வயிறு மட்டும் வாழ்க்கையல்ல

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல, ஏகலைவன், வாசகன் பதிப்பகம், விலை 70ரூ. கேள்விகள் கேட்கப் பழகுவோம், ஏளனங்களை ஏளனப்படுத்துவோம், தோல்விகளைத் தூர்வாருவோம், கோடுகளும் ஓவியமாகும், சாதனைகள் சாத்தியமே என்பன போன்ற தலைப்புகளில் கவிஞர் ஏகலைவன் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் நம் நெஞ்சில் நம்பிக்கை ஊட்டுகிறார். நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

பீனிக்ஸ் முற்றுப்பெறாத சித்திரம்

பீனிக்ஸ் முற்றுப்பெறாத சித்திரம், எஸ்.டி.எஸ்.இராசதேவன், சுவாதி பதிப்பகம், விலை 150ரூ. நூலாசிரியர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மற்றும் குறுக்கிட்ட தடைக்கற்களைப் படிக்கற்களாக்கியதன் மூலம் பல்வேறு வெற்றி, தோல்விகளைப் பெற்றுள்ளார். அதன் மூலம் பெற்ற படிப்பினைகளை பாடமாக அமைத்து, இந்த நூலை படிப்போர் தம் வாழ்க்கையிலும் வெற்றி நடைபோட்டு முன்னேற வழிகாட்டி உள்ளார். நன்றி: தினத்தந்தி,25/10/2017.

Read more

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி

வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி, மெர்வின், குமரன் பதிப்பகம், விலை 70ரூ. நோய் வந்தால் அதைப் போக்கிக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்யும் நாம், நோயைவிடக் கொடியதான எதிர்மறை எண்ணங்களை அகற்ற எந்த முயற்சியும் செய்வதில்லை. அதைச் செய்தாலே வாழ்வில் வெற்றிகளும் வளர்ச்சியும் நிச்சயமாகும். அதற்கான வழியினை உலக அறிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மூலம் விளக்கிச் சொல்லும் அற்புதமான நூல். நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், அப்துல்கலாம், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அதுபோலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்கிறார் நூலாசிரியர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்களின் மனதிலுள்ள நுட்பமான பிரச்னைகளை கேள்வி – பதில் வடிவில் அலசி ஆராயும் நூல். நன்றி: குமுதம்

Read more

வாய்ப்பின் வாசலிலே வெற்றி

வாய்ப்பின் வாசலிலே வெற்றி, ப.குணசேகரன், பண்புப் பதிப்பகம், விலை 150ரூ. ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் என்பது எல்லோருக்குமே சரிசமமாகத் தரப்பட்டிருக்கும் நேரம். அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதே நம் வாசல் தேடி வெற்றியை வரவழைக்கிறது. புகழ்பெற்ற வெற்றியாளர்கள் பலர் சாதிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை உதாரணம் காட்டி வெற்றிக்கு அஸ்திவாரம் போடச் சொல்லித் தருகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி, சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ. ஊக்குவிப்பதன் மூலம் ஒருவரிடம் இயல்பாக உள்ள சக்தியைத் துாண்ட முடியும்; அதிகரிக்க முடியும். அவரிடம் உள்ள மிகச் சிறந்தவற்றை வெளிக் கொண்டுவர முடியும். நிறைய படைப்பாளிகள் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றனர். சாதனைகள் அப்படித்தான் நிகழ்த்தப்படுகின்றன. சமயங்களில் ஊக்குவிப்பு வெளியிலும் கிடைக்கும்; வீட்டிலும் கிடைக்கும். உண்மையில் உங்களுக்கு உள்ளிருந்தும் அதை நீங்கள் பெற முடியும். ஊக்குவிப்பு செய்கிற வேலைகளில் முதன்மையானது, ‘நம்மால் முடியும்’ என்ற உணர்வை ஒருவருக்குள் ஊட்டுவதும் ‘அத்தனை உயர்வுகளுக்கும் நாம் தகுதியானவர்தாம்’ என்ற […]

Read more

தலைவர்கள் தேவை

தலைவர்கள் தேவை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. “உங்களை நல்ல நம்பிக்கைகளால் நிரப்பிக் கொள்ளுங்கள். வருங்காலத் தலைவர்களாக வருவீர்கள்” என்ற அடிப்படையில் மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக முனைவர் நா. சங்கரராமன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. 15 கட்டுரைகள் மூலம் அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கைகளை விதைக்கிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

இனியெல்லாம் பிஸினஸே!

இனியெல்லாம் பிஸினஸே!, எஸ்.பி. அண்ணாமலை, ஒய்யே பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. தொழில் துறையில் கோலோச்சும் முதல் தலைமுறை தொழில் முனைவோர், வியாபாரக் குடும்பத்தில் இருந்து புதிதாகச் சிந்தித்து தனிப்பாதை கண்டவர்கள் என 52 பேருடைய வெற்றிக்கதைகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளனர். கோவை உண்ணாமுத்து, மதுரை கமலக்கண்ணன், ஆஸ்திரேலியா செந்தில் உள்பட 52 நகரத்தார்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். இதை எஸ்.பி. அண்ணாமலை தொகுத்து வழங்கியுள்ளார். முதலீட்டைப் புரட்டும் முறை, பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு, வங்கிக் கடன்களைக் கையாளுவது என்று தொழிலில் […]

Read more

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும், ஏ.எஸ். ஆப்ரகாம், நர்மதா பதிப்பகம். நேரத்தை சேமித்து வைக்க என்று எந்த வங்கியும் கிடையாது. ஆனால், நைசாக நழுவிக் கொண்டே கழியும் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாமே… எனக்கு நேரமே இல்லை, என்ன செய்யட்டும் என்று புலம்புவர்கள் இருக்கின்றனர். நேரத்தை முறையாக பயன்படுத்த அதை ஒழுங்கு செய்வது அவசியம் என்பதை எல்லாருமே தலையை ஆட்டி ஒப்புக் கொள்வர். ஆனால், நேரம் இல்லை என்று புலம்புவர்கள் அதை ஓழுங்கு செய்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். வரும் சின்ன சின்ன அத்தியாயங்களில் நம் […]

Read more

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 110ரூ. கல்லூரி படிப்பு முடித்தவர்களே சாதிக்க முடியும் என்பதல்ல. கல்லூரி காணாதவர்களும் நம் நாட்டில் சாதித்துள்ளனர். அந்த வகையில் கல்லுரிக்குச் செல்லாமல், தனது அனுபவப் படிப்பு காரணமாக சாதனை புரிந்த வள்ளலார், ஈ.வே.ரா. பெரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜர், கிருபானந்த வாரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகிய 9 பேரை தேர்ந்தெடுத்து இந்த நூலில் என்ஜினீயர் க.அருச்சுனன் எழுதியுள்ளார். இந்த 9 பேர் வாழ்வில் […]

Read more
1 6 7 8 9 10 23