திறந்த புத்தகம்

  திறந்த புத்தகம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 211, விலை 170ரூ. திறந்த புத்தகம் என்னும் இந்நுால், முகநுாலில் எழுதிய, 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. ‘அப்பாவும் நானும்’ எனும் கட்டுரையில், அப்பா இருக்கும் அறையில் தான், நான் புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டிருப்பேன். ‘என் அறை என்று தான் பேர்; ஆனா, உன் புத்தகங்கள் தான் இருக்கு’ என்று கோபமாக முணுமுணுப்பார் என்று குறிப்பிட்டிருப்பது, இந்நுாலின் ஆசிரியர் பல நுால்களை படிக்கும் வழக்கத்தை கொண்டவர் என்பது தெரிகிறது. நன்றி:தினமலர், 25/3/2018

Read more

சிங்காரவேலவர்

சிங்காரவேலவர், பா.வீரமணி, சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. அறிவியல் சிந்தனை வளர விரும்பியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் வாழ்வும் பணியும் பற்றிய இந்நுால், சிங்காரவேலரின் ஆற்றல்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகிறது. சிங்காரவேலர் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு காரணமாக, ஒவ்வொரு தகவலும் ஆசிரியரால் நுண்ணிய நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நுால் சிங்காரவேலருக்கு இருந்த பேரும் புகழும் பற்றிய எளிய நடையில் கட்டுரையாசிரியர் எழுதிச் செல்கிறார். திரு.வி.க., சிங்காரவேலரின் மாணாக்கராகத் தம்மை வரித்துக் கொண்டதை தம் வாழ்க்கைக் குறிப்பில் குறித்திருப்பதை நுாலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார். […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க.மங்கையர்க்கரசி, லாவண்யா பதிப்பகம், பக். 208, விலை 140ரூ. இந்த நுாலை எழுதியுள்ள தமிழ் பேராசிரியர், முனைவர் க.மங்கையர்க்கரசி, அறிவியல் துறையில் பேராசிரியரோ என்று எண்ணத் தோன்றும் வகையில், அறிவியல் கருத்துக்களைச் செறிவான முறையில் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் கூறியுள்ள முறை, கற்போருக்கு ஆர்வத்தைத் தருகிறது. சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள் முதலிய நுால்களில் பொதிந்து கிடக்கும் அறிவியல் கருத்துக்களை, மருத்துவ இயல், மரபியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதவியல், […]

Read more

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, சு.தியோடர் பாஸ்கரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ. மனிதனின் தோழர்கள் இந்தியாவின் நாய் வகைகள் பற்றிய நல்ல அறிமுகம் தரும் நூல் இது. ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி என்கிற தமிழ்நாட்டு வேட்டை நாய்கள் பற்றியும் முதோல், கேரவான், இமாலய மாஸ்டிஃப், இமாலய மேய்ப்பு நாய், கூச்சி, புல்லிகுட்டா, சிந்தி, பக்கர்வால், பட்டி போன்ற பயன்பாட்டு நாய்கள், லாசா ஆப்சோ, திபெத்திய ஸ்பேனியேல், திபெத்திய டெர்ரியர் ஆகிய துணைநாய்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் நாய்கள் வளர்ப்பு பற்றிய […]

Read more

முன்னேற்றம் உங்கள் கைகளில்

முன்னேற்றம் உங்கள் கைகளில், துடுப்பதி ரகுநாதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 125ரூ. மூத்த எழுத்தாளரான இந்நூலாசிரியர் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். கட்டுரைகள், குறுநாவல்களை படைத்துள்ளார். இவரின் ‘மாயமான காப்பகம்’ என்ற நாவல் 2013ல் வெளிவந்து, சிறந்த நாவலாக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தால் தேர்வு செய்து, விருது பெற்றது. வாழ்க்கையில் முன்னேற விரும்புவர்களுக்கு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, ஊக்கத்துடன் செயல்படத் தூண்டும் விஷயங்களை தினமலர் மற்றும் பாக்யா போன்ற பத்திரிகைகளில் இந்நூலாசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள் வாசகர்களின் வரவேற்பை பெற்றன. அவற்றில் சிறப்பான 62 […]

