பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க, கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 210ரூ. பெரியார் பற்றிய சிறந்த நூல் பெரியார் மறைவு பற்றி பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை சேகரித்து, “பெரியார் மறைந்தார். பெரியார் வாழ்க” என்ற தலைப்பில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு நூலை தொகுத்துள்ளார். பெரியார் மறைவு பற்றி மட்டுமல்ல. அதற்கு முன் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகள் பற்றியும் இந்த நூலில் பல அபூர்வத் தகவல்கள் அடங்கியுள்ளன. பெரியாரின் பொன்மொழிகளும், கட்டுரைகளும் நல்விருந்தாக அமைந்துள்ளன. “எனது நிலை” என்ற […]

Read more

தமிழ்க்காப்பு இயம்

தமிழ்க்காப்பு இயம், புலவர் மீ.காசுமான்,காசுமான் பதிப்பகம், பக்.402, விலை ரூ.200. செய்யுள் வடிவிலான நமது சங்க இலக்கியங்களை பாமரரும் அறிய உதவியவர்கள் நமது உரையாசிரியர்களே. உரைநடை இலக்கியச் செல்வாக்கு மிகுந்துவிட்ட இக்காலகட்டத்தில், தமிழில் இலக்கண நூல் ஒன்று வெளிவந்திருப்பது, வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எழுத்து, சொல், பொருள் என தொல்காப்பியம் அமைந்த நிலையில், கால மாற்றத்துக்கு ஏற்ப அதை எழுத்து, சொல், சொற்புணர்ச்சி என நூலாசிரியர் மாற்றத்தைப் புகுத்தி அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்திருக்கிறார். தமிழில் எழுத்து மாற்றம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப […]

Read more

தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்

தமிழர் புத்தகங்கள்  ஓர் அறிமுகம், தொகுப்பாசிரியர் சுப்பு, விஜயபாரதம் பிரசுரம், பக்.504, விலை  ரூ.200. ஒரு மொழியைப் பயன்படுத்துவது குறைந்து கொண்டே வருகிறது என்றால், அந்த மொழி அழிவை நோக்கிச் செல்கிறது என்று சொல்லலாம். தமிழில் தொன்மையின் தொடர்ச்சியாக, தேசியத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் படைப்புகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, வாழும் தமிழின் போக்குகளையும், வாசிக்கும் அன்பர்களின் விரிவான தேடலையும் இணைக்கும் விதமாக, இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான சுப்பு. சுகி.சிவம் முதல் வ.வே.சு. வரை தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலர் இதில் […]

Read more

மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள்

மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள், கோபால் மாரிமுத்து, பக்.395, விலை ரூ.169. ஆப்ரஹாம் லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர்கிங், உட்ரோ வில்சன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், நேரு, ஜான் கென்னடி, பராக் ஒபாமா உள்ளிட்ட 37 தலைவர்கள், அறிஞர்களின் குறிப்பிடத்தக்க சொற்பொழிவுகளின் ஆங்கில மூலமும், அவற்றின் தமிழாக்கமும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், நூலைப் படிப்பவரின் அறிவும், பார்வையும் விரிவடையும் வாய்ப்புள்ளது. நிறவெறி ஒழிய “”கண்ணியமான ஒழுக்கமான போராட்டத்தை நடத்த […]

Read more

வாழ்வின் புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள்!

வாழ்வின் புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள்!, தேவிசந்திரா, மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. வாழ்வியல் மற்றும் சமூக முன்னேற்றச் சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கு தன்னம்பிக்கை, தைரியம், லட்சியம் மிகவும் அவசியம் என்பதை மனதில் அழகாக விதைக்கும் விதமாக 32 கட்டுரைகளில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் தேவி சந்திரா. நன்றி: தினத்தந்தி, 11/5/2016.   —- ஓலைச் சுவடியின் இரகசியங்கள், முனைவர் தமிழ் இனியன், அறிவுக்கடல் பதிப்பகம், விலை 150ரூ.(ஒவ்வொன்றும்) ஓலைச்சுவடி வடிவில் புத்தகங்கள் ஓலைச்சுவடி போன்ற வடிவமைப்பில் 3 புத்தகங்களை […]

