இந்திய மொழிகளின் எழுத்துச் சீர்திருத்தம்

இந்திய மொழிகளின் எழுத்துச் சீர்திருத்தம், ராம்சபாபதி, அன்னராம் பதிப்பகம், விலை 150ரூ. தமிழ் மொழிக்கு சில எழுத்துச் சீர்த்திருத்தங்களை பெரியார் ஈ.வெ.ரா. அறிமுகம் செய்தார். முதல் – அமைச்சர் எம்.ஜி.ஆர். இருந்தபோது அதை அமல்படுத்தினார். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரலாம் என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ராம்சபாபதி கூறுகிறார். ஆலோசிக்க வேண்டிய விஷயம். நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஹாஜியா டாக்டர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், பக். 328, விலை 240ரூ. நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக வந்துள்ளது. இஸ்லாமிய மெய்யியல், திருக்குர் ஆனின் அறிவியல் சார்ந்த கருத்துக்களையும் சிந்தனைகளையும் உள்ளடக்கியிருப்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. திருக்குர்ஆன் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், ஆழமான ஆய்வாக உள்ளது. சமயத் திருமறைகளை விஞ்ஞான மனநிலையில் நின்று ஆராய்ந்துள்ளார். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

மலையாளம் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள்

மலையாளம் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகள், ப.விமலா, காவ்யா, பக்.342, விலை ரூ.340. மலையாளத்திலிருந்து தமிழில் நிறைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களில் குளச்சல் மு.யூசுப், குறிஞ்சிவேலன், சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரின் 55 மொழிபெயர்ப்பு நூல்களை மட்டுமே இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. மலையாளத்தின் புகழ்மிக்க எழுத்தாளர்களான தகழி சிவசங்கரபிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், மலையாற்றூர் இராமகிருஷ்ணன், எஸ்.கே.பொற்றேகாட், ஓ.என்.வி.குரூப், கே.சச்சிதானந்தன் உட்பட பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகம் வியக்க வைக்கிறது. என்னவிதமான படைப்புகள் […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்,

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க. மங்கையர்க்கரசி, லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை முனைவர் க. மங்கையர்க்கரசி இந்த நூலில் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசி இருக்கிறார். மருத்துவயியல், கருவியல், மரபியல், இயற்பியல், அணுவியல், கணிதவியல், வானியல் என்பன போன்ற 12 தலைப்புகளில் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அறிவியல் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

அழியும் மரங்கள்

அழியும் மரங்கள், சுப்ரபாரதிமணியன், சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நம் நாட்டில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் இருப்பதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறி உள்ளது. அவ்வாறு அழிந்து வரும் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் பணியை இந்த நூல் செய்துவருகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   தேவதைகளால் தேடப்படுபவன், படி வெளியீடு, விலை 60ரூ. புதுக்கவிதைகள் கொண்ட புத்தகம். தங்கம் மூர்த்தி மிகச்சிறந்த கவிஞராக வருவார் என்பதற்கு முன்னோட்டமாக விளங்குகிறது இந்த நூல். […]

Read more

வள்ளுவர்கள்

வள்ளுவர்கள், பேராசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 200ரூ. திருவள்ளுவர் பற்றிய வாய்மொழிக் கதைகளையும், குறள்களின் கருத்தமைப்பைக் கொண்ட பழமொழிகளையும், தற்காலக் கவிஞர்கள், திருக்குறளைக் கையாண்டு படைத்த கவிதைகளையும் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் படைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும், செண்பகம் வெளியீடு, விலை 120ரூ. உலகில் தோன்றிய மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஐன்ஸ்டீன். அவருடைய கண்டுபிடிப்புகள் பற்றி இந்த நூலில் விவரிக்கிறார், பேராசிரியர் முனைவர் மு.இராமசுப்பிரமணியன். […]

Read more

பறக்கும் தட்டு உண்மையா?

பறக்கும் தட்டு உண்மையா?, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 200ரூ. மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை கிடைக்காமல் இருக்கும் கேள்வி, வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா, அவர்கள் பறக்கும் தட்டு மூலம் நமது உலகுக்கு வந்து செல்கிறார்களா என்பதுதான். உலகின் பல பகுதிகளிலும் பறக்கும் தட்டுக்களைப் பார்த்தவர்கள் கூறிய ஆச்சரியமான தகவல்கள், அவற்றுக்கு விஞ்ஞானிகள் கூறும் விளக்கங்கள் ஆகியவற்றையும், வேற்றுக் கிரகவாசிகள் பற்றி அமெரிக்காவில் ரகசியமாக ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படும் ‘ஏரியா 51’ என்ற இடம் பற்றிய தகவல்களையும், சுவாரசியமாக தந்து இருக்கிறார், […]

Read more

கர்ணனின் வாழ்க்கை சாபமா? வரமா?

கர்ணனின் வாழ்க்கை சாபமா? வரமா?, செ. சரவணன், ஜெயலட்சுமி எண்டர்பிரைசஸ், விலை 100ரூ. பாண்டவர்களுக்கு அண்ணாகப் பிறந்தும், தேரோட்டியின் மகனாக வாழ்ந்தவன் கர்ணன். துரியோதனன் தயவால் வாழவேண்டிய நிலையில் இருந்தவன். எனினும் “தர்மம் செய்வதில் கர்ணனுக்கு நிகர் கர்ணனே” என்று புகழ் பெற்றான். அவன் வாழ்க்கையை அலசி ஆராய்கிறது இந்த நூல். படிப்பதற்கு சுவையான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ்

திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ், குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 168, விலை 140ரூ. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை மிகச் சரியாக கணித்த தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ். தலைவர்களின் அகாலமரணம், மோசமான இயற்கைப் பேரழிவுகள், உலகப் போர்கள், சண்டைகள், சச்சரவுகள் என்று பல்வேறு அம்சங்களை 16ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படித் துல்லியமாக கணிக்க முடிந்தது என்பதை அலசும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு, முனைவர் அ.காமாட்சி, முனைவர் செ.கல்பனா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 428, விலை 325ரூ. ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி தருகிறது. இரண்டாம் பகுதியில் ஐங்குறுநூற்றில் வரும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அகர வரிசைப்படுத்தப்பட்டு இலக்கணப் பொருளும், ஆங்கில இலக்கண விளக்கமும், தமிழ்ச் சொல்லும் வழங்கப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் சொற்கோவையில் இடம் பெற்றுள்ள சொற்கள் வரும், ஐங்குறுநூற்றுப்பாடல் எண்ணும், அடி எண்ணும் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதியில் ஐங்குறுநூற்றுச் சொற்களுக்கு […]

Read more
1 26 27 28 29 30 84