பொதுவுடைமையரின் வருங்காலம்?

பொதுவுடைமையரின் வருங்காலம்?, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 250ரூ. மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக்கூடாது! இப்படி ஒரு புத்தகத்தைக் கம்யூனிஸ்ட் விமர்சகரோ அல்லது எதிரியோ எழுதி இருந்தால், கம்யூனிஸ்ட்டுகள் (எல்லா பிராண்ட் கம்யூனிஸ்ட்டுகளும்தான்!) அந்த நபர் மீது விழுந்து பிறாண்டி இருப்பார்கள். ஆனால், எழுதியவர் ஒரு கம்யூனிஸ்ட். அதுவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர். அதுவும், தா. பாண்டியன் என்பதால் மார்க்ஸியப் புத்தகங்களை மலையளவு வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ‘பொதுவுடைமை’ என்ற […]

Read more

நிழல்படம் நிஜப்படம்

நிழல்படம் நிஜப்படம், யுகன், நற்றிணை, விலை 300ரூ. அரசியல்வாதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிறந்த ஆங்கிலத் திரைப்படத்துக்கும், ஆர்ட் பேப்பரில் வண்ணப்படம் இணைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் தரம் பிரமாதம். புத்தகத்தைப் பார்த்தவர்கள், அதன் விலை 300ரூ மிகக் குறைவு என்று ஒப்புக்கொள்வார்கள். நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Read more

கழகத்தின் கதை (அ.தி.மு.க. தொடக்கம் முதல் இன்று வரை)

கழகத்தின் கதை (அ.தி.மு.க. தொடக்கம் முதல் இன்று வரை), மருததுவர் இராமதாஸ், புதிய அரசியல் பதிப்பகம், பக். 288. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தொடங்கிய அ.தி.மு.க., இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது என்பதைக் காட்டும் நூல். இதை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதி யிருக்கிறார். அவருடைய கருத்தில் அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டுமே கெட்டவர்கள் அக்கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரு கட்சி களையும் ஆதரித்த பா.ம.க., நிறுவனர் […]

Read more

ஹிட்லரின் வதைமுகாம்கள்

ஹிட்லரின் வதைமுகாம்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. ஒரு உயிரின் அடிப்படை அம்சம் இனம் என்பது ஹிட்லரின் நம்பிக்கை. வரலாறு என்பது இனங்களுக்கு இடையிலான போராட்டமே தவிர வேறில்லை. எந்த இனம் வலுவானதோ அது தழைத்து நிற்கும். வலு குறைந்தது அழிக்கப்படுகிறது அல்லது அழிக்கப்பட வேண்டும். மதம், அறம், தார்மீகம் போன்றவை தடைக்கற்கள். இவையெல்லாம் யூதர்களின் கண்டுபிடிப்புகள் என்பது ஹிட்லரின் கருத்து. மேன்மையான நிலையை அடைய வேண்டுமானால், பலவீனமான இனத்தை மட்டுமல்ல, அது உருவாக்கிய சிந்தனைகளையும் சேர்த்தே அழிக்க வேண்டும் […]

Read more

காஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

காஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்- பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர், தமிழில்; செ. நடேசன், எதிர் வெளியீடு, பக். 452, விலை ரூ. 380. காஷ்மீர் பிரச்னை பற்றி பொதுத் தளத்தில் கூறப்படும் காரணங்களுக்கும், விளக்கங்களுக்கும் மத்தியில், இந்த நூல் வித்தியாசமான அணுகுமுறையுடன் வெளிவந்திருக்கிறது. தமிழிலேயே எழுதப்பட்ட நூல் என்று சொல்லும் அளவுக்கு மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்கள், வெறுமனே இஸ்லாமியர்களின் வெறித்தனம் என கட்டமைக்கப்பட்டுள்ள பொது வெளிக்கு, அது காஷ்மீரி தேசிய இனத்தின் விடுதலைக் […]

Read more

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 242, விலை 220ரூ. மக்களுக்குப் பயனுள்ள நூல்களை வெளியிட்டு வரும் இந்நூலாசிரியர், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த இந்நூலை வெளியிட்டுள்ளார். மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு நடத்தும் ஆட்சி மக்களாட்சி. இது கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்த வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதே, இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74-ஆவது திருத்தங்கள். இதன்மூலம், அரசின் உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து அடிமட்ட நிர்வாகம் வரையிலான அதிகாரப் பரவல், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Read more

அரியணையில் ஏறிய பொய்கள்,

அரியணையில் ஏறிய பொய்கள், எஸ்.ஆரோக்கியசாமி,  பக்.296, விலை ரூ.220. தற்போது காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நூலாசிரியர், அதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டிருக்கிறார். மின்வாரியத்தில் வேலை செய்திருக்கிறார். தொழிற்சங்க இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். பொதுவாழ்க்கையில் நூலாசிரியருக்குக் கிடைத்த அரிய அனுபவங்கள் இந்நூலில் சுவையாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியலில் மிக உயர்வானவர்களாகக் கருதப்பட்டவர்கள், கருதப்படுகிறவர்களுடன் கிடைத்த அனுபவங்களை எந்தவிதத் தயக்கமும், அச்சமும் இல்லாமல் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். சில அரசியல் தலைவர்களைப் பற்றி அவர் கூறும் செய்திகள், ‘இவரா? இப்படி?’ 39, என்று நினைக்கும் […]

Read more

பெருந்தலைவரின் நிழலில்

பெருந்தலைவரின் நிழலில், பழ.நெடுமாறன், தமிழ்க்குலம் பதிப்பாலயம், பக்.656, விலை ரூ.600. சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான காமராசரின் அருமை பெருமைகளை, சாதனைகளைச் சொல்லும் நூல். மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக உயர்ந்ததன் பின்னணியில் இருந்த அவருடைய நற்பண்புகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. 1954 இல் தமிழக முதல்வராக பதவியேற்ற காமராசரின் காலத்தில் தான் 11 ஆம் வகுப்பு வரை இலவச் கல்வி அளிக்கப்பட்டது. 1954 இல் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 45 சதவீதமாக […]

Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குகன், வானவில் புத்தகாலயம், விலை 140ரூ. மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த நேதாஜி, பிறகு “வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் கிடைக்கும்” என்று முடிவுக்கு வருகிறார். “நீ போக்கும் பாதை சரி இல்லை” என்று காந்தி எச்சரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்துகிறார், காந்தி. யாரும் எதிர்பாராத வகையில் பட்டாபியை எதிர்த்து நேதாஜி போட்டியிடுகிறார். வெற்றியும் பெறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறுகிறார். […]

Read more

ஊழலுக்கு ஒன்பது வாசல்

ஊழலுக்கு ஒன்பது வாசல், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், விலை 205ரூ. கொள்கை அரசியல் என்று ஆரம்பித்து, கொள்ளை அரசியல் என்று ஆகியிருக்கிறது இன்றைய நாட்டு அரசியல் நிலவரம். ஊழலையும், முறைகேடுகளையும், மிகப் பெரிய அளவில் செய்வது என்பது அரசியல் சாகசம் என்றாகி விட்டது. நடைமுறை அரசியல் ஊழல்மயமானதாகவும், ஊழல் நடைமுறையாக ஆனதாகவும் ஆன இந்த காலக்கட்ட அவலங்களை விவரிக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்த நூல். நேர்மையானவர்கள் படித்து விட்டு மனம் குமுறலாம்! பாவம்… அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? – மயிலை […]

Read more
1 11 12 13 14 15 44