கவிக்கோ கருவூலம்

கவிக்கோ கருவூலம், கவிக்கோ அறக்கட்டளை, சென்னை, விலை 1000ரூ. கவிக்கோ என்று அனைவராலும் அன்புடனும், பெருமிதத்துடனும் அழைக்கப்பட்டவர் கவிஞர் அப்துல் ரகுமான். வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது வெகுமானம் என்ன வேஷடும் என்று கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக என்பேன் என்று கலைஞர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பட்டவர் அவர். அவரது பவள விழாவையொட்டி அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வழங்கிய கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு. தமிழ் கவிதைகளின் உச்சம் தொட்ட கவிக்கோவை தமிழ் ஆர்வலர்கள் வியந்தும், புகழ்ந்தம் […]

Read more

நம்மோடுதான் பேசுகிறார்கள்

நம்மோடுதான் பேசுகிறார்கள், சீனிவாசன் – பாலசுப்ரமணியன், வம்சி புக்ஸ், விலை 200ரூ. மொழி என்பது ஒரு குழுவின் அலங்காரம் மொழியை ஊமையாக்கும் ஓவியம் ஓவியத்தைப் பேச வைக்கும் மொழி -இது எனது ஒரு கவிதை. இந்தக் கவிதைக் கருவுக்குக் காரணமாக இருந்தவை நண்பர் சீனிவாசனின் ஓவியங்கள். அவர் ஒரு சிறந்த ஓவியர். சுதந்திரமான தன் மனதை இன்னும் சுதந்திரமாகக் கித்தானில் பறக்க விடுபவை அவரது வண்ணங்களும், கோடுகளும். ஓவியர் சினிவாசனும் அவரது சக ஓவியரும் நண்பருமான பாலசுப்ரமணியமும் ஓவியம் சார்ந்து உரையாடிப் பகிர்ந்து கொண்ட […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 208, விலை 90ரூ. தாகூருக்கு பாரதியை தெரியுமா? தமிழ்க் கவிதைகளிலும், கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. அய்யர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ. எனும் இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் பெ.சு.மணி. தாகூரின் கவிதைகள், உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும், அவற்றின் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளதால் […]

Read more

விகடன் மேடை

விகடன் மேடை, விகடன் பிரசுரம், விலை 435ரூ. விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, சமூகம், எழுத்து போன்ற துறைகளில் பிரபலமானவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் சுவையாகவும்,சிந்தனைக்க விருந்தாகவும் அமைந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் தொடங்கி டிராபிக் ராமசாமி வரை 40 பேர்களின் பதில் உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பழ. நெடுமாறன், வைகோ, மு.க. ஸ்டாலின், திருமாவளவன், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கவிஞர்கள் வைரமுத்து, வாலி […]

Read more

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம்

ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம், இரா. நரேந்திர குமார், காவ்யா, விலை 250ரூ. ஆண்டாள் கவிதைக்கு ஓர் ஆய்வடங்கல் எமிலி டிக்கின்ஸனின் கவிதை வரிகள் இவை. தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா பிறகு அடைத்துவிடுகிறது கதவை. இந்த வரிகளைப் பற்றிக்கொண்டு ஆண்டாளின் அக உலகத்திற்குள் ஒரு வாசகர் பயணிக்க முடியும். கண்ணன் என்னும் கருந்தெய்வத்துடன் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டு, மற்ற உறவுகளைத் துண்டித்துவிட்ட ஆண்டாளை ஒரு முழுமையான கவிதைப் பரப்பில் வைத்துப் பார்க்கிறது, இரா. நரேந்திரகுமாரின் ஆண்டாள் கடவுளைத் தேடிய […]

Read more

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும்

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பதிவாக எம்.ஜி.ஆரின் எழுத்தையும் பேச்சையும் ஒன்று திரட்டி ஒரு பெரிய ஆவணமாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்தும் நூல். பேரறிஞர் அண்ணா மேல் எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம், கலைவாணர் பற்றிய கருத்து, சினிமாத்துறையை வளர்க்க எம்.ஜி.ஆருக்கு இருந்த எண்ணங்கள், அவரது பொன்மொழிகள், அண்ணாவின் தொண்டனானது ஏன்? காமராஜர் மேல் மரியாதை, சிவாஜி மேல் கொண்டிருந்த அன்பு, சினிமாவில் […]

Read more

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும், உ.வே. சுவாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 194, விலை 100ரூ. நூலாசிரியரின் இருநூல்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியது நான் கண்டதும் கேட்டதும் தொகுப்பு. இதில் தனிப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய வரலாறுகள் சில. சரித்திர சம்பந்தமானவை சில. முள்ளால் எழுதிய ஓலை என்ற கட்டுரை தினமணி பாரதி மலரில் வெளிவந்தது. மருது பாண்டியரின் பரோபகாரச் சிந்தையையும் தம் குடிகளை தாய்போல் காப்பாற்றும் பாங்கையும் இக்கட்டுரை எழுத்தாளுமையுடன் எடுத்துரைக்கிறது. இக்கட்டான […]

Read more

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1)

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1), தொகுப்பாசிரியர் அ. சிதம்பரநாத செட்டியார், விகடன் பிரசுரம், பக். 304, விலை 120ரூ.   To buy this Tamil book online : http://www.nhm.in/shop/1000000021817.html தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன் உள்ளிட்ட 20 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே படித்திருக்கக்கூடிய கதைகள்தாம் என்றாலும், அத்தனை சிறுகதைகளையும் ஒரே புத்தகமாகப் படிக்கின்ற வாய்ப்பு பரவசத்தைத் தருவதாக உள்ளது. எல்லாச் சிறுகதைகளிலும் கதை இருக்கும். ஆனால் […]

Read more

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை, திரட்டித் தொகுத்தவர் ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 327, விலை 260ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024589.html கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தைப் பற்றி பலர் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள், குறிப்புகள் பலவற்றிலிருந்து 140 தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை முதல் நீலகிரி வரை மற்றும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பயணக் குறிப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் தூர தேசப் பிரயாணம் செய்வது அசாத்தியமான காரியம். […]

Read more

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 320, விலை 140ரூ. இந்த நூல், சமயம் சாராத சமூகச் சீர்திருத்த அமைப்புகள் பற்றி முழுமையாக எடுத்துரைத்துள்ளது. தீண்டாமைக் கொடுமை, ஜாதி ஒழிப்பு, பிறப்பு வழி ஜாதி உயர்வு ஆதிக்கம், அவற்றின் அவலங்களை மிகத் துல்லியமாக உணர்த்துகிறது. இந்தியாவின் துன்பங்களான வறுமை, ஜாதி முதலிய இரண்டு குழப்பங்கள், சமத்துவம் குறித்த பாரதியின் அணுகுமுறை ஆகியவற்றை நூல் விளக்குகிறது. பாரதியின் ஓர் அரிய கடிதம் இதில் இடம் பெற்றுள்ளது. பாரதி தம் நோக்கில், பிராமணர், […]

Read more
1 27 28 29 30 31 63