மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை, மு.அப்பாஸ்மந்திரி, நர்மதா வெளியீடு, பக். 320, விலை 300ரூ. தேச விடுதலைக்காக வதைப்பட்ட இந்திய தலைவர்கள், போராட்டங்கள், இந்திய விடுதலை ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்விதமாக எழுதப்பட்ட நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- கற்றபின் நிற்க, வாமு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப் பண்ணை, பக். 272, விலை 200ரூ. உலகம் தழுவிய அமைப்புகளில் பல்வேறு தலைப்புகளில் நூலாசிரியர் பேசிய சொற்பொழிவுன் தொகுப்பு நூல். பல அரிய தகவல்கள் நூலுக்கு சிறப்பு. -இரா. மணிகண்டன். […]

Read more

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?, எஸ். சிதம்பரதாணுப்பிள்ளை, சித்தா மெடிக்கல் லிட்ரேச்சர் ரிசர்ச் சென்டர் வெளியீடு, பக். 158, விலை 100ரூ. பல நூல்களில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளின் சேகரிப்பு என்றாலும் பல கருத்துகள் படிக்க பயனுள்ளவையாக உள்ளன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.     —- துடுப்பும் தூரிகையும், முனைவர் செ. வில்சன், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்ட தொகுப்பு நூல். குறிப்பாக நம் மனதில் குடிகொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெடுக்கும் நூல். […]

Read more

புத்தகங்கள் பார்வைகள்

புத்தகங்கள் பார்வைகள், வெளி ரங்கராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. வாசிப்பின் வழியே விரியும் உலகம் நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என கலை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் பற்றிய வெளி ரங்கராஜனின் கருத்தோட்டங்களை உள்ளடக்கியது இந்தப் புத்தகம். வெளி ரங்கராஜன், கலை இலக்கிய தளத்தில், பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர். தான் வாசித்த புத்தகங்கள் பற்றிய தனது விமர்சனத் தன்மையற்ற எளிய மதிப்பீடுகளை நம் முன் வைக்கிறார். புத்தகங்களைப் பற்றிய அறிமுகமாகவும், வாசிப்பவர்களுக்குத் […]

Read more

தோன்றியது எப்படி?

தோன்றியது எப்படி?, தனலெட்சுமி பதிப்பகம், விலை 375ரூ. காகிதம், பேனாக்கத்தி, காலனி, கத்தரிக்கோல், காக்குலேட்டர் (கணக்கிடும் கருவி), போன்ற எண்ணற்ற பொருட்களை தினந்தோறும் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எப்படி, யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்ற விஷயம் தெரியாது. இந்த நூலில் நாம் பயன்படுத்தும் 137 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை வாண்டு மாமா தருகிறார். இவை வெறும் பொழுதுபோக்காக படிக்கப்படும் விஷயங்கள் அல்ல. அறிவை வளர்க்கும் சுவாரசியமான தகவல்கள். மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —-   பாதச்சுவடுகள், பா. சிவன்பாரதி […]

Read more

பின்நவீனத்துவம்

பின்நவீனத்துவம், தொடக்கநிலையினருக்கு, ஜிம் பவல், தமிழில க. பூரணசந்திரன், அடையாளம், பக். 164, விலை 160ரூ. வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான ஒரு புதிய சிந்தனை முறை பின்நவீனத்துவம். எனினும் இந்தப் பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வதே பலருக்கு மிக மிகச் சிரமமான ஒன்று. பின்நவீனத்துவத்தை எளிய முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் கேள்வி – பதில் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூல் முழுக்க ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மார்க்சியம், கிறிஸ்தவம் அல்லது அறிவியல் என்பதன் உலகப் பொதுவான கொடியின் கீழ் எல்லா உலகமும் ஒரு […]

