மாணவ மணிகளே

மாணவ மணிகளே, டாக்டர் ச. தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், பக். 74, விலை 50ரூ. மாணவ சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இந்நூல். மது, புகை, தற்கொலை, கேலிவதை போன்ற களையப்பட வேண்டியவைகளையும், பெற்றோர், ஆசிரியர், நண்பர் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் மாணவர்களின் கற்கும் முறை, லட்சியம், தொண்டுள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்கிற நூலாசிரியரின் எண்ணமே இங்கே நூல் வடிவம் பெற்றுள்ளது. நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

எதிரி உங்கள் நண்பன்

எதிரி உங்கள் நண்பன், பால்தசார் கிராசியன், தமிழில்  சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக்.96,  விலை ரூ.80. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின் தமிழ் வடிவம் இந்நூல். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. நீ யார், என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி முன்னேற வேண்டும் […]

Read more

நம்பிக்கை நாட்காட்டி

நம்பிக்கை நாட்காட்டி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்., 120, விலை 80ரூ. என் பெயர் நம்பிக்கை அனுபவங்கள் ஒவ்வொன்றும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த அனுபவங்களே நம்முடைய வாழ்விற்கான அர்த்தங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சிறப்பாகவும், ரசனையோடும் இருத்தல் அவசியமாகிறது என்பதை படைப்பின் மூலம் உணர்ந்து, மற்றவர்களையும் வாசிப்பின் மூலம் உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர் சங்கரராமன். மொத்தம், 48 தலைப்புகளில் பக்கத்திற்கு பக்கம் சிந்திக்க வைத்திருக்கிறார். தலைப்புகளின் துவக்கமும், முடிவிலும் ஒரு […]

Read more

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ. வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை உருவாக்கும் சிந்தனைகளைத் தூண்டும் நூல். சிறப்பான மொழி பெயர்ப்பு. நூலாசிரியர் நெப்போலியன் ஹில், 12 மகத்தான செல்வங்கள் எனப் பட்டியலிட்டு, நேர்மறை மனோபாவம், நல்ல உடல் ஆரோக்கியம், சகமனிதர்களுடன் நல்லுறவு, பயத்திலிருந்து விடுதலை, சாதிக்கும் தன்னம்பிக்கை, நம்பிக்கை கொள்வதற்கான ஆற்றல், நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாட்டம், உழைப்பின் மீது காதல், திறந்த […]

Read more

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு, அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 269, விலை 145ரூ. “ஒவ்வோர் இளைஞனுக்கும் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு லட்சியம் வேண்டும். அதை நிறைவேற்ற விடாமுயற்சியோடு கடுமையாக உழைக்க வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும்‘’ என்று இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதற்காக நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாக திரும்பத் திரும்ப கூறியிருப்பது, புத்தகத்தை ஆழமாகப் படிக்கத் தூண்டுகிறது. தவிர, 2020-இல் இந்தியா ஒளிர வேண்டும் என்ற தனது கனவை மெய்ப்படுத்த விவசாயம், அறிவியல், […]

Read more

உறக்கத்திலே வருவதல்ல கனவு

உறக்கத்திலே வருவதல்ல கனவு, ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 263, விலை 130ரூ. நான் விளக்காக இருப்பேன்! முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தமிழகத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்கிறார் கலாம் 1. வாழ்வில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும்; சிறிய லட்சியம் குற்றமாகும் 2. அறிவைத் தேடித்தேடிப் பெறல் வேண்டும் 3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் 4. விடா முயற்சி […]

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்,  கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் தனது முகநூல் பக்கத்தில் இளைஞர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அவற்றில் 32 கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் கேள்விகள் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என தங்களுடைய முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்கின்றன. கூட்டுக் குடும்பத்தின் தேவை, பெண்களின் நிலை, நிறுவனங்களில் தலைமைப் பதவிக்கு வருபவர்களுக்கான தகுதிகள் என பொதுவான விஷயங்களைப் பற்றியதாகவும் இருக்கின்றன. கேள்விகள் எப்படியிருப்பினும், அதற்கான பதில்கள் பிரச்னைகளை அறிவியல்ரீதியான முறையில் […]

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்,

. உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அது போலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். கடந்த 10 ஆண்டுகளில் அப்துல் கலாமுக்கு இளைஞர்களிடமிருந்து வந்த கடிதங்கள், கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கான பதில்கள் எல்லாம் வாழ்வில் அவர் கற்றுக்கொண்ட சுய அனுபவங்கள் சார்ந்தவை. […]

Read more

தமிழ் அகராதிகளும் குற்றங்களும் குறைகளும்

தமிழ் அகராதிகளும் குற்றங்களும் குறைகளும், “திருத்தம்” பொன். சரவணன், சைபர்நெட் சேவை மையம், விலை 200ரூ. அகராதிகளில் காணப்படும் குற்றங்களையும், குறைகளையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார், நூலாசிரியர் “திருத்தம்” பொன். சரவணன். சில சொற்களுக்கு புதிய அர்த்தங்களை கூறுகிறார். ஆசிரியர் ஆராய்ச்சித்திறன் பாராட்டத்தக்கது. ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- நேர்மையாக சிந்திப்போம் நன்மைகள் பெறுவோம், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மாறுபட்ட எண்ணங்கள் இருக்கக்கூடும். இவ்வெண்ணங்கள் முரண்பட்டும் இருக்கும். இருப்பினும் எதிர்மறை எண்ணங்களைத் […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 230ரூ. உணவு சம்பந்தமான விரிவான புத்தகம் இது. ஆனால் உணவு தயாரிப்பது எப்படி என்ற சமையல் புத்தகம் அல்ல. ஒவ்வொரு உணவின் ரிஷி மூலம் என்ன? அது எப்படி எங்கே கண்டுபிடிக்கப்பட்டு பிரபலம் ஆனது என்பது பற்றிய வியப்பான செய்திகளை ருசிகரமான முறையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அல்வா, கொழுக்கட்டை, சாக்லேட், பலா போன்றவை பற்றிய அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/6/2016.   —- பெண் வாழப்பிறந்தவள் அல்ல ஆளப்பிறந்தவள், அரிமா கே.மூர்த்தி, […]

Read more
1 9 10 11 12 13 23