தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும்

தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும், மு.சண்முகம்பிள்ளை, பக்.192, விலை ரூ.120. இன்றைக்கும் பலராலும் அறியப்படாதவர் பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை. 15க்கும் மேற்பட்ட நூல்களையும், அச்சுக்கு வராத காப்பியம், சிற்றிலக்கியம், சங்க இலக்கியம் முதலிய 25க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளையும் பதிப்பித்தவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1941-42 களில் எழுதப்பட்ட இந்த ஆராய்ச்சி நூல், அவரது குடும்பத்தினரால் இத்தனை காலமும் பாதுகாக்கப்பட்டு, தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்நூலில் காணப்படும் பல்வேறு கருத்துகளும் செய்திகளும் சுமார் 70 ஆண்டுக்கு முன் நூலாசிரியரால் ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பதை மறக்காமல் நூலைப் […]

Read more

செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை

செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை; தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்; இணைப் பதிப்பாசிரியர்:ஆ.இரமேஷ்; தொகுதி-1, பக்.520, விலை ரூ.330; தொகுதி-2 பக்.552, விலைரூ.350; தொகுதி-3, பக்.504, விலை ரூ.330; தொகுதி-4, பக்.504, விலை ரூ.320. சென்னை அரும்பாக்கம், துவாரகதாஸ் கோவர்த்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை மற்றும் தமிழ் இலக்கியத் துறை இணைந்து மார்ச் மாதம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள், நான்கு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 290 ஆய்வுக் கட்டுரைகள். அவற்றுள் தெலுங்குக் கட்டுரை ஒன்றும், இந்திக் கட்டுரைகள் இரண்டும், பன்னிரண்டு ஆங்கிலக் […]

Read more

காலத்தால் அழியாத சுதந்திரம்

காலத்தால் அழியாத சுதந்திரம், எல்லை. சிவக்குமார், மேன்மை வெளியீடு, பக். 128, விலை 100ரூ. புதுச்சேரி வரலாற்றில் வ. சப்பையாவுக்கும் அவர் தொடங்கிய ‘சுதந்திரம்’ இதழுக்கம் ஒரு சிறப்பான இடமுண்டு. அத்தகைய சிறப்பான ‘சுதந்திரம்’ பத்திரிகையின் ஆரம்பகால இதழ்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள், அரசியல், போராட்டம், தொழிலாளர்கள், இலக்கியம், சமூகம் என்று அனைத்தையும் இவ்விதழ் வழி ஆராயப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 5/4/017.

Read more

தர்ம அதர்ம சரித்திரம்

தர்ம அதர்ம சரித்திரம், ச. காடப்பன், யாழினி பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. மகாபாரதம் ஒரு வாழ்வியல் நூல். மனிதன் தர்மத்தின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டும் நூல். இதில் அப்பழுக்கற்றவர் என்று எவரும் இல்லை. முழுக்க முழுக்க அதர்மிகள் என்றும் அவருமில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் தத்துவத்தைச் சுட்டிக் காட்டும்படி படைக்கப்பட்டுள்ளன. இதில் 21 கதாபாத்திரங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயும் நூல் இது. நன்றி: குமுதம், 5/4/2017.

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.184, விலை ரூ.140. தமிழ் இலக்கியத் திறனாய்வுகள், திறனாய்வு செய்பவரின் வாழ்க்கைப் பார்வையிலிருந்து பலவிதமாக வெளிவந்திருக்கின்றன. இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சிப்பவர்களும், இலக்கியத்தின் வெளிப்பாட்டு அம்சத்தைப் பிரதானப்படுத்தி அழகியல் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும், இலக்கியம் எந்தக் கருத்தைச் சொல்கிறது என்ற அடிப்படையில் சமூகக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களே. ஆனால் இந்நூலின் விமர்சனப் பார்வை சற்றே வித்தியாசமானது. உளவியல் அறிஞர்களான ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகியோரின் உளவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான […]