Read more

நான் கண்ட அந்தமான்

நான் கண்ட அந்தமான், நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பயணங்கள் மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன. ஒரேபாதையில் பலர் பயணித்தாலும் ஆளுக்கு ஆள் அனுபவம் வேறுபடும். அந்தவகையில் அந்தமான் தீவுக்குச் சென்று அங்கு தான் பெற்ற அனுபவத்தை, வித்தியாசமான நடையில் பயணக்கட்டுரையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

வெளிச்சத்தை நோக்கி

வெளிச்சத்தை நோக்கி, உதயை மு.வீரையன்,மேன்மை வெளியீடு, பக்.160, விலை ரூ.140. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பார்வையுடன் நம்நாட்டிலும், உலக அளவிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து நூலாசிரியர் எழுதிய 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்கிற பெயரில் மக்களை வெளியேற்றுவது, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, பெட்ரோல் விலையை அதிகப்படுத்திக் கொண்டே போவது, நிலம் கையகப்படுத்தும் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட பல […]

Read more

பாரதி  யார்?

பாரதி  யார்?, தொகுப்பாசிரியர்: டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.320, விலை ரூ.80. பாரதி – யார்? என்ற இந்தப் புத்தகம் ஓர் அரிய புத்தகம் என்றால் அது மிகையே அல்ல. பாரதி பற்றி அவருடன் மிக நெருக்கமாகப் பழகியவர்கள் முதல், அவருடைய சம காலத்தவர், பிற்கால அறிஞர்கள், நண்பர்கள், பாரதி அன்பர்கள், மகாகவி பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பாரதியை நேரில் அறிந்தவர்களின் கூற்றுகளும், அவரது எழுத்து வாயிலாக தரிசித்தோரின் உணர்ச்சியும் எழுச்சியும் அளிக்கத் தக்க […]

Read more

சட்டத்தால் யுத்தம் செய்

சட்டத்தால் யுத்தம் செய்,  நீதிபதி கே.சந்துரு, விகடன் பிரசுரம், பக்.167, விலை ரூ.115. ஜனநாயக நாட்டின் முக்கிய அங்கமாக நீதிமன்றங்கள் விளங்குகின்றன. அந்த நீதிமன்றங்களின் கதவுகளை தங்கள் தரப்பு நியாயங்களுக்காகத் தட்டி போராடி வென்ற பெண்களின் வழக்குகள் குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த வழக்குகளைத் தொடுத்த பெண்களின் முயற்சி மற்றும் அவர்கள் தொடர்ந்த வழக்கின் மூலம் கிடைத்த தீர்ப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆணாதிக்கச் சிந்தனை பரவிக் கிடக்கும் இந்த சமூகச் சூழலில் உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தொடங்கி, விளிம்பு நிலையில் […]

Read more

கல்கியின் யுகப்புரட்சி

கல்கியின் யுகப்புரட்சி, வானதி பதிப்பகம், விலை 140ரூ. “கல்கி” பத்திரிகையை 1942-ம் ஆண்டில் கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தியும், அவர் நண்பர் டி.சதாசிவமும் தொடங்கினார்கள். அதற்குமுன், “ஆனந்த விகடன்” பத்திரிகையின் பொறுப்பாசிரியராக “கல்கி” பணியாற்றினார். அப்போது, ஆனந்த விகடனில் அவர் எழுதிய பல கட்டுரைகள் இதுவரை நூல் வடிவம் பெறாமல் இருந்தன. அவற்றை “யுகப்புரட்சி” என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் இப்போது புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. புன்சிரிப்புடன் வாசகர்களைப் படிக்கச் செய்வது கல்கியின் பாணி. அந்த பாணியை […]

Read more
1 64 65 66 67 68 88