நம்பிக்கை நாயகன்

நம்பிக்கை நாயகன், ராம.ஹேமமாலினி, சென்னை புக்ஸ், விலை 50ரூ. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற். அவரது வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், அவரைப் பற்றிய பிறரின் கண்ணோட்டங்கள், பேட்டிகள் ஆகியவற்றை பதிவு செய்திருக்கும் நூல்.மோடி மிகப்பெரிய சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். ஆனால் அவற்றை தனக்குச் சாதகமான வாய்ப்புக்காக மாற்றிக்கொண்டது எப்படி, அரசியல் பின்புலமோ செல்வமோ செல்வாக்கோ பாரம்பரியமோ ஏதுமின்றி பிரதம வேட்பாளர் வரை முன்னேறியது எப்படி, ஏழைக் குடும்பத்தில் பிறந்த மோடி, தன்னிகரில்லா தேசியத் தலைவராக உயர்ந்தது எவ்வாறு? இவற்றுக்கு விடை […]

Read more

தம்பலா

தம்பலா, பாரதிவசந்தன், மேன்மை வெளியீடு, விலை 150ரூ. புதுவை எழுத்தாளர் பாரதிவசந்தன் எழுதிய “தம்பலா” சிறுகதைக்கு, ஒரு தனிச்சிறப்பு உண்டு. இக்கதை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. எனவே ‘மூன்று மொழிகளில் வெளிவரும் தமிழின் முதல் சிறுகதை’ என்ற சிறப்பை ‘தம்பலா’ பெற்றுள்ளது. தீண்டாமைக்கும், சாதி வெறிக்கும் எதிராக இக்கதையை எழுதியிருக்கிறார், பாரதி வசந்தன். வேகமான நடை, அருமையான வர்ணனைகள். தற்கால தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சிறந்த கதை இது. நன்றி:தினத்தந்தி, 20/4/2016.   —- தெருவோரங்கள், […]

Read more

ஆ. மாதவன் இலக்கியத் தடம்

ஆ. மாதவன் இலக்கியத் தடம், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, அருள் பதிப்பகம், விலை 200ரூ. படாடோபம், பந்தாக்கள் ஏதுமின்றி, அமைதியும், எளிமையுமான வெளிப்படையான பேச்சும், எந்தத் துறையிலும், சபையிலும் தன்னை வலியப் புகுத்திக்கொள்ளாத தன்னடக்கமும் மிக்கவர் முதுபெரும் எழுத்தாளர் ஆ. மாதவன். அவரின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் ஆகியவை தொடர்பாக அவ்வப்போது அவரது சக எழுத்தாளர்கள், அறிஞர்கள், அறிவார்ந்த வாசகர்கள் அனுப்பிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் பல்வேறு தளங்களில் பதிவாகியுள்ளன. அத்தகைய இலக்கியப் பதிவுகளை செம்மையுறத் தொகுத்தளித்துள்ளார் விஞ்ஞானியும், எழுத்தாளருமான நெல்லை சு. முத்து. […]

Read more

சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம், பூங்கொடி பதிப்பகம், விலை 85ரூ. இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருக்கும் சீதையை அஞ்சநேயர் சந்திப்பது,போரில் ராவணனை ராமர் வீழ்த்துவது, ராமன் சீதையுடன் அயோத்திக்கு திருப்புவது, ராமர் பட்டாபிஷேகம் ஆகிய பகுதிகள் கொண்டது “சுந்தரகாண்டம்” அழகிய தமிழில் அதை எழுதியுள்ளார் சு. தங்கவேலு. நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- தூத்துக்குடி மாநகர வழிகாட்டி, பி. ரகுபதி தியாகராஜன் (எ) சாணக்கியா பி.ரகு, விலை 125ரூ. தூத்துக்குடி மாநகரில் இயங்கி வரும் நிறுவனங்கள், வணிகர்கள், வக்கீல்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தை சுற்றியுள்ள புண்ணிய […]

Read more

காற்றில் வடித்த சிலைகள்

காற்றில் வடித்த சிலைகள், முனைவர் மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 80, விலை 35ரூ. இயற்கையை அன்றாட வாழ்க்கையோடு இணைத்து காணும் முயற்சியே இக்கவிதைத் தொகுப்பு. இயற்கை தரும் இன்பத்தை நூல் முழுதும் அள்ளித்தெளித்திருக்கிறார் கவிதை வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- விழிப்புணர்வு, புதுவை மு. தருமராசன், புதுகைத் தென்றல், பக். 224, விலை 110ரூ. நூலாசிரியர் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் பிரச்னைகளில் இருந்து சமூகப்பிரச்னை வரை பலவற்றையும் அலசியுள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், […]

