சித்தம் அழகியார்

சித்தம் அழகியார், சுகி.சிவம், கவிதா பப்ளிகேஷன், பக்.184, விலை ரூ.100. சமூக அக்கறையுடன் கூடிய ஆன்மிகக் கருத்துகளை இந்த பூமியில் விதைத்து வரும் சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான நூலாசிரியரின் கருத்துக் குவியலே இந்நூல். மனவிகாரம் உடைய இந்த மனித சமூகத்தில் ‘சித்தம் அழகியவர்கள்‘ நம் கண்களுக்குப் பளிச்சென தெரிவதை தனக்கே உரித்தான பாணியில் 24 தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர். இறையடியார்கள் எந்தப் புகழுக்கும் மயங்காதவர்கள். அவர்கள் ஆணவம் தலைக்காட்டாது அடக்கம், பணிவு, எளிமை, ஒடுக்கம் உள்ளிட்ட பண்புகளின் உறைவிடமாய் திகழ்பவர்கள். அப்படிப்பட்ட உதாரண புருஷர்கள்தான் சித்தம் […]

Read more

வெளிச்சத்தை நோக்கி

வெளிச்சத்தை நோக்கி, உதயை மு.வீரையன், மேன்மை பதிப்பகம், விலை 140ரூ. கல்வி முறை, மக்கள் தொகை, மனிதநேயம், மதுவின் தீமைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இந்த நூலில் புதைந்துள்ளன. ஆசிரியர் உதயை மு. வீரையன் 30 தலைப்புகளில் எழுதி உள்ள தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளன. சமுதாயத்துக்கு தேவையான அனைத்து கருத்துகளும் ஒரு சேர கிடைக்கின்றன. நன்றி: தினத்தந்தி,16/5/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026693.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

சுற்றுச்சூழல் காப்போம் வாங்க

சுற்றுச்சூழல் காப்போம் வாங்க, பொறிஞர் எஸ்.சுந்தரம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.104, விலை 75ரூ. கழிவுப் பொருட்களால் நதிகள் வீணாவதையும், கிரீன் ஹவுஸ் விளைவுகளையும், ஓசோன் அடுக்கு பற்றி மக்கள் கவலைப்படுவதையும், குப்பை கழிவுகள் எங்கே செல்கின்றன… அமில மழை என்றால் என்னவென்பதையும், மின்சார கார்களை ஏன் உபயோகிக்கவில்லை? எரிபொருள் நெருக்கடி, சலவை சோப்புகளால் பூமி மாசுபடுவதையும், பவளப்பாறைகளின் முக்கியத்துவத்தையும், பயனற்றவையிலிருந்து செல்வம் பெறுவது எப்படி? ஒருவருக்கான உணவை 20 பேருக்கு அளிப்பது என்பதையும் படங்களுடன் விவரிக்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

இலக்கியக் கலையும் பாரதி நிலையம்

இலக்கியக் கலையும் பாரதி நிலையம், தொ.மு.சி.ரகுநாதன், வேலா வெளியீட்டகம், பக்.112, விலை85ரூ. ரகுநாதனின் பல படைப்புகள் இன்னும் நுால் வடிவம் பெறாமல் உள்ளன. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் பற்றியும், பாரதி பற்றியும் நுாலாசிரியர் கொண்டிருந்த முக்கிய மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளன. ‘பஞ்சலட்சணம், இலக்கியப் பரம்பரை, வள்ளுவமும் வாழ்வும், பாரதி பாடல்களால் தமிழர் அடையும் பயன், உலக மொழிகளில் மகாகவியின் நுால்கள் பிரசுரம்’ உள்ளிட்ட கட்டுரைகள், இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

அறத்தொடு நிற்றல்

அறத்தொடு நிற்றல், நர்மதா நவநீதம், ஆகுதி பனிக்குடம், பக். 156, விலை 140ரூ. அறத்தொடு நிற்றல்’ என்னும் இந்நுால், 14 கட்டுரைகளின் தொகுப்பாகும். இவை, பல்வேறு கருத்தரங்குகளில் வாசிக்கப் பெற்றவை என்று அறிய முடிகிறது. அழகிய அணிந்துரை, நுாலைப் படிக்கத் துாண்டும் நுழைவாயிலாக அமைந்து உள்ளன. நுாலின், 14 கட்டுரைகளும், பெண்ணியம், கலை, இலக்கியம் என்னும் மூன்று பிரிவினுள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றுள் பெண்ணியம் குறித்த கட்டுரைகளே அதிகம். செவ்வியல் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இக்கட்டுரைகள், அக்காலப் பெண்களின் நிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. தலைவியை […]

