வெல்வதற்கே வாழ்க்கை

வெல்வதற்கே வாழ்க்கை, கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ‘எண்ணம் போல வாழ்வு’ என்பார்கள். வாழ்க்கையை வண்ணமயமாக்குவது எண்ணங்களே. அதன் அடிப்படையில் தன்னம்பிக்கை கட்டுரைகளை இந்த நூலில் கவிஞர் கவிதாசன் எழுதியுள்ளார். ‘தோற்றுப் போவது அவமானம் இல்லை. தோல்வியில் அவமானம் இல்லை. தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வதுதான் அனுபவம்’, ‘செவிகளில் தேன் தடவும் சொற்களை விட, இதயத்திற்கு இதம் சேர்க்கும் செயல்களே சிறந்தவை’ என்பன போன்ற கருத்துகளை நூல் முழுக்கக் காணலாம். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, த. இராமலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 130ரூ. வாழ்க்கையை ஆடம்பரத்தாலும் இலவசங்களாலும் தொலைத்துவிட்ட பலருக்கு, அவர்களின் வாழ்வை முன்னேற்றும் விதமாக மனிதர்களின் சிந்தனைகளைச் செதுக்கித் தரும் நூல். படிப்பவர்களின் வாழ்வு முன்னேற்றம் காணும் என்பது உறுதி. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

படித்த வேலையா? பிடித்த வேலையா?

படித்த வேலையா? பிடித்த வேலையா? , காம்கேர் கே.புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,  பக்.196, விலை ரூ.145. நூலாசிரியர் கணினித் துறையில் தான் சந்தித்த சவால்கள் குறித்தும், கணினி உள்பட பல்வேறு துறைகளில் இன்றைய இளம் தலைமுறையிருக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் இந்நூலில் எழுதியிருக்கிறார். ஐ.டி. துறை இளைஞர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை குறைப்பதற்கான வழிமுறைகள், இணையதள வங்கி செயல்பாடுகள், கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு, பெண் நிர்வாகிகளின் கீழ் பணிபுரியும் பெண்கள் மனநிலை மாறுமா என 20 அத்தியாயங்களில் பல்வேறு […]

Read more

உங்களுக்கான 24 போர் விதிகள்

உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. இப்போதைய நேர்மையற்ற சில அதிகாரிகளை மனதில் நிழலாட விட்டு, இந்தப் புத்தகத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். எடுத்தாலும் தவறில்லை. படித்து முடித்து இறுதியில், இப்படிப்பட்ட சிந்தனையைத் தூண்டும் அதிகாரியை நாம் பெற்றிருக்கிறோமே என, ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம். தனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாண்டி, எப்படி ஒரு அதிகாரியாகச் செயல்படுவது என்பதற்கு, தன் அனுபவத்தின் மூலமும், தான் படித்த அரிய புத்தகங்களின் மூலமும் மனதைப் பதப்படுத்தித் […]

Read more

டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட்டும் கோலியாத்தும், மால்கம் கிளாட்வெல், தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 352 , விலைரூ.300. பின்தங்கியவர்கள், பொருந்தாதவர்கள் எனக் கருதப்படுவோர் – பேராற்றல் வாய்ந்தவர்களாகக் கருதப்படுவோரை, தங்களது போராட்டத்தின் மூலம் எதிர்கொண்டு, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு உண்மை நிகழ்வுகளை உதாரணம் காட்டி இந்நூல் விளக்குகிறது . முதலாம் உலகப் போரின் முடிவில், அரேபியாவை ஆக்கிரமித்திருந்த துருக்கியின் வலிமையான ராணுவத்தை, முறையான போர் உத்திகளை அறியாத பழங்குடியின மக்களைக் கொண்டு வீழ்த்திக் காட்டிய டி.இ.லாரன்ஸ், டிஸ்லெக்சியாவால் […]