Read more

மோகனம்

மோகனம், தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன், திருவரசு புத்தக நிலையம், பக். 498, விலை 300ரூ. பேராசிரியர் இரா.மோகனின் முதல் நூல் தொடங்கி அண்மை நூல் வரையிலான படைப்புகள் குறித்த ஆவணமாக இந்நூலைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். பேரா. இரா. மோகனின் படைப்பாளுமை இந்நூல் வழி பதிவு செய்திருப்பது சிறப்பான முயற்சி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. வீரமங்கை ஜான்சிராணியின் வாழ்க்கை மூலம் ஒவ்வொரு பெண்ணும் […]

Read more

காசியும் கங்கையும்

காசியும் கங்கையும், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. இந்திய கலாசாரத்தில், வரலாற்றில், சமய வாழ்வில், இலக்கியத்தில், மக்கள் சிந்தனையில் என அனைத்திலும் இடம் பெற்றுள்ள விஷயங்களில், காசியும் கங்கையும் குறிப்பிடத்தக்கவை. 1950களில் காசியில் கங்கையின் ஒரு கரையில் மக்கள் நீராட, மறுகரையில் நீர்யானைகளும் டால்பின்களும் மூழ்கி எழுந்த காலமாக இருந்தது. உலகின் முதல் நூலாக கருதப்படும் ரிக்வேதத்தில் காசியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காசி, கங்கை பற்றி வேத, புராண, இதிகாச, இலக்கியங்களில் வரும் குறிப்புகள் அனைத்தையும் நூலாசிரியர் தொகுத்து, […]

Read more

இது மடத்துக் குளத்து மீனு

இது மடத்துக் குளத்து மீனு, ஹாஜகான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 215ரூ. மிதக்கும் நினைவுகள் சுயசரிதைக்கு இணையான பொறுப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நினைவலைகள் தொகுப்பு. ஷாஜகான், தான் படித்து ரசித்தது, தான் அவமானப்பட்டது, தான் பாராட்டப்பட்டது அனைத்தையும் எளிமையான நடையில் பதிவு செய்திருக்கிறார். சாலை விபத்துகள், ‘தூல் கா ஃபோல்’ இந்திப் படப் பாடல், கடித இலக்கியம், தாராபுரத்தில் உள்ள சித்தி வீடு, கணக்கு வாத்தியார்… என்று அவரது நினைவலைகளில் மிதக்கும் தகவல்கள் சுவையான டைரிக் குறிப்புகளாகச் சுவையூட்டுகின்றன. -மானா. நன்றி: […]

Read more

பாலகுமாரனின் முகநூல் பக்கம்

பாலகுமாரனின் முகநூல் பக்கம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. முகநூலில் முன் தகவலாக பதிவு செய்த விசயங்களை தொகுத்து இப்புத்தகத்தை ஆக்கியுள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன். “உள்ளே கிடப்பது பற்றி அறிவீரோ? நான் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் எந்த செயலும் செய்யாது. இந்த நிலை எப்படி வரும். உள்ளே உள் மனதை உற்று பார்த்தபடி இரு. முதலில் திணறும். மனம் ஓடும். இழுத்து நிறுத்த வேணும். ஏதோ ஒரு சமயம் மனம் வசப்படும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிரு. இது முக்கியம். மனம் கவனிக்க […]

Read more

புதிய பூமி சூடான சூரியன்

புதிய பூமி சூடான சூரியன், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 60ரூ. பூமி பற்றியும் சூரியன் பற்றியும் அறிவயல் பூர்வமான உண்மைகளை, அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துச் சொன்னதை, நூலாசிரியர் எளிய மொழியில் தந்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- மெரிவின் நூல்களின் மதிப்பும் மாண்பும், மெர்வின் வெளியீடு, பக். 112, விலை 50ரூ. வாழும்போதே சமுதாயத்திற்காக நல்ல நூல்களை எழுதி, அதனை மதிப்பீடும் செய்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more
1 24 25 26 27 28 63