Read more

மொழித் தொல்லியல்

மொழித் தொல்லியல், முனைவர் செ.வை.சண்முகம், மணிவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. கடந்த இரண்டாண்டுகளில் செ.வை. சண்முகம் பங்கேற்ற கருத்தரங்குகளில் வாசித்த 9 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘மொழித் தொல்லியல்’ எனும் முதல் கட்டுரையே தொல் மொழி, இலக்கியத் தொல்லியல், இலக்கணத் தொல்லியல், எழுத்தாக்கம் உள்ளிட்ட பல உட்தலைப்புகளின் கீழ் விரிவான ஆய்வுக் கட்டுரையாக உள்ளது. வ.சுப.மா-வின் தொல்காப்பியச் சிந்தனை, சங்க இலக்கியத்தில் சூழலியல், கவிதைக் கருத்தாடல் நோக்கில் திருக்குறள் ஆகிய கட்டுரைகள் சண்முகத்தின் இலக்கிய, மொழியியல் சிந்தனையின் விரிந்த தளத்தை உணர்த்துவதாக உள்ளன. நன்றி: தி […]

Read more

பணத்தின் பயணம்

பணத்தின் பயணம் – பண்ட மாற்று முதல் பிட்காயின் வரை, இரா. மன்னர் மன்னன், விகடன் பிரசுரம், பக்.336; ரூ.260; கற்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலும் பணத்தின் பரிணாம வளர்ச்சியை சொல்லும் நூல் இது. பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறை, தங்கம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தியது, கரன்சிகள் உருவெடுத்த வரலாறு, பல்லவர் காலத்தில் பணம் தொடர்பாக பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய வரலாறு உள்ளிட்டவற்றை தெள்ளத் தெளிவாக நூல் ஆசிரியர் விளக்கியுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். […]

Read more

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை, கோ.உத்திராடம், நாம் தமிழர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.150. இந்நூலில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் தினமணியில் (தமிழ்மணி) வெளி வந்தவை. ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்கள், முதுமக்கள் தாழி, கட்டடங்கள், உறை கிணறுகள், தொன்மை எழுத்துகள் ஆகியவை பண்டையத் தமிழர்கள் நகர, நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கு முக்கியச் சான்றாதாரங்களாக உள்ளன என்று கூறும் நூலாசிரியர், அவற்றுடன் தொடர்புடைய இலக்கியங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, சுவர் ஓவியங்களில் காணப்படும் மக்களின் வாழ்வியல் […]

Read more

அதுவும் இதுவும்

அதுவும் இதுவும், டாக்டர் க.விஜயகார்த்திகேயன் I.A.S., விஜயா பதிப்பகம், பக். 152, விலை 120ரூ. மருத்துவக் கல்வியை முடித்து ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்று, தற்போது கோவை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாளராகவும், பண்பட்ட பேச்சாளராகவும் விளங்குபவர். இவர் ஏற்கெனவே எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்., விடை பாதி எழுதும் பாணி பாதி என்ற இரு நூல்களையும் எளிய தமிழ் நடையில், அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதும் அரசுத் தேர்வாணைய மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூல்களாகப் படைத்து, நல்ல பாராட்டைப் பெற்றவர். இந்நூலில் […]

Read more

தென்றல் வளர்த்த தமிழ்

தென்றல் வளர்த்த தமிழ், கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100ரூ. கவியரசர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்து நடத்திய தென்றல் இதழில், அன்னைத் தமிழின் அருமை குறித்து அக்காலத் தமிழறிஞர்கள் பலரும் எழுதிய கட்டுரைகளை தேடித் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆர்.பி.சங்கரன். செந்தமிழ்க் கட்டுரைகள் செங்கரும்பாய் இனிக்கின்றன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more
1 63 64 65 66 67 88