Read more

உங்களுக்கான 24 போர் விதிகள்

உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. 1987 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நூலாசிரியர், தமிழக காவல்துறையின் உயர் பொறுப்புகள் பலவற்றிலும், நேர்மையாகவும், திறம்படவும் பணியாற்றி முதலமைச்சர் விருது, பிரதமர் விருது என்று பல விருதுகளையும் பெற்று வருபவர். தவிர, தமிழக இளைஞர்களுக்கு u.p.s.c.பதவிகளுக்கான போட்டித்தேர்வை எதிர்கொள்ள, இலவசப் பயிற்சி அளிப்பவர். இந்நூலில்இளைய தலைமுறையினரின் தன்னார்வத்தைக் கிளரச் செய்து, அவர்களின் வாழ்க்கைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கும் தடைகளை வெற்றி […]

Read more

எதிரி உங்கள் நண்பன்

எதிரி உங்கள் நண்பன், பால்தசார் கிராசியன், தமிழில் சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 80ரூ. ஸ்பெயின் தேசத்து சாணக்கியன் பால்தசார் எழுதிய புத்தகம் இது. எப்பொழுதும் நிலைக்கக் கூடிய கருத்துக்களை உருவாக்குகிற கலைஞர்கள் ஒருசிலரே பிறக்கிறார்கள். அவர்கள் கண்ட தரிசனங்களை வெளியில் வைக்கிறார்கள். இந்த வாழ்க்கை நம் முன் வைக்கும் மாய விளையாட்டைச் சுலபமாகக் கையாள பால்தசார் சொல்லித் தருகிறார். இது சுய முன்னேற்ற நூல்லல்ல. உங்களின் ஆளுமையை, இருத்தலை உங்களுக்கே உணர வைக்கும் நூல். உலகமெங்கும் பேசப்பட்ட புத்தகம். தினசரி வாழ்வில் […]

Read more

போர்த் தொழில் பழகு

போர்த் தொழில் பழகு, வெ. இறையன்பு, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 156, விலை 250ரூ. இளைய தலைமுறை எப்படிப்பட்டதாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வரும் இந்நூலாசிரியர், இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உருவாக தன்னம்பிக்கையும், துணிவும் வேண்டும். அது உருவாக ‘போர்க் குணம்’ வேண்டும் என்கிறார். ’ரௌத்திரம் பழகு’ என்று மகாகவி பாரதியும் கூட வலியுறுத்தியுள்ளார். தீமைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் நியாயமான கோபம்தான் போர்க்குணம். இக்குணம் உடையவர்களால்தான் உலகம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைகிறது. […]

Read more

தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள்

தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள், ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக், கண்ணதாசன் பதிப்பகம், பக்.320, சலுகை விலை 100ரூ. தொழில் மேதை ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக் தோல்விகளை எதிர்த்துப் போராடி தான் கண்ட வெற்றிகளை தன் வாழ்க்கை வரலாறு எழுதுவதுபோல, வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்நூலைப் படைத்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன் அனுபவங்களை வெற்றிக்கான சூத்திரமாகத் தந்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த சூழல் பள்ளிப்படிப்பு, கல்லூரிக்குப்பின் பார்த்த வேலை, மாதச் சம்பளத்தை உதறிவிட்டு, புதிய தொழில் தொடங்கியது. அவரது மனைவியின் ஒத்துழைப்பு, குடும்பத்தார் […]

Read more

நட்சத்திரங்கள் பறிப்போம்

நட்சத்திரங்கள் பறிப்போம், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கலைஞன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. நட்சத்திரங்களைப் பறிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் நூல். பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இருந்தாலும் எல்லாம் ஒரே குரலாகவே ஒலிக்கின்றன. “நம்பிக்கை மிக்க சிந்தனையோடு வாழ்வது எளிமையாக இருந்தாலும், உலகில் ஐந்து சதவிகித மக்களே நம்பிக்கை மிக்க சிந்தனையாளராக வாழ்கிறார்கள். அந்த ஐந்து சதவிகித மக்கள் கடினமாக உழைத்து அதிகமாகச் சம்பாதித்து உலகின் ஐம்பது சதவிகிதத்தை நிர்வாகம் செய்கிறார்கள்‘’ எனக் கூறும் நூலாசிரியர், ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து அதிகமாகச் சம்பாதித்து […]

Read more
1 7 8 9 10 11 23