்து கன்னடர்கள் கலாட்டா செய்தனர். ஜெயலலிதா அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்து நின்று, அவர்களை விரட்டி அடித்த அந்த சம்பவத்தைப் படிக்கிறபோது, சின்ன வயதிலேயே ஜெயலலிதாவிடம் வீரலட்சுமி குடிகொண்டிருந்ததை […]

Read more

திரைப்படத் தணிக்கை முறை

திரைப்படத் தணிக்கை முறை, கமர்ஷியல் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. திரைப்படங்களை எடுத்து முடித்தபின், பட அதிபர்களை எதிர்நோக்கி இருக்கும் அடுத்த முக்கியமான வேலை, படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்பி சர்டிபிகேட் வாங்குவதாகும். ஆபாசம் என்றும், ஆட்சேபகரமானவை என்று தணிக்கைக் குழுவினர் கருதுகிற காட்சிகளை, வெட்டி எறிந்து விடுவார்கள். தணிக்கைக் குழுவின் முடிவு அநீதியானது என்று பட அதிபர் கருதினால், அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். இதை எல்லாம் விளக்கமாக கூறுகிறது. நாம் அறிந்து கொள்வோம் – திரைபடத் தணிக்கை முறை என்ற […]

Read more

சாவித்திரி கலைகளின் ஓவியம்

சாவித்திரி கலைகளின் ஓவியம், மு.ஞா.செ. இன்பா, தோழமை வெளியீடு, சென்னை, பக். 272, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரி, தன்னைப் பற்றி ஒரு சுயசரிதை நூல் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதுபோல உள்ளது இந்நூல். சாவித்திரியின் மரணப்படுக்கையில் தொடங்கி, பின்னர் பின்னோக்கிச் சென்று அவருடைய வாழ்க்கையை ஃப்ளாஷ்பேக் பாணியில் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் திரைக்கதையைப் போல பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாவித்திரியின் தேச பக்தி, தயாள குணம், வெகுளித்தனம், வெளிப்படையான பேச்சு, நிர்வாத் திறன், நடிப்புத் திறன், இயக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு […]

Read more

செல்லுலாயிட் சித்திரங்கள்

செல்லுலாயிட் சித்திரங்கள், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 207, விலை 100ரூ. சிவாஜிக்கு பதிலாக எம்.ஜி.ஆர். பத்தாண்டு காலத்தில், ஆயிரம் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறார் தமிழ்மகன். அடுத்த எட்டு ஆண்டுகளில் இருபதுக்கும் குறைவாம். இரண்டும் கடந்த சமஸ்திதியில் வெளிவந்திருக்கிறது அவருடைய இந்த நூல். சின்னச் சின்னக் கட்டுரைகள் சிறுகதை போன்ற முத்தாய்ப்போடு. உருக்கம் அல்லது கிறக்கம் தரும் தகவல்கள், பனி மூட்டம் போன்ற மனித நேயங்கள், விடையில்லாத கேள்விகள், கிளாமரில் துவங்கி மதமாற்றம் வரை போன நடிகையர் என்று சினிமா வேகத்தில் நிறைய […]

Read more

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள், ஆர். மணவாளன், கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, பக். 160, விலை 120ரூ. சுமார் 120 ஆண்டு கால சினிமாவின் சரித்திரத்தில் சாதனைகள் படைத்த நடிகர் நடிகையரைப் பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறார் ஆர். மணவாளன். நடிகர் நடிகையர் மட்டுமின்றி, தயாரிப்பாளர் வால்ட் டிஸ்னி, ஜேம்ஸ் பாண்ட் டபிள் ஓ செவன் பாத்திரத்தை மையமாக வைத்து கதைகளை எழுதிய இயான் ஃபிளமிங், இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் பாடகரான மைக்கேல் ஜாக்ஸன் போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன . ஹாலிவுட்டைச் சேர்ந்த கலைஞர்கள் […]

Read more

எங்கே எதற்காக

எங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக்பேலஸ் பி.லிட், பக். 182, விலை 150ரூ. தமிழில் ஒரு யதார்த்த சினிமாவை உருவாக்கி வெற்றிபெற்றவர் இயக்குனர் ஜெயபாரதி. அவரின் திரை உலக வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு இந்நூல். தன் பள்ளிப்பருவம் முதல் இன்று வரை நாடகம், சினிமா என்று இவர் இயங்கி வந்த அனுபவங்கள் ஒரு திரைப்படம்போல் விரிகிறது. சத்யஜித்ரே, மிருனாள் சென் உள்ளிட்ட மேதைகளின் தாக்கம் இதுவரை சினிமாவுக்குள் இழுத்துப்போட்டது சுவாரஸ்யம். பாலசந்தரின் மூன்று முடிச்சு, பட்டினப்பிரவேசம் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்க வேண்டியவர். […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், முனைவர் வெ. மு. ஷாஜகான் கனி, மதுரை, விலை 110ரூ. சினிமா ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. காரணம், ஆஸ்கார் பரிசு பற்றிய விவரங்கள் அனைத்தும் இதில் உள்ளன. ஆஸ்கார் பரிசு பெற்ற படங்கள் பற்றிய விவரங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் ஆஸ்கார் பரிசு பெற வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கை. வாய்ப்பு உண்டு என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற தலைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆஸ்கார் பரிசு […]

Read more
1 14 15 16 17 18 30