Read more

நினைவில் நிற்கும் ஆசிரியர்

நினைவில் நிற்கும் ஆசிரியர், டாக்டர் ஆர். நடராஜன், ஆதாரம் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. லட்சியவாதிகளாய் திகழ்ந்த ஆசிரியர்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன், தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருந்த ஆசிரியர்களில் பலர், மிகுந்த அறிவாளிகளாகவும், லட்சியவாதிகளுமாய் திகழ்ந்தனர். தம் ஆசிரியப் பணியில் மிக மிக ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் விளங்கினர். தம்மிடம் பயிலும் மாணவர்களுக்குத் தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது போன்ற அக்கறையுடன் பாடம் நடத்தினர். நூலாசிரியர், அப்படிப்பட்ட ஆசிரிய ரத்தினங்களிடம் பயின்று, இன்று சமூகத்தில் மிக உயரிய நிலையில் இருப்பவர். […]

Read more

பிராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன்

பிராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன், லேண்டு ரெக்கார்ட்ஸ் அண்டு பில்டிங் அப்ரூவல் புரசீஜர்ஸ் பாலோடு இன்வேரியஸ் ஸ்டேட்டஸ் இன் இண்டியா (ஆங்கிலம்), வழக்கறிஞர் ஜி. ஷியாம் சுந்தர், ஸ்ரீ வித்யாதேவி பப்ளிஷர்ஸ், பக். 341, விலை 499ரூ. பத்திரப் பதிவு பற்றிய தெளிவான நூல் நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் பத்திரப்பதிவு நடைமுறைகள், முத்திரைத் தீர்வை, கட்டணம் குறித்த விவரங்கள், எளிதான மொழிநடையில், இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. சென்னையை விட நெருக்கடியான டில்லி, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிகபட்ச அளவில், கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும், தளபரப்பு […]

Read more

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, சந்தியா பதிப்பகம், விலை 160ரூ. பத்து வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளி இறுதி வகுப்பில் இடை நீக்கம் செய்யப்பட்டவர், 42ம் ஆண்டு நடந்த ஆகஸ்டு புரட்சியில் கைதானபோது, திருவாடனை சிறையை உடைத்து ஊர் மக்களால் விடுதலையானவர், சின்ன அண்ணாமலை. அவர் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களைச் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —- ஜெயகாந்தன் உரைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ. ஈரோட்டில் ஜெயகாந்தன் ஆற்றிய […]

Read more

இலக்கிய சிற்பி மீரா

இலக்கிய சிற்பி மீரா, சாகித்ய அகாதெமி, விலை 50ரூ. சாகித்திய அகாதெமியின் சார்பில் வெளிவரும் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் கவிஞர் மீரா குறித்து எழுதப்பட்ட நூல். ‘மீரா கவிதைகள்’ (மரபு கவிதை), ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ (வசன கவிதை), ‘ஊசிகள்’ (அங்கத கவிதை), ‘மூன்றும் ஆறும்’ (கவியரங்க கவிதை), ‘குக்கூ’ (குறுங்கவிதை), ‘வா இந்தப்பக்கம்’ (கட்டுரை) என்பன என்றென்றும் அவரது பெயர் சொல்லும் முத்திரை நூல்கள். கல்லூரி பேராசிரியர், முதல்வர், போராளி, இதழாசிரியர், கவிஞர், கட்டுரை ஆசிரியர், பதிப்பாளர் என்றாற்போல் […]

Read more

வாழ்க்கை ஒப்பந்தம்

வாழ்க்கை ஒப்பந்தம், தந்தை பெரியார், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. தந்தை பெரியார் 1940-41ஆம் ஆண்டுகளில் 3 திருமணங்களில் நிகழ்த்திய அரிய சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். வாழ்க்கை துணை ஒப்பந்தத்திற்கு உறுதிமொழியும் அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்? எனக் கேட்கிறார் தந்தை பெரியார். மேலும் வாழ்க்கை ஒப்பந்தம் பற்றிய அனைத்து கருத்துகளும் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளந்தலைமுறையினர் படித்து உணரவேண்டும். நன்றி: […]

Read more
1 26 27 28 29 30 63