நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்,  செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.244, விவை ரூ.200. தமிழறிஞர்கள் சிலரின் தமிழ்ப் பணியைப் பற்றிய ஆய்வு இந்நூல். அவர்களின் ஒட்டுமொத்த தமிழ்ப் பணியின் மையப் புள்ளியைக் கண்டறியும் முயற்சி. உதாரணமாக, "கால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணம், மொழியியலில் வரலாற்று ஒப்பிலக்கணம் என்ற துறையைச் சேர்ந்தது' என்ற நூலாசிரியரின் வரையறுப்பு, ‘தமிழ் உலகில் மொழியுணர்வு அதிகமாக ஆட்சி செய்த காலத்தில், அறிவு வழிப்பட்ட விஞ்ஞானரீதியான கருத்துகள் பரவுவதற்கு பாடுபட்டவர் 39’ என்ற அடிப்படையில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரை […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம், வித்துவான் க. வெள்ளைவாரணனார், பூம்புகார் பதிப்பகம், விலை 290ரூ. தமிழ் நூல்களில் மிகப்பழமையானது “தொல்காப்பியம்”. உலகின் மிகப் பழமையான நூல்களில் ஒன்று என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியத்தின் சிறப்புகளை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?

நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், விலை 50ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு, 2000 ரூபாய் நோட்டை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியது பற்றி அலசி ஆராய்கிறார், நலந்தா செம்புலிங்கம். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —- கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை, தொகுப்பு சீட் அறக்கட்டளை, விகடன் வெளியீடு, விலை 185ரூ. புத்துணர்ச்சி பெறவும், ஆராக்கியமாகவும் வாழவும் நமது பாரம்பரிய உணவுகள் உதவுகின்றன. அத்தகைய கேப்பை முறுக்கு, சிறுதானிய சத்து உருண்டை, கேழ்வரகு இனிப்பு பணியாரம், […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவில் சிந்தனைகள்

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவில் சிந்தனைகள், லாவண்யா பதிப்பகம்,விலை 140ரூ. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை முனைவர் க. மங்கையர்க்கரசி இந்த நூலில் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசி இருக்கிறார். மருத்துவயியல், கருவியல், மரபியல், இயற்பியல், அணுவியல், கணிதவியல், வானியல் என்பன போன்ற 12 தலைப்புகளில் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அறிவியல் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர், பூங்குன்றன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 200ரூ. பழந்தமிழக வரலாற்றின் தொடக்கம், அதன் பின் உருவான தொல்குடிகள், நகரம் அமைப்பு, அரசு உருவாக்கம், வேந்தர்களின் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் போன்ற பல விவரங்களை ஆராய்ந்து இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பது தொல்பொருள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —-   ஞானத்தேடல், தென்றல் பதிப்பகம், விலை 75ரூ. ஆன்மிகக் கட்டுரைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, இக்கட்டுரைகளை இலக்கியத் […]

Read more

தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர் (பண்டைய தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு), ர. பூங்குன்றன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.252, விலை ரூ.200. ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. தமிழக அகழாய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளதால்தான் பண்டைய தமிழ்ச் சமூகம் தொடர்பான முழுமையான வரலாற்றுத் தரவுகள், விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை39‘ என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நூலாசிரியர், தம் மனக்குமுறல்களை இந்நூலின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார் – வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறலாம். அந்த வகையில், […]

Read more

முத்துவைக் கேளுங்கள்

முத்துவைக் கேளுங்கள், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், பக்.152, விலை ரூ.150. நூலாசிரியர் கலந்து கொண்ட கூட்டங்களில் மாணவ, மாணவியர் எழுத்து மூலம் தொகுத்து அளித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், பல்வேறு நாளிதழ்களில், இதழ்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நூலாசிரியர் அளித்த பதில்கள், நூலாசிரியரின் நேர்காணல் அனைத்தும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. வானவியல் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமல்ல, அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் தொடர்பான பல கேள்விகளுக்கும், எளிமையாகவும், தெளிவாகவும் அறிவியலில் ஆர்வமற்றவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நூலாசிரியர் பதில் அளித்துள்ளார். ‘ஏன் செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு […]

Read more

மாண்புமிகு வள்ளுவம்

மாண்புமிகு வள்ளுவம், க. அன்பழகன், கே.ஜி.பப்ளிகேஷன்ஸ், பக். 101, விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஒன்பது வகையான பொருண்மைகளில் ஆராய்ந்து, விளக்கம் தரும் நூல். திரும்பத் திரும்ப வாசித்தால் புதுப்புது பொருள் தரும் தன்மை கொண்ட திருக்குறளுக்கு, நூலாசிரியரின் விளக்கங்கள் மேலும் ஒரு புது விளக்கத்தைத் தருகிறது. உரையாசிரியர்களின் நோக்கில் நின்று குடும்ப உறவுகள் குறித்த விளக்கம் சிறப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை, துரை.குணசேகரன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.148. விலை ரூ.140. இலக்கியப் பணிகள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை), இலக்கணம் (தொல்காப்பியம்), யாப்பிலக்கணம்(யாப்பருங்கலக்காரிகை), அகப்புற நூல்கள் (கலித்தொகை, புறநானூறு), அறநூல்கள் (நான்மணிக்கடிகை, ஏலாதி), பதிப்புப் பணிகள் (ச.மெய்யப்பன்), வள்ளுவம் (மூன்று கட்டுரைகள்), ஐக்கூ (கவிதை) எனப் பல்வேறு துறைகளில் அமைந்த, பல்வேறு கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட பன்னிரு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இலக்கியப் பணிகள், தொல்காப்பிய மொழிமரபு, கலித்தொகையின் கருத்தும் காட்சியும், வள்ளுவத்தில் காணப்படும் ‘உடைமை 39‘, பண்புகள், நான்மணிக்கடிகை […]

Read more

திராவிடரின் இந்தியா

திராவிடரின் இந்தியா – டி.ஆர்.சேஷ ஐயங்கார்; தமிழில்: க.ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம்,  பக்.192, விலை ரூ.125. திராவிட நாகரிகம் குறித்தும் இந்து நாகரிக வரலாற்றில் அதற்குரிய இடத்தை வரையறை செய்யும் முயற்சியாகவும் எழுதப்பட்டுள்ள நூல். திராவிடர்களின் தோற்றம், திராவிட மொழிகள், திராவிடர்களின் இலக்கியம், இசை, சமய நம்பிக்கை, கட்டடக்கலை, வணிகம் போன்ற பல்வேறு கூறுகளையும் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பே பாண்டியர்கள் அரசு நாகரிகத்தில் சிறந்து விளங்கியதை மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தொல்காப்பியத்திற்கு முன்னரே பல தமிழ்நூல்கள் […]

Read more
1 27 28 29 30 31 84