Read more

திருமூலரும் பாரதிதாசனும்

திருமூலரும் பாரதிதாசனும், முனைவர் மா. அண்ணாதுரை, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. திருமூலரும், பாரதிதாசனும் ஆகிய இரு மாறுபட்ட படைப்பாளிகள் பற்றிய ஆய்வு நூல். இவர்களின் கருத்துக்களை ஒரு சேரக் காண்பது கடினம். திருமூலர் காலத்தால் முற்பட்டவர். பாரதிதாசன் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய மிகபெருமை வாய்ந்த கவிஞர். முன்னவர் ஆத்திகத்தில் தோய்ந்த சித்தர். பின்னவர் ஆத்திகக் கவிஞராக தோன்றி, பின்னாளில் நாத்திகக் கவிஞராக மலர்ந்தார். இருவரும் இறைக்கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், சமுதாய சிந்தனைகளில் ஏறக்குறைய ஒன்றாக விளங்கியவர்கள். இவர்களைப் பற்றி திறனாய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம்

தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. தமிழ்நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்த சங்கங்கள் எக்காலத்தில் இருந்தன? அதில் இடம் பெற்றிருந்த புலவர்கள் யார்? அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் எவை? என்று ஆராய்ந்து, தான் கண்டறிந்த உண்மைகளை இந்த நூலில் எழுதியுள்ளார் தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். அத்துடன் தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை பற்றியும் ராசமாணிக்கனார் புதுத்தகவல்களை விவரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின், புதிய வடிவமைப்பிலும் சிறந்த கட்டமைப்பிலும் நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

வேலூர் புரட்சி

வேலூர் புரட்சி, பேராசிரியர் ந. சஞ்சீவி, அலைகள் வெளியீட்டகம், விலை 60ரூ. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதி காலகட்டத்தில் மக்கள் எழுச்சியும், பல்வேறு போராட்டங்களும் வலுப்பெற்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற செயலுக்கு வேலூர் புரட்சி அடித்தளமாக அமைந்தது. அத்தகைய வேலூர் புரட்சி குறித்து பேராசிரியர் ந. சஞ்சீவி ஓர் ஆய்வு நூலாக வழங்கியுள்ளார். வேலூரின் தொன்மையான வரலாற்றையும் அவர் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

பனைமரம்

  பனைமரம், முனைவர் இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 758, விலை 800ரூ. தமிழர் வாழ்வியலில் பனைமரத்தின் பயன்பாடு என்பது, ஒரு பண்பாட்டும் பயில்வு நிலையாகவே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அகமாயினும் புறமாயினும் மானுட வாழ்வின் பல்வேறு படிநிலையாக்கங்களிலும் பனைமரத்தின் செயல்பாடு நீடித்திருப்பதை எண்ணற்ற சான்றுகள் வாயிலாக எடுத்துக்காட்ட இயலும். குறிப்பாக தமிழர் அறிவும் பாரம்பரியத்தின் களஞ்சியமாகத் திகழும் பல்வேறு எழுத்தாக்கங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் காத்த பெருமை, பனைமரத்தின் ஓலைகளால் ஆன சுவடிகளையே சேரும். தமிழ்ச்சுவடி மரபே உலக நூலாக்கத்தின் […]

Read more

அரசியல் அறிவியல்

அரசியல் அறிவியல், டாக்டர் S.இராமநாதன், டாக்டர் K. செந்தில்குமார், நோசன் பிரஸ் வெளியீடு, பக். 140, விலை 175ரூ. இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும் அரசியல் அறிவியல் (Pollitical Science) துறையில் மட்டுமின்றி மற்ற சில துறைகளிலும் ஆராய்ச்சி பட்டங்களைப் பெற்றவர்கள். NET/SLET, IAS மற்றுமுள்ள போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களை மனதில் கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார். அரசியல் என்பது வெறும் நிர்வாகத்துறையை மட்டுமின்றி, சட்டத்துறை, நிதித்துறை, அறிவியல், பொருளாதாரம், விவசாயம், தொழிற்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, விளையாட்டுத்துறை… என்று அனைத்து துறைகளையும் ஒழுங்குபடுத்தி செல்லும் […]

Read more
1 28 29 30 31 32 84