Read more

M.G.R. எழுத்தும் பேச்சும்

M.G.R. எழுத்தும் பேச்சும், தொகுப்பாசிரியர் வே. குமரவேல், முல்லை பதிப்பகம், விலை 250ரூ. எழுத்தும் பேச்சும் எம்.ஜி.ஆர். இன்று வழிபடப்படும் ஓர் அரசியல் பிம்பம். அவரது பேச்சும் எழுத்தும் என்று எதுவும் இன்றைய இளைஞர்கள் அறிய அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுவதில்லை. இந்த இடைவெளியை நிரப்பக்கூடியது எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும் என்கிற இருபாகமாக வந்திருக்கும் தொகுப்பு. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்குவதற்கும் மன்னும் பின்னுமாக நிறைய நேர்காணல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்பாடலில் இருந்திருக்கிறார். வெறுமனே தன்னுடைய திரைபிம்பம் எழுப்பித் தந்த கவர்ச்சியை மட்டும் […]

Read more

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு, சுந்தரபுத்தன், பரிதிபதிப்பகம், விலை 150ரூ. மணம் வீசும் நினைவுகள் கண்ணையும் காதையும் திறந்துவைத்திருக்கிறவர் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன். சென்னையின் மஞ்சள் பூக்கள் நிறைந்த தெருக்களையும் கிராமத்தில் வெல்லம் அடைத்து சுட்டுத்தின்னும் தேங்காய்களையும் ஒரே நேரத்தில் எழுதுகிறவர். நகரவாழ்விலிருந்து கிராம வாழ்வின் ஏக்கங்களை, பெருமூச்சுகளை பதிவு செய்யும் இவரது எழுத்துகளில் ஏராளமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். பூவிற்கும் பெண்மணி முதல் நடிகர் சிவாஜிகணேசன் வரை எத்தனைபேர்? தன் தந்தையாரை என்ன மீசை எப்படி இருக்கே என்று நடிகர் சிவாஜிகணேசன் கூப்பிட்டதாக நினைவுகூரும் இவர் […]

Read more

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள், எஸ். அன்வர், குமுதம் புது(த்)தகம், பக். 151, விலை 150ரூ. உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பல உயர்ந்த பதவிகளில் உலகம் முழுக்க கோலோச்சியவர்கள் தமிழர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூல். கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 11 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தனித்திறன், அவர்களுக்குப் பின்னிருந்த உந்துசக்திகளை தொகுத்து இந்த அரிய நூலை உருவாக்கித்தந்துள்ளார் அன்வர். உலக அரங்கில் தமிழர்களை தலை நிமிரவைத்த தமிழர்களைப் பற்றிய வாழ்க்கைப் பதிவு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more

அசையா சொத்து

அசையா சொத்து, கவிஞர் ஆ. முரகரசு, கவிஞர் பதிப்பகம், பக் 142, விலை 100ரூ. சமூக அக்கறை சார்ந்த கவிதைகளின் தொகுப்பு. சமூக அநீதிகளை சூடான வார்த்தைகளால் குட்டுவது பொருத்தம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —- மாறிச் செல்லும் மாற்றங்கள், ஜி.கே. தமிழ்ச்செல்வி, தாரிணி பதிப்பகம், பக். 132. விலை 100ரூ. மாற்றுத் திறனாளிகளின் கூக்குரல் வெளியே கேட்பதில்லை. அதை கேட்கச் செய்யும் முயற்சியே இந்நூல். மாற்றுத் திறனாளியின் சொந்த அனுபவங்கள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. ஜீவா தன் எழுத்தின் வழியாகவும் மேடை முழக்கத்தின் வழியாகவும் உலக அறிஞர்கள் முதல் உள்ளூர் கவிஞர்கள் வரை வெளிக் கொணர்ந்த கருத்துக்களின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —- தென்பாண்டி தந்த திருவள்ளுவர், டாக்டர் கேசவ சுப்பையா, துவாரகா பதிப்பகம், பக். 228, விலை 120ரூ. வள்ளுவரின் வரலாறோடு தமிழகத்தின் வரலாற்றையும் பேசும் நூல். அவர் வாழ்ந்த பகுதியின் வரலாற்றை கணித்துள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். […]

Read more
1 23 24 25 